என் மலர்

  செய்திகள்

  பிக் பாஷ் லீக்: பாகிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்
  X

  பிக் பாஷ் லீக்: பாகிஸ்தான் இளம் சுழற்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது பிரிஸ்பேன் ஹீட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இடம்பிடித்துள்ள பிரிஸ்பேன் ஹீட் அணி பாகிஸ்தானின் சதாப் கானை ஒப்பந்தம் செய்துள்ளது.
  பாகிஸ்தான் நாட்டின் இளம் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான். கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

  18 வயதே ஆகும் சதாப் கான் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் டரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 6 போட்டிகளில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இவரது திறமையை பார்த்து பிரிஸ்பேன் ஹீட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வருட இறுதியில் தொடங்கும் பிக் பாஷ் தொடரில் சதாப் கான் விளையாட இருக்கிறார்.
  Next Story
  ×