என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் டிரா, அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
    X

    லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் டிரா, அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி

    லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் டிரா செய்த நிலையில், அட்லெடிகோ டி மாட்ரிட் வெற்றி பெற்றுள்ளது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பார்சிலோனா, 14-வது இடத்தில் இருந்த எஸ்பான்யல் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்தது. மழைக்கிடையே இரு அணி வீரர்களும் விளையாடினார்கள்.

    முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களுக்கு சில வாய்ப்புகள் கிடைத்தாலும், அது கோலாக மாறவில்லை. இதனால் முதல் பாதி நேரம் கோலின்றி முடிவடைந்தது.

    2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 66-வது நிமிடத்தில் எஸ்பான்யல் அணியின் ஜெரார்டு முதல் கோலை பதிவு செய்தார். பின்னர் பார்சிலோனா அணி கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் பிக்காய் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

    மற்றொரு ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் லெவான்டே  அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் லெவான்டே அணியின் பொயாடேங் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் 1-1 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது.



    2-வது பாதி நேர ஆட்டத்தில் நீண்ட நேரமாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 81-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ கோல் அடித்தார். ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் ரியல் மாட்ரிட் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 89-வது நிமிடத்தில் லெவான்டே அணியின் பாஸ்சினி கோல் அடிக்க 2-2 என போட்டி டிராவில் முடிந்தது.

    அட்லெடிகோ மாட்ரிட் அணி வாலன்சியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 1-0 என அட்லெடிகோ டி மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அட்லெடிகோ 3 புள்ளிகள் பெற்று 49 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.



    பார்சிலோனா டிரா செய்ததால் 2 புள்ளிகளை இழந்து 58 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் 16 போட்டிகள் உள்ளன. பார்சிலோனா - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகளுக்கு இடையே 9 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் பார்சிலோனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சீசனில் தோல்வியே சந்திக்காக ஒரே அணி என்ற பெருமையுடன் வலம் வருகிறது பார்சிலோனா. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் 21 போட்டிகளில் விளையாடி 39 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் ஏறக்குறைய சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை இழந்துள்ளது. #Laliga #Barcelona #realmadrid
    Next Story
    ×