search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயாங்க் அகர்வால் தற்போது வரிசையில் நிற்கிறார்- எம்எஸ்கே பிரசாத்
    X

    மயாங்க் அகர்வால் தற்போது வரிசையில் நிற்கிறார்- எம்எஸ்கே பிரசாத்

    உள்ளூர் சீசனில் 2141 ரன்கள் குவித்து சாதனைப் புரிந்த கர்நாடகா வீரர் இந்திய அணிக்கான தேர்வு வரிசையில் நிற்கிறார் என தலைமை தேர்வாளர் கூறியுள்ளார்.
    ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் தொடர்களில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருப்பார்கள். இந்த வருடத்திற்கான ரஞ்சி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் கர்நாடகா அணியின் மயாங்க் அகர்வால். ஒரே சீசனில் 2000 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற புகழைப் பெற்றுள்ளார்.

    இலங்கையில் நடைபெற இருக்கும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 27 வயதாகும் மயாங்க் அகர்வாலுக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

    இந்நிலையில், இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வரிசையில் மயாங்க் அகர்வால் நிற்கிறார் என்று தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

    இதுகுறித்து மயாங்க் அகர்வால் கூறுகையில் ‘‘எங்களுடைய தேர்வு நடைமுறையில் நாங்கள் ஒரு முறையை பின்தொடர்கிறோம். ஒவ்வொரு தேசிய போட்டியாளர்களும் வரிசையில் உள்ளார்கள். எந்தவொரு வீரரும் ஜம்ப் செய்து முன்னாள் வர முடியும் என்று நாங்கள் நம்பவில்லை.



    மயாங்க் அகர்வால் சிறந்த இளம் வீரர். நான் அவரிடம் தேர்வு குறித்து விளக்கியதை அவர் புரிந்து கொண்டுள்ளார். அவர் என்னிடம், நீங்கள் ஒரு புள்ளியில் உள்ளீர்கள். நான் அவசரப்படவில்லை என்றார்.

    தென்ஆப்பிரிக்கா சென்றது நம்முடைய சிறந்த அணி. டெஸ்ட் தொடரில் கடும் சவால் கொடுத்தோம். விராட் கோலி மற்றும் அணி நிர்வாகத்தின் செயல்பாட்டை பாரட்ட வேண்டும். விராட் கோலி அணி முன்னின்று வழி நடத்திச் சென்றது சிறப்பான விஷயம்’’ என்றார்.
    Next Story
    ×