என் மலர்
செய்திகள்

அதிக சிக்சர் அடித்து சாதனை: ரெய்னாவை முந்தினார் ரோகித்சர்மா
நியூசிலாந்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் ரோகித்சர்மா 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ரெய்னாவை முந்தி அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித்சர்மா. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று அவர் 4 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ரெய்னாவை முந்தி அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
20 ஓவரின் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து ரோகித்சர்மா 268 சிக்சர்கள் (257 போட்டி) அடித்துள்ளார். ரெய்னா 259 ஆட்டத்தில் 265 சிக்சர்கள் அடித்துள்ளார்.

சர்வதேச வீரர்களில் ரோகிசர்மா 7-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்) 772 சிக்சர்களுடன் (309 ஆட்டம்) முதல் இடத்திலும், போல்லார்ட் (வெஸ்ட்இண்டீஸ்) 490 சிக்சர்களுடன் (387) 2-வது இடத்திலும், மேக்குல்லம் (நியூசிலாந்து) 399 சிக்சர்களுடன் (297) 3-வது இடத்திலும், சுமித் (வெஸ்ட்இண்டீஸ்) 347 சிக்சர்களுடன் (306) 4-வது இடத்திலும், வார்னர் (ஆஸ்திரேலியா) 314 சிக்சர்களுடன் (238) 5-வது இடத்திலும், வாட்சன் (ஆஸ்திரேலியா) 299 சிக்சர்களுடன் (238) 6-வது இடத்திலும் உள்ளனர்.
Next Story