என் மலர்

  செய்திகள்

  கான்படரேசன் கோப்பை கால்பந்து: சிலியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
  X

  கான்படரேசன் கோப்பை கால்பந்து: சிலியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிபா கான்படரேசன் கோப்பை இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
  செயின்ட் பீட்டர்ஸ் பர்க்:

  சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 10-வது கான்படரேசன் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் ரஷியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிலி, மெக்சிகோ, நியூசிலாந்து, போர்ச்சுக்கல், கேமரூன் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன.

  ‘லீக்’ முடிவில் போர்ச்சுக்கல், சிலி, ஜெர்மனி, மெக்சிகோ ஆகியவை அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி முடிவில் போர்ச்சுக்கல், மெக்சிகோ வெளியேறின.  நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனி-சிலி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லார்ஸ் ஸ்டின்டில் கோல் அடித்தார். இறுதி வரை சிலியால் பதில் கோல் அடிக்க இயலவில்லை.

  ஜெர்மனி முதல் முறையாக கான்படரேசன் கோப்பையை வென்றது. பிரேசில் அதிகபட்சமாக 4 முறையும், பிரான்ஸ் 2 தடவையும் பட்டம் பெற்றுள்ளன. அர்ஜென்டினா, மெக்சிகோ, டென்மார்க் தலா 1 முறை வென்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.

  முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.
  Next Story
  ×