என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!
    • அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையே வியப்பாக பார்த்த காலம் ஒன்றுண்டு. பெண்கள் கார் ஓட்டுவது என்பதே பெரும் சாதனையாக கருதப்பட்ட நேரத்தில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆகாய விமானத்தை ஓட்டுவது என்பது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    ஆகாய விமானம் செல்கின்ற சத்தம் கேட்டால் வெளியே ஓடிவந்து, அன்னாந்து பார்த்து கைதட்டி மகிழ்வது மட்டுமே பெண்களுக்கு உரியதாக இருந்த காலம் அது. எங்கோ ஒன்றிரண்டு சீமாட்டிகள் மட்டுமே விமானத்தில் பயணிகளாக பயணம் செய்வதுதான் அரிதாக நிகழும். அப்படிப்பட்ட காலத்தில் நாட்டிற்கே இறக்கை கிடைக்காத சுதந்திரமற்ற நாட்டில் தனக்கு இறக்கைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள் ஒரு பெண்.

    தன் கைகளின் விசையால், ஆகாய விமானத்தை இயக்கிப் பார்க்கின்ற வாய்ப்பை, தன் கட்டுப்பாட்டால் விமானம் ஆகாய வெளியை அளப்பதை, வெண்மேகங்களின் ஊடே பறந்து செல்வதை சாதித்தே தீரவேண்டும் என்று எத்தனையோ பெண்கள் கனவு கண்டிருக்கக் கூடும். ஆனால் எத்தனை பேருக்கு தன் கனவை நனவாக்கும் சூழ்நிலைகள் வாய்க்கின்றது?

    அக்கனவை நனவாக்க சூழ்நிலைகள் வாய்க்கப்பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் சரளா தாக்ரல் என்ற சேலைகட்டிய செம்பாவை.

    உலகில் மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு எது தெரியுமா? உங்கள் பதில் அநேகமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று மேலை நாடுகளாக இருக்கக் கூடும். ஆனால் உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!

    இந்தப் பெருமைக்கு விதை போட்ட பெண்தான் இக்கட்டுரையின் கதாநாயகி. சரளா ஷர்மாவாக இருந்து பின்னர் சரளா தாக்ரல் ஆன சாதனை மங்கை.

    ஆகாயத்தில் பறக்கின்ற விமானங்களின் விமானக் கட்டுப்பாட்டு அறை உட்பட அனைத்தும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும்போது சரளாவிற்கு அக்கட்டுப்பாட்டு அறையில் முதல் மங்கையாக தான் மட்டுமே இருந்து விமானத்தை இயக்கவேண்டும் என்று ஆசை பிறந்தது. அந்த ஆசை பிறக்கும் போது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண்குழந்தையும் இருந்தாள். ஆசையும், ஆர்வமும் வருவதற்கு வயதும், திருமணமும் தடையாகி விடுமா என்ன?

    எங்கும், எப்போதும் பெண்ணின் முன்னேற்றத்திற்கு குடும்பத்தில் இருக்கும் ஆண்களே பெரும்பாலும் தடையாக இருப்பார்கள். ஆனால் சற்றே நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் வண்ணம் சரளாவின் வாழ்வில் மட்டும் அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. திருமணத்திற்குப் பின்னர் சரளாவின் கணவரும், மாமனாரும்தான் சரளா ஒரு விமானியாக சாதனை படைப்பதற்கு காரணமாக, பின்புலமாக இருந்தார்கள் என்பது பெரிதும் மகிழ்ச்சிக்குரியதுதானே! அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இளமையில் திருமணம்: சரளா, 1914 ஆகஸ்ட் 8-ந் தேதி ஆஜ்மீரில் பிறந்தார். 16 வயதிலேயே பி.டி. ஷர்மா என்பவருடன் திருமணம். அப்போதைய பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த இந்தியாவில் லாகூரில் வாழ்ந்தனர் ஷர்மா குடும்பத்தினர். திருமணத்திற்குப் பின் சரளாவும் கணவருடன் வாழ்ந்திட லாகூர் சென்றார். சரளாவின் கணவரான ஷர்மா 'ஏர்மெயில் பைலட் லைசன்ஸ்' பெற்று, கராச்சிக்கும், லாகூருக்கும் இடையில் பறந்த முதல் இந்தியர். அதுமட்டுமின்றி அவரின் குடும்பத்தில் ஒன்பது பேர் விமானிகளாக இருந்தனர். இந்தப் பின்னணிதான் சரளாவும் பைலட்டாக உதவியது எனலாம்.

    குடும்பத்தினரின் ஆதரவும் விமானப் பயிற்சியும்:

    சரளாவின் ஆசைக்கனவாக இருந்த, தான் பைலட்டாக முடியுமா என்ற வினாவிற்கு அழுத்தந்திருத்தமாக முடியும் என்று கூறி அதற்கான முயற்சியை எடுத்தவர்கள் சரளாவின் கணவரான பி.டி. ஷர்மாவும், ஷர்மாவின் தந்தையும்தான். ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'இமாலயா பிளையிங் கம்பெனி' (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயண சேவையை நடத்தி வந்தது. சரளாவை 'பிளையிங் ஸ்கூலில்' சேர்த்துவிட்டவர் அவரின் மாமனார் என்பதை நன்றியோடு ஒரு பேட்டியில் நினைவு கூர்கிறார் சரளா.

    ஷர்மாவின் தந்தை தனது மகனிடம் சரளாவிற்கு விமானப் பயிற்சியைக் கற்றுத் தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிடைக்காததைக் கண்ட அவர், தானே தனது மருமகளை "லாகூர் பிளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' என்ற பயிற்சியாளரிடம் சரளாவிற்கு பயிற்சியளிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

    முதல் பெண் விமானியாக உரிமம் பெறுதல்

    பிளையிங் ஸ்கூலில் பயிற்சி பெற்ற பிறகு தனியே விமானத்தில் பறக்க மிக சீக்கிரமே தயாராகி விட்டார் சரளா. முதன் முதலாக சேலையுடன் ஒரு இந்தியப் பெண் விமானத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் தனியே அமர்ந்து 'ஜிப்சி மோத்' என்ற அந்தக் காலத்து சிறுவகை விமானத்தை இயக்கி சாதனை படைத்தார் என்றால் அது சரளா ஷர்மாதான்.

