என் மலர்

  செய்திகள்

  வெற்றி கொண்டாட்டத்தில் ரியல்மாட்ரிட் கிளப் வீரர்கள்.
  X
  வெற்றி கொண்டாட்டத்தில் ரியல்மாட்ரிட் கிளப் வீரர்கள்.

  லாலிகா கால்பந்து: 33-வது முறையாக பட்டம் வென்றது ரியல்மாட்ரிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லாலிகா கால்பந்து போட்டியின் புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்த நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய ரியல்மாட்ரிட் அணி தனது கடைசி லீக்கில் மலாகாவுடன் மோதியது. இதில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை வீழ்த்தியது.
  ரோசாலிடா :

  லா லிகா, ஸ்பெயின் நாட்டில் புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டியாகும். இந்த சீசனில் (2016-17) மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும்.

  புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்த நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய ரியல்மாட்ரிட் அணி நேற்று முன்தினம் இரவு தனது கடைசி லீக்கில் மலாகாவுடன் மோதியது. இதில் டிரா செய்தாலே பட்டத்தை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் ஆடிய ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை வீழ்த்தியது.

  கிறிஸ்டியானா ரொனால்டோ (2-வது நிமிடம்), கரிம் பென்ஜிமா (55-வது நிமிடம்) ரியல் மாட்ரிட் அணியில் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினர். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் எபார் கிளப்பை தோற்கடித்தது. லீக் சுற்று முடிவில் ரியல்மாட்ரிட் அணி 38 ஆட்டங்களில் 29 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று மொத்தம் 93 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


  ரியல்மாட்ரிட் கிளப்பின் தலைமை பயிற்சியாளர் ஜிடேனை தூக்கிப்போட்டு மகிழும் வீரர்கள்.

  அந்த அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த பட்டத்தை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் ரியல்மாட்ரிட் அணி லா லிகா பட்டத்தை சுவைப்பது இது 33-வது முறையாகும். தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ரியல் மாட்ரிட் அணி கோல் போட்டது.

  இதன் மூலம் ஒரு சீசனில் எல்லா ஆட்டங்களிலும் கோல் அடித்த முதல் அணி என்ற சிறப்பு அந்த அணிக்கு கிடைத்தது. பார்சிலோனா 38 ஆட்டங்களில் 28 வெற்றி, 6 டிரா, 4 தோல்வி என்று 90 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜிடேன் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது கால்பந்து விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் இது. இங்கு எழுந்து நின்று நடனம் ஆட வேண்டும் போல் இருக்கிறது’ என்றார்.

  வெற்றியை கொண்டாடும் விதமாக ரியல்மாட்ரிட் கிளப் வீரர்கள் திறந்தபஸ்சில் நகரில் வெற்றி உலா வந்தனர். ரியல்மாட்ரிட் அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிக்கான போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் இறுதி ஆட்டம் வருகிற 3-ந்தேதி கார்டிப்பில் வருகிறது. இதில் இத்தாலியை சேர்ந்த யுவென்டஸ் கிளப்புடன் மோத உள்ளது.

  Next Story
  ×