என் மலர்
செய்திகள்

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்
மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். 24-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார் ரஷ்போர்டு. இதனால் முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூலுக்கு ஓன்கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. மான்செஸ்டர் யுனைடெட் வீரர் எரிக் பெய்லி பந்தை தடுக்க முயற்சிக்கும்போது அது அவர்களது கோல் எல்லைக்குள் சென்றது.
அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் புள்ளிகள் பட்டியலில் 65 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி 78 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. #EPL #MUFC #LFC

Next Story