    தனியே விமானத்தை இயக்கி வெற்றி பெற்ற பின்னர் தொடர் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார் சரளா. முதலில், பைலட்டுக்கான 'A' Type லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் ஆயிரம் மணி நேரம் விண்ணில் விமானத்தை இயக்கியிருக்க வேண்டும்.

    விடா முயற்சியுடன் அந்தப் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் சரளா. ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கி முடித்தப் பின்னர் 1936 -ல் தன்னுடைய 21-வது வயதில் ஏவியேஷன் பைலட் எனப்படும் 'A' Type லைசன்ஸ் எடுத்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார் சரளா ஷர்மா.

    தொடர்ந்து வணிக அளவில் பயணிகள் போக்குவரத்து விமானத்தில் விமானி ஆக வேண்டுமென்றால் 'B' Type லைசன்ஸ் எடுக்க வேண்டும். ஜோத்பூருக்குச் சென்று அதனைப் பெறுவதற்கான முயற்சிகளில் சரளா ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவரை திசை திருப்பும் அதிர்ச்சியைத் தந்தது வாழ்க்கை.

    சோதனைகள்: 1939-ல் நிகழ்ந்த விமான விபத்தில் சரளாவின் கணவர் பி.டி. ஷர்மா மரணமுற்றார். முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் திடீர் சறுக்கல்! 16 வயதில் திருமணம், 21 வயதில் பைலட், 24 வயதில் கணவனை இழந்த கைம்பெண். மகளோடு தனித்து நின்ற சரளா தனக்கு ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொண்டு பயணிகள் விமான பைலட் சான்றிதழ் பெற முயற்சி செய்யும் வேளையில் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. சரளாவின் முயற்சிகளும் தடைபட்டு சான்றிதழுக்கு காத்திருக்க வேண்டி வந்தது.

    ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற வேண்டும் என்பதில்தான் மனிதவாழ்வின் முன்னேற்றம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் வெறுமனே வீட்டில் இருக்காமல் லாகூரில் உள்ள மாயோ கலைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்த சரளா, வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை (Diploma in fine arts) முடித்தார்.

    இந்திய சுதந்திரம் நெருங்க நெருங்க வடமேற்கு இந்தியா முழுவதும் கலவரம் வெடித்தது. லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கணவனோ, வீட்டின் மற்ற ஆண்களோ இறந்துவிடும் சூழலில் வீட்டில் இருக்கும் பெண்கள் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டால் நஞ்சை அருந்தி தன்னை மாய்த்துகொள்வதற்கு பெண்களுக்கு நஞ்சுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக் கொணடு இளம்வயதில் கைம்பெண்ணாக நிற்கும் சரளாவை, இங்கே தங்கியிருக்க வேண்டாம் என்றும் டெல்லிக்கு சென்று விடுமாறும் அறிவுறுத்தினர். வேறுவழியின்றி தன் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்துக்கொண்டு ெரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார் சரளா.

    டெல்லியில் ஓவியராகவும், ஆடை ஆபரண வடிவமைப்பாளராகவும், உற்பத்தியாளராகவும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார் சரளா. மிக விரைவிலேயே ஒரு தொழில் அதிபராக மாறினார். சரளாவின் பெற்றோர் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை பின்பற்றியதால், தன் மகளுக்கு பி.பி. தாக்ரால் என்பவருக்கு 1948-ல் மறுமணம் செய்து வைத்தனர்.

    விமானியாகுதல்: விடுதலை பெற்று நாடு அமைதி கண்டவுடன், தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளாவுக்கு 1948-ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ராஜஸ்தான் ஆல்வார் அரசியின் விமானத்தை இயக்க ஒரு பெண் விமானி தேவை என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அப்பணிக்கு விண்ணப்பித்த சரளா தாக்ரால் அரசியின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

    தொடர்ந்து தான் தொடங்கிய தொழில் மீது கவனம் செலுத்தி புதிய புதிய வடிவங்களில், வண்ணங்களில் ஆடை, ஆபரணம் உற்பத்தி செய்து வந்தார். இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களில் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டும் ஒருவர்.

    முதல் வணிகமுறை பெண்விமானி துர்கா பானர்ஜி

    1966-ம் ஆண்டில், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியன் ஏர்லைன்சின் முதல் பெண் விமானியாக பணியேற்ற துர்கா பானர்ஜி பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு சரளா தாக்ரல் முன்னோடியாக இருந்தார் என்றால் அது மிகையில்லை.

    பெண்களும் விமானியாக முடியும் என்பதற்கு பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த பன்முகத் திறன்வாய்ந்த சரளா தாக்ரல் தன்னுடைய 93-ம் வயதில் மார்ச் 15, 2008-ல் தான் பறக்க ஆசைப்பட்ட விண்ணிற்கு போய்ச் சேர்ந்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • மண்புற்று மாதாவுக்குச் சற்று தள்ளி, கருவறையில், ஆதி மூலவராக, அங்காள பரமேஸ்வரி அம்பாள் திரிசூலத்துடன் காட்சி தருகிறாள்.
    • ஆடி மாதத்திலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், பக்தர்களால் நிரம்பி வழியும்.

    தாயாகிக் கருணை காட்டுபவள் அம்பிகை. குழந்தைகள் நோயுற்றால், இவளே மருத்துவச்சியாகவும் மாறுவாள். இதே தாய், சேயைத் தாங்கிய திருக்கோலத்திலும் எழுந்தருளியிருக்கிறாள். இப்படிப்பட்ட திருக்கோலத்தில்தான், புட்லூர் கர்ப்பவதி அங்காளத்தம்மனாக இவளை தரிசிக்கிறோம்.

