என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை
    X

    ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை

    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:
     
    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோகித் 264 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைத்தவிர டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் ஒரே இன்னிங்சில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

    இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரோகித் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் 10 கிக்ஸர்களுடன் சதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் சதமடித்து டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை டேவிட் மில்லருடன் பகிர்ந்து கொண்டார். தென்னாப்ரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.

    இந்த போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன்மூலம் 65 சிக்ஸர்களுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.



    ரோகித் சர்மாவை தொடர்ந்து டி வில்லியர்ஸ் 63 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×