என் மலர்
செய்திகள்

ரஞ்சி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் ரகானே- நாளை ஒடிசாவுடன் மோதல்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இடம் கிடைக்காததால் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார் ரகானே.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம்பிடித்திருந்தார்.
இந்த தொடர் முடிவடைந்த நிலையில் நாளை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம்பெறவில்லை. இதனால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்தார்.

மும்பை அணி நாளை ஒடிசாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி புவனேஸ்வரில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரகானே இன்று புவனேஸ்வர் புறப்பட்டார். அவர் அணியுடன் இணைந்து நாளை போட்டியில் பங்கேற்க இருக்கிறார். டி20 அணியில் இடம்பிடித்துள்ள ஷ்ரேயாஸ் அய்யர் மும்பை அணியில் இருந்து விலகியுள்ளார்.

Next Story