    சென்னைக்கு அருகே திருவள்ளூர் செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது புட்லூர். இந்த ஊருக்கு ராமாபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.

    இந்தத் தலத்தில் இருக்கிறது அங்காள பரமேஸ்வரி அம்பிகையின் கோவில். பூங்காவனத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிற இந்த அம்பிகையை தரிசிப்பதற்காகத் கோவிலுக்குள் நுழையும்போதே, மஞ்சள் குங்கும வாசம் நாசியைத் துளைத்து நாடி நரம்பெல்லாம் நிறைகிறது. கோவிலுக்குள் சென்று, பூங்காவனத்தம்மனை அடைந்தால், இன்னுமொரு இன்ப அதிர்ச்சி. அம்மனின் கோலமே வித்தியாசமாக இருக்கிறது.

    சாதாரணமாக, ஆண் தெய்வத் திருமேனிகள் என்றால் சுவாமியின் கோலத்தை மூன்று வகைகளில் தரிசிக்கலாம். நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் ஆகியவையே இவை. பெருமாள் திருமேனிகளில் இம்மூன்று வகைகளையும் காணலாம்.

    பிரதானமாகச் சிவலிங்கத் திருமேனி தவிர, ஒரு சில சிவன் கோவில்களில் கிடந்த கோலச் சிவனாரைக் காணலாம். ஆனால், அம்மன் கோவில்களில், நின்ற திருக்கோல நாயகியையோ அமர்ந்த திருக்கோல நாயகியையோதான் தரிசிக்கக்கூடும். இந்தக் கோவிலில் மட்டுமே அம்மன் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறாள்... அதுவும், நிறைமாத கர்ப்பிணியாக!

    ஆமாம், நிறைமாத கர்ப்பிணி எப்படி ஆயாசத்துடன் படுத்திருப்பாளோ அப்படிப் படுத்திருக்கிறாள். சொல்லப் போனால், பிரசவ காலத்தில், வேதனையுடன், வாய் திறந்து மூச்சு விடுவதுபோலவே மல்லாந்து கிடக்கிறாள். பிரசவ காலம் போல் தோன்றினாலும், பிரசவத்தில் இருக்கும் பெண்ணின் வலியையும் வேதனையையும் தான் வாங்கிக்கொண்டு, 'கவலைப்படாதே, நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறும் பாங்கில் இருக்கிறது அம்பாளின் திருமுகம்.

    உண்மையில் இவள் மண்புற்று மாதா. இவள் எப்படி இங்கே கோவில் கொண்டருளினாள் என்பதைத் தலபுராணம் கூறுகிறது.

    சிவபெருமானும் பார்வதியும் ஒருமுறை பூவுலக உலா வந்தார்களாம். அப்போது அம்பாள் கர்ப்பவதியாம். திருவள்ளூர் பகுதியில் வரும்போது, அம்பாளுக்குத் தாகம் எடுக்க, தண்ணீர் கேட்டாள். சுற்றுமுற்றும் பார்த்தால், சற்று எட்டத்தில் இருக்கும் கூவம் நதி கண்ணில் பட்டது. நீர் எடுப்பதற்காக வேக வேகமாகச் சிவனார் சென்றார். நீர் எடுத்துத் திரும்புவதற்குள், காட்டாற்று வெள்ளம் வந்துவிட, சிவனாரால் உடனடியாகத் திரும்ப முடியவில்லை. ஒரு வழியாக வந்து பார்க்கும்போது, மரத்தடி ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அம்பிகையைப் புற்று மூடியிருந்தது. அடடா என்று கவலையோடு சிவனார் விழிக்க... 'அட, தாண்டவராயரே, காலைத் தூக்கி ஆடத் தெரிகிறது; மனைவிக்கு நீர் கொண்டுவரத் தெரியவில்லையா?' என்று அம்பாள் அசரீரியாகச் சிரித்தாளாம்.

    நீர்த் தாகம், காட்டாற்று வெள்ளம், புற்று மண் என்று எல்லாமே தன்னுடைய விளையாட்டு என்று தெரிவித்த அம்பாள், பூவுலகப் பெண்களின் நலத்தைக் காப்பாற்றவே தான் இவ்வாறு கோவில் கொண்டதாகவும் கூறினாள். இதற்காகவே, நிறைமாத கர்ப்பவதியாகவும் காட்சி தருகிறாள். தென்மேற்கில் தலை வைத்து வடகிழக்கில் கால் நீட்டிக் கிடக்கிறாள்.

    அம்பிகையின் இந்த ஆசையினாலேயே இந்த ஊருக்கும் புட்லூர் என்னும் பெயர் ஏற்பட்டது. 'புட்டக' என்னும் சொல், தெலுங்கு மொழியில் (குழந்தை) 'பிறப்பு' என்பதைக் காட்டும். புட்டக, புட்டின்னதி போன்ற சொற்களின் வழியிலேயே 'புட்லூர்' என்னும் பெயர் தோன்றியுள்ளது.

    மண்புற்று மாதாவுக்குச் சற்று தள்ளி, கருவறையில், ஆதி மூலவராக, அங்காள பரமேஸ்வரி அம்பாள் திரிசூலத்துடன் காட்சி தருகிறாள். இவளுக்கு எலுமிச்சை மாலை சார்த்துவது வெகு சிறப்பு.

    முன்னொரு காலத்தில் இப்பகுதி, நிறைய நந்தவனத் தோட்டங்களுடன் மலர்க்காடாக இருந்தது. ஆகவேதான், பூங்காவனம் என்று பெயர் பெற்றது. அம்மனும், இதனாலேயே பூங்காவனத்தம்மன் என்னும் திருநாமம் கொண்டாள்.

    இந்தத் தலத்தின் தலமரம், வேம்பு. கோவில் வளாகத்திலிருக்கும் இந்த மரத்தின் அடியிலும் சுயம்புப் புற்று ஒன்று உள்ளது. இங்கும் சரி, பிரதானப் புற்றுப் பகுதியிலும் சரி, சில நேரங்களில் பாம்புகளும், மூதாட்டி வடிவமும் பக்தர்கள் சிலரின் கண்களுக்கு புலப்பட்டுள்ளன. அம்பிகையே இவ்வாறு காட்சியளிக்கிறாள் என்பதுதான் உள்ளூர் நம்பிக்கை.

    தாயாகி, செவிலியாகிக் கனிவோடு பாதுகாக்கும் அம்பிகை, தானே கர்ப்பவதியாகிப் பிரசவத்தின் வலியையும் துன்பத்தையும் தாங்கிக் கொள்வதென்பது அம்பாலின் பரம கருணையைக் காட்டுகிறது.

    ஆடி மாதத்திலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், பக்தர்களால் நிரம்பி வழியும். மண்புற்று மாதாவின் திருவடிகளில் எலுமிச்சம்பழத்தை வைத்து வணங்கிவிட்டு, இவளைச் சுற்றி வந்து புடவை முந்தானையை ஏந்தி நிற்கவேண்டும். எலுமிச்சை உருண்டோடி வந்து புடவை முந்தானையில் விழுந்தால், நினைத்த காரியம் யாவும் நிறைவேறும்.

    புற்றுக்குப் பால், அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை, சுமங்கலிகளுக்கு மஞ்சள் வெற்றிலை, வேப்பமரக் கிளையில் ஊஞ்சல் கட்டுதல் என்று விதவிதமான நேர்த்திக் கடன்கள். எல்லாவற்றையும் பூங்காவனத்தம்மா நிறைவேற்றி வைக்கிறாள்.

    குழந்தையின் நலம் காப்பதற்கு எந்தவிதமான பரிசையோ அன்பளிப்பையோ தாய் நாடமாட்டாள். அதே போன்று, எந்தவிதமான ஆடம்பரத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ ஏற்காமல், எலுமிச்சம்பழங்களை மட்டுமே இந்தத் தாயும் காணிக்கையாக ஏற்கிறாள்.

    தாய்க்குத் தாயாகி, தனிப்பெரும் கருணைத் தெய்வமாகி, அன்புக்கு அன்பாகி, அருளின் செறிவாகி ஆனந்தமும் பாதுகாப்பும் நல்குகிற பூங்காவனத்துப் பரமேஸ்வரியை வணங்குவோம், வளம் பெறுவோம்.

    தொடர்புக்கு:-

    sesh2525@gmail.com

    • சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக பயணித்து நம் நாட்டினரிடையே நகமும், சதையும் போல பின்னிப்பிணைந்துள்ளது.
    • நுரையீரலில் நிமோனியா போன்ற நோய்த்தொற்றுக்களும், நுரையீரல் சுருங்கி செயல்பாடு குறைவும் உண்டாகும்.

    "உடம்பார் அழிவின் உயிரார் அழிவர்" என்பது திருமூலரின் வாக்கு. திருமந்திரத்தின் இந்த வரிகள் மருத்துவ உலகிற்கும், ஆரோக்கியத்தை தேடும் முதுமைக்கும் கிடைத்த புதையல் என்றே கூறலாம். உயிருக்கு ஆதாரம் உடல் தான். ஏனெனில் உடல் முதுமையில் படும் துன்பங்கள் ஏராளம். அத்தகைய துன்பத்தின் இறுதியில் தான் இறப்பு எனும் நிலையை அடைகிறது. எனவே முதுமையில் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் முதுமையில் அடுக்கடுக்காய் வரும் உடல் உபாதைகளால் அதிகரித்துக்கொண்டே செல்லும் மருந்து மாத்திரைகளால் சளைத்து போய் விடுவது உடல் மட்டுமல்ல, மனமும் தான். நம் பாட்டிமார்கள் வெற்றிலைப் பெட்டியை தம்முடன் வைத்துக்கொண்டு அவ்வப்போது இடித்து வாயிலிட்டு மென்று அதனை சாரம் விழுங்கிய காலத்தில் இருந்த ஆரோக்கியம், உணவு பொட்டலங்களை வீட்டுக்கு வரவழைத்து உண்ணும் இன்றைய நவீன யுகத்தில் இல்லை. மாத்திரைப் பெட்டியின் அளவு அதிகரிப்பதே தவிர, நோய்கள் கட்டுப்படுவதும் இல்லை, குறைவதும் இல்லை.

    மேலும் வயது மூப்பு பருவத்தில் உண்டாகும் உடல் செல்கள் தேய்மானத்தால் பல்வேறு உறுப்புகளின் செயல்பாடு இயற்கையாகவே குறைந்துவிடுகின்றது. இத்தகைய நிலையில் மூளையில் உள்ள நரம்பு செல்களின் சிதைவினால் ஞாபகமறதி உண்டாகிவிடுகின்றது. இதனால் என்ன செய்ய வேண்டும்? எத்தனை மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பதே பலருக்கு நினைவில் இருப்பது இல்லை. இதில் முக்கியமாக மிகப்பெரிய சிக்கல் உண்டாக்குவது இதய நோயாளிகளுக்குத் தான். இந்த மருந்துகளை மறதியால் எடுக்கத் தவறினால் எதிர்பாராத பின்விளைவுகளை சந்திக்க நேரிடுவதும் முதுமையில் மற்றுமொரு சவால்.

    உடல் செல்கள் தேய்மானம் அடைந்த இந்த முதுமை பருவத்தில் மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல என்று சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே அத்தியாவசிய மருந்துகளுடன், ஒருங்கிணைந்த மருத்துவமாக சித்த மருத்துவ முறைகளை பின்பற்றுவது உபாதைகளை போக்க உதவும்.

    சித்த மருத்துவம் பாட்டி வைத்தியமாக பயணித்து நம் நாட்டினரிடையே நகமும், சதையும் போல பின்னிப்பிணைந்துள்ளது. அத்தகைய பாட்டி வைத்திய முறைகளை, சித்த மருத்துவத்தை முதியோர் நலம் காக்க பயன்படுத்துவது நலனுக்கு வழிவகுக்கும் என்பது உறுதி.

    முதுமையில் சிறுநீரகத்தின் செயல் அலகுகளான நெப்ரான் எனும் சிறுநீரக செல்கள் எண்ணிக்கை இயற்கையாகவே குறைந்துவிடுகிறது. மேலும் சிறுநீரகத்தின் சிறுநீர் வடிகட்டும் திறனும் குறைந்து விடுவதால் வலி நிவாரணி மற்றும் பிற மருந்துகளை ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது, சிறுநீரக பாதிப்பை உண்டாக்கும். இத்தகைய நிலையில் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வெளிமருந்துகள் மிகுந்த பயனளிக்கும்.

    உள் மருந்துகளோடு, வெளியே பயன்படுத்தும் மருந்துகளை சித்த மருத்துவம் 32 வகையாக கூறுகின்றது. சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த 32 வெளி மருந்துகளில் பற்று போடுதல், ஒற்றடம் கொடுத்தல், கட்டு போடுதல், மேற்பூச்சு தைலங்களை பயன்படுத்துதல் நன்மை பயக்கும். அத்துடன் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியான வர்ம சிகிச்சை முறைகளும் வயோதிக பருவத்தில் வலியை குறைக்கும். அவ்வப்போது தொடு வர்ம சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நோயின் குறிகுணங்களை குறைப்பதோடு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முதுமைப் பருவத்தில் உடலுக்கு வயதாகிவிட்டது என்று எண்ணி மனதளவில் சோர்வடையாமல் அன்றாட பணிகளை செவ்வனே செய்து வந்தால் அனைவருமே சூப்பர் ஸ்டார் தான். அவ்வாறின்றி ஒரு இடத்தில் முடங்கி அமர்வதாலோ, படுப்பதாலோ உடலில் உள்ள அங்க உறுப்புகள் செயல்பாடு மேலும் குறைந்து பல்வேறு நோய்நிலைகளுக்கு வித்திடும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. உடல் இயக்கம் இல்லாமல் அசைவற்றது அமர்ந்து விடும் முதியோர்களுக்கு இதயம், நுரையீரல், எலும்பு, தசை, சிறுநீர்ப்பாதை, குடல் சார்ந்த நோய்நிலைகள் உண்டாகி, வாழ்க்கை நலக்குறைவினை உண்டாக்கும்.

    முதுமையில் உடல் இயக்கம் இன்மையால் இதயத்தின் ரத்த வெளியீட்டின் அளவு குறையக்கூடும், ரத்தக்கட்டிகள் உண்டாகக்கூடும். மேலும் நுரையீரலில் நிமோனியா போன்ற நோய்த்தொற்றுக்களும், நுரையீரல் சுருங்கி செயல்பாடு குறைவும் உண்டாகும். அத்துடன் பயன்படுத்தாத எலும்பு மற்றும் தசைகள் சோம்பலுக்கு ஆளாகும். உடல் அசைவு குறைவதால், குடல் அசைவும் குறைந்து மலச்சிக்கல், அசீரணம் ஆகிய தொந்தரவுகள் உண்டாகும். மேலும் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்வதால் அழுத்தப் புண்கள் உண்டாகி பல்வேறு துன்புறத்தலை ஏற்படுத்தும். முதுமைப் பருவம் என்பது மற்றுமொரு குழந்தைப் பருவம் போன்றது. நமது குழந்தைப் பருவத்தில் நமது தாய் தந்தையர்கள் எவ்வாறு நமது கரம் பிடித்து நடக்க பழக்கினார்கள் என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியது அவசியம். முதுமையில் அவர்களின் கரம் பிடித்து நடை பயிற்சி பழக செய்வது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அளவிலா அன்பிற்கும் விதையாகும். அதுவே மேற்கூறிய நோய்நிலைகளில் இருந்து காத்து, அவர்களின் ஆயுட்காலத்தைக் கூட்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    "பித்தம் அடங்கிடின் பேசாதே போய்விடு" என்பது திருமூலர் வாக்கு. இதன் பொருள் பித்த நாடி உடலில் குறைந்துவிட்டால் இறப்பினை எவராலும் தடுக்க முடியாது என்பது தான். ஆகவே, உண்ணும் உணவில் மட்டுமல்லாது, உடல் இயக்கங்களாலும் பித்தத்தை குறையாமல் பாதுகாத்துக் கொள்வது முதுமையில் அவசியம் என்கிறது சித்த மருத்துவம்.

    வயோதிகத்தில் பலரும் சுயகட்டுப்பாட்டினை கொண்டு வருவதும் நோய்நிலைக்கு வழிவகுப்பதாக உள்ளது. நிற்பதற்கும், நடப்பதற்கும், அமர்வதற்கும் கூட பலர் கட்டுப்பாடுடன் செயல்படுவதால் ஆரோக்கியம் அவர்களுக்கு கிட்டாக்கனியாக மாறக்கூடும்.


    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    65 வயதில் கிட்டத்தட்ட 18 முதல் 20 சதவீதம் பேர், இனி நம்மால் முடியாது என்ற சுயகட்டுப்பாட்டை கொண்டுவந்து விடுவதாகவும், 75 வயதில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பேர் தனது செயல்களை செய்ய சுயகட்டுப்பாட்டை கொண்டுவந்து விடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆக, வயோதிகர்கள் முதுமை என்பது ஒரு பருவம் தானே தவிர, நோய் இல்லை என்பதை புரிந்து கொண்டு முடங்கி விடாமல் செயல்பட்டால், என்றும் பதினாறு மார்க்கண்டேயனைப் போல இளமையாய் வாழலாம்.

    அதற்கு சித்த மருத்துவம் கூறும் யோகாசனம் மற்றும் மூச்சுப்பயிற்சிகளை பழகுவது முதுமையில் மிகப்பெரிய புத்துணர்ச்சி தரும். கடினம் இல்லாத எளிமையான ஆசனப் பயிற்சி முறைகளை செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

    சித்த மருத்துவத்தின் மூச்சுப் பயிற்சி பழகுவது வயோதிகப் பருவத்தில் உயிர் மூச்சு நின்றுவிடாமல் தடுத்து நிறுத்தும். கூடுதலாக இது மனதை அமைதிப்படுத்துவதுடன், நல்லதொரு ஓய்விற்கும் வழிவகுக்கும். மாறுபட்ட மனநிலையைத் தணிக்கும்.

    ஆரோக்கியமான அணுகுமுறையை உருவாக்கும் தன்மை மூச்சுப்பயிற்சிக்கு உண்டு. மார்புக்கூடும், விலா எலும்புகளை சுற்றியுள்ள தசைகளும் விறைப்பு தன்மை அடைவதால் வயது முதுமையில் கடின சுவாசம் ஏற்படுகின்றது. இந்நிலையில் மூச்சு பயிற்சி செய்வது சுவாசத்தை சீராக்கும். முதுமையில் மனம் சார்ந்த பல்வேறு நோய்நிலைகளான மனப்பதட்டம், குழப்பம், தூக்கமின்மை ஆகியவற்றுக்கு காரணம் தனிமை உணர்வு தான். பரபரப்பாக உட்கார கூட நேரமில்லாமல், குடுபத்தினருடனும், உற்றார் உறவினருடனும் சிரித்து பேசி பழக கூட நேரமில்லாமல் இருந்த காலங்கள் சற்றே தலைகீழாக திரும்பி அமைதியாக ஒரே இடத்தில் படுக்க செய்து விடும் முதுமையில் உடல் நலன் மட்டுமின்றி மன நலனும் பேணி காக்க வேண்டியவது மிக மிக முக்கியம். மனத்தின் நலனைக் காக்க மருந்துகளை நாடுவதை விட சித்த மருத்துவ பொக்கிஷங்களான யோகாசனம், தியானம் இவற்றை நாடுவது தனிமையிலும் இனிமையை உண்டாக்கும்.

    முதுமையில் மனதில் உண்டாக்கும் குழப்பங்கள், சங்கடங்கள் இவற்றைப் போக்கி மன ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தை நிலைநாட்ட தியானப் பயிற்சி செய்வது நல்லது. இதனை திருமூலர் திருமந்திரத்தில் "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்" என்று உடல் ஆரோக்கியத்திற்கு உடல் நலனைக் காட்டிலும் மன நலம் அவசியம் என்று கூறியுள்ளது சிறப்பு. தியானம் பழகுவதால் அதிகரித்த இரத்த அழுத்தம், இதய துடிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும். கூட்டாக சேர்ந்து இத்தகைய பயிற்சிகளை மேற்கொள்வது கூடுதல் அன்பிற்கும், அரவணைப்புக்கும் வழிவகுக்கும். "இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவரின் குறள். அதாவது துன்பம் வரும் வேளையில் சிரிப்பு பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். சமீப காலங்களில் பிரபலமாகி வரும் சிரிப்பு சிகிச்சையை சாடையாகக் குறிப்பிட்டு அதற்கும் முன்னோடியாக இருந்துள்ளனர் தமிழின் மூத்தகுடிகள். ஆக, முதுமையில் சிரிப்பு சிகிச்சை மேற்கொள்வது உடலுக்கு தேவையான பிராண வாயுவைக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் தரும்.

    கொஞ்சம் நடைபயிற்சி, கொஞ்ச நேரம் மனதிற்கு இதமான இசை, வலிக்கு தைலங்கள், அளவான மாத்திரைகள், அளவுச் சாப்பாடு, அவ்வப்போது யோகாசனப் பயிற்சிகள், திருமூலர் தியானம், இனிமையான நினைவுகள், நல்ல தூக்கம், ஒருங்கிணைந்த மருத்துவம் இவைகளோடு முதுமையில் கைகோர்த்து நடந்தால் ஆரோக்கியம் கைக்கு கிட்டும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.
    • துளசிதாசர், கபீர் தாசர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி.

    ஏழு முக்தி தலங்களில் ஒன்று காசி!

    அயோத்யா, மதுரா, மாயா (ஹரித்வார்), காசி, காஞ்சி, அவந்திகா (உஜ்ஜயினி), துவாரகா ஆகிய ஏழு மோட்சபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வது காசி தலமாகும்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் காலம் காலமாக பக்தர்களால் மிகவும் விரும்பி யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு தலமாகும்.

    இது சென்னையில் இருந்து சுமார் 1156 மைல் தொலைவிலும் லக்னோவில் இருந்து சுமார் 194 மைல் தொலைவிலும் உள்ள தலமாகும்.

    1800 கோவில்கள் கொண்ட திரு நகரம்!

    இதன் புனிதத்தன்மையையும் மகிமையையும் யாராலும் முழுவதுமாக விளக்க முடியாது. 1800 கோவில்கள் உள்ள நகரம் உலகிலேயே காசி ஒன்று தான் என்று சரித்திர ஆசிரியர்கள் வியந்து கூறுகின்றனர்.

    அன்னபூரணி, விசாலாட்சி, துண்டி கணபதி, துர்க்கா, சங்கட விமோசன அனுமான், கால பைரவர், பசுபதிநாதர், பிந்து மாதவர் என மகிமை வாய்ந்த ஆலயங்கள் பல இங்கு உள்ளன. ஆகவே இரவும் பகலுமாக பக்தர்கள் கூட்டத்தை ஆங்காங்கே கண்டு கொண்டே இருக்கலாம்.

    அத்துடன் மிக அதிகமான புண்ணிய நீராடல் கட்டங்கள் கங்கைக் கரை ஓரம் அமைந்திருக்கும் இடமும் காசி தான்.

    காசி ரகசியம்!

    கிருத யுகத்தில் திரிசூல வடிவத்திலும், திரேதாயுகத்தில் சக்கர வடிவத்திலும், துவாபர யுகத்தில் தேர் வடிவத்திலும் கலியுகத்தில் சங்கு வடிவத்திலும் காசி தலம் இருப்பதாக காசி ரகசியம் கூறுகிறது. காசி என்றால் ஒளி தரும் இடம் என்று பொருள்.

    காசிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் பெருமையும் ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய ரகசியம் ஒன்று உண்டு.

    பிரளய காலம் என்று ஒன்று உண்டு. அப்போது மூலப்பொருள் தம் படைப்பு முழுவதையும் சுருக்கி ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது.

    இதுவே மகாகவி கம்பன் ராமாயணத்தில் கடவுள் வாழ்த்தாகக் கூறும் 'உலகம் யாவையும் தாம் உளவாக்கல்" என்பதாகும்.

    பிறகு தக்க தருணம் வரும்போது அது வெளி விடுகிறது. அந்தக் குடுக்கையைப் பத்திரப்படுத்தும் இடம் தான் காசி திருத்தலம்!

    ஆக பேரண்டப் படைப்பில், காசி தான் உற்பத்தி கேந்திரமாகவும் லய கேந்திரமாகவும் ஆகிறது. இப்படிப்பட்ட பெருமை வேறு எந்தத் தலத்திற்கும் கிடையாது.

    இன்னொரு காரணமும் இந்தத் தலத்தின் சிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இதர தலங்களில் நல்வினை செய்தோருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். ஆனால் இந்தத் தலத்திலோ நல்வினை, தீவினை என்றில்லாமல் அனைவருக்கும் முக்தி கிட்டுமாம். இப்படி சனத்குமார சம்கிதை கூறுகிறது.

    காசிக்கு இன்னொரு பெயர் வாரணாசி. அசி நதியையும் வருணை நதியையும் தெற்கு வடக்கு எல்லையாகக் கொண்ட கங்கைக் கரை நகரம் என்பதால் வாரணாசி என்ற பெயர் வந்தது.

    காசி என்றவுடன் கங்கை நதி நம் மனதிலே எழுந்தருளுவாள். அரிய தவம் செய்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். அனைத்துப் பாவங்களையும் போக்கும் புனித நதி கங்கை.

    64 கட்டங்கள்:

    கங்கைக் கரை ஓரமாகச் சென்றால் காசியின் நீளம் சுமார் நான்கு மைல்கள். இந்தப் பகுதியில் 64 நீராடல் கட்டங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை ஐந்து.

    அசி கட்டம் என்பது காசியின் தொடக்கத்தில் இருப்பது. இங்கு தான் அசி நதி கங்கையுடன் கலக்கிறது. தச அசுவமேத கட்டம் என்பது பத்து அசுவமேத யாகங்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைத் தரும் கட்டம்.

    வருணாகட்டம் என்பது வருணா நதி சங்கமம் ஆகும் இடம் ஆகும். அடுத்து பஞ்ச கங்கார கட்டம் என்பது ஐந்து நதிகள் கங்கையுடன் சங்கமம் ஆகும் இடத்தில் அமைந்துள்ள கட்டமாகும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான கட்டம் மணிகர்ணிகா கட்டம். இதுவே பிரதான நீராடல் கட்டமாகும். இந்த ஐந்து கட்டங்களில் நீராடியவர்கள் பித்ரு காரியங்களைச் செய்வது மரபு.

    மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ளது அரிச்சந்திரா காட்! இங்கு தான் சந்திரமதி தன் மகன் லோகிதாசனை எரிக்க வரும்போது அரிச்சந்திரன் வெட்டியானாக வந்து பார்த்த இடம்.

    இந்த நீராடலை முடித்தவுடன் மணிகர்ணிகா கட்டத்திற்கு அருகில் உள்ள தாரகேஸ்வரர் ஆலயம் சென்று சுவாமியைத் தொட்டு பூஜிக்கலாம். கங்கை நீரை எடுத்துக்கொண்டு வந்து அபிஷேகமும் செய்யலாம். மேலே துர்க்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த தரிசனத்தை முடித்த பின்னரே காசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும் என்பது பாரம்பரிய பழக்கமாகும்.

    காசி விசுவநாதர் ஆலயம்

    பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று விஸ்வநாதர். காசி விசுவநாதர் ஆலய பிரகாரம் வழவழப்பான சலவைக் கல்லால் அமைந்துள்ள பிரகாரமாகும். மையத்தில் விஸ்வநாதரின் கர்பக்கிரகம் உள்ளது. கங்கை நீர், பால் ஆகியவற்றால் பக்தர்கள் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்வது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும்.

    இந்த ஆலயத்தை 1767 முதல் 1795 முடிய இந்தூரை ஆண்ட மகாராணி ராணி அகல்யாபாய் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அவர் கோவிலுக்குச் செய்த நற்பணிகள் பற்பல.

    கோவிலில் இருபத்தி இரண்டு மணங்கு தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. ஆகவே இதை தங்க ஆலயம் என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

    அன்னபூரணி தேவி

    தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது. ஆகவே காசியின் அரசியே அன்னபூரணி தான்!

    இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோவிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன.

    பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் நின்று பலகணியின் வழியாகத் தான் தேவியைத் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

    இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக்கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.

    அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீதேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.

    கருவறையில் மூலையில் சிறு பள்ளம் ஒன்றில் விசுவநாதர் கொலுவிருந்து அருளாட்சி செய்கிறார். விசுவநாதர் ஏன் ஓரத்தில் இருக்கிறார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

    ராணி அகல்யாபாய் சிதிலமடைந்திருந்த கோவிலை மீண்டும் கட்ட முனைகையில், முன்பு போலவே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக கோவில் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் விசுவநாதரின் திருவிளையாடல் அப்போது அரங்கேறியது.

    "நான்கு புறமும் வாசல்கள் உள்ள ஒரு மண்டபம் கட்டிக் கற்பூரத்தைப் போடுங்கள். எங்கே அது தானாகவே பற்றி எரிகிறதோ அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று ஒரு அசரீரி எழுந்ததாம். ஆகவே தான் விசுவநாதர் கற்பூரம் தானாகவே பற்றி எரிந்த இடமான ஓர இடத்தில் இருக்கிறார்.

    விசுவேசுவரர் லிங்கம் சிவசக்தி சொரூபமாக இருக்கிறது. லிங்கத்தின் மேல் பாகம் குமிழ் போல இருக்கிறது. அது சிவ வடிவம் என்றும் கீழ்ப்பாகம் சக்தி வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.

    விசாலாட்சி ஆலயம்:

    அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் சிறு சந்து ஒன்றில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று அம்மனுக்கு அபிஷேகம் உண்டு. விஜயதசமி அன்று தங்க விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறாள். கோவிலுக்குள் அம்பு விடும் உற்சவமும் நடைபெறுகிறது.

    கால பைரவர் ஆலயம்:

    காசிக்குச் சென்று திரும்பும் யாத்ரீகர்கள் திரும்பும்போது கால பைரவரைத் தரிசித்து விட்டுத் திரும்புவது மரபு. கால பைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்திற்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. கால பைரவரே காசி தலத்தின் காவல் தெய்வம். இவருக்கு வாகனம் நாய். கலமும் உடுக்கையும் மழுவும் பாசக்கயிறும் ஏந்திய ஈசனின் திரு உருவமாகவே காலபைரவரைக் கருதுகின்றனர். அவர் உள்ள இடத்தில் யமபயம் இல்லை என்பது ஐதீகம்.

    நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அவர் போக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் இதற்காக நம்மை மயில் இறகால் தட்டி ஆசீர்வதிப்பதோடு கையில் காசிக் கயிறு கட்டி விடுகிறார்கள். இந்தக் கயிறு விசேஷமானது. பல ஆண்டுகளுக்கு அறுந்து போகாமல் இருப்பது இது. இது நம்மைக் காக்கும் ஒரு காப்பு என்று கருதப்படுகிறது.

    மகான்கள் தவம் புரியும் இடம்

    துளசிதாசர், கபீர் தாசர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் தவம் புரியும் இடமும் இதுவே.

    கங்கைக் கரையில் ஈசன் தேவியுடன் திரு நடனம் ஆடிய இடம் காசி என்று அறநூல்கள் கூறுகின்றன.

    கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும். இது ஐதீகம்.

    காசி யாத்திரை மேற்கொள்வோம். அம்பிகை மற்றும் ஈசன் அருளைப் பெறுவோம்!.

    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமாகும்.
    • பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்றால் மனித குலம் சுகமாக வாழ முடியும் என்பது புலனாகிறது.

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். எல்லா பாக்கியங்களும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையிலேயே வாழ்கிறார்கள். சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றம் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறது. இது போன்ற சில ஏற்ற இறக்கங்களுக்கு பித்ருக்கள் தோஷமே காரணம். பித்ருக்கள். என்பவர்கள் நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள்.

    ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானமாகும். ஒருவரின் சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம், ஒன்பதாம் அதிபதி பலம் பெற்றால் முன்னோர்களின் நல்லாசி, நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கவுரவத் தொழில், கூட்டுத் தொழில், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும். ஆக பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற்றால் மனித குலம் சுகமாக வாழ முடியும் என்பது புலனாகிறது.

    எளிமையாக பித்ருக்களின் நல்லாசியை பெறுவது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம். பித்ரு தோஷம் என்பது ஒருவருடைய முன்னோர்கள் செய்த அதீத பாவ கர்ம வினைத் தொகுப்புக்களின் மிச்சம், அவர்களின் சந்ததிகளுக்கு பலாபலன்களாக வந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    முன்னோர்கள் செய்த பாவங்கள், அடுத்தடுத்த தலைமுறையில் வாழ்பவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தப் பாவங்கள் அவர்களின் சந்ததிகளுக்கு பாதிப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஜாதகர் தவறுகள் செய்யாமல் இருந்தாலும் பிரச்சனை தேடி வருகிறது என்றால் அது முன்னோர்களின் பாவங்களாகக் கூட இருக்கலாம். பூர்வீகச் சொத்துக்கள் எப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு வருகிறதோ, அதேபோல பூர்வீக சாப பலன்களும் பின் தொடர்ந்து வரும். அதனால் தான் நமது முன்னோர்கள் புண்ணியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை பாவம் சேர்த்து வைக்கக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள். அதே போல் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆன்மா நற்கதி அடைய உரிய வழிபாட்டு முறையை பின்பற்றா தவர்களையும் பித்ரு தோஷம் தாக்கும்.

    ஒருவருடைய சுய ஜாதகத்தில் பித்ருக்கா ரகனான சூரியன் நிலை, ஜாதகருடைய முன்னோர்களின் நிலையினையும் பித்ரு தோஷத்தையும் உணர்த்தும். கால புருஷ 5ம் அதிபதி பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன், கால புருஷ 9-ம் அதிபதி பாக்கியாதிபதி குரு ஆகிய இரண்டும் நல்ல நிலையில் இருந்து லக்ன சுபர் சம்பந்தம் பெறுவது முன்னோர்களின் நல்லாசியை உணர்த்தும் கிரக அமைப்பாகும்.

    சூரியன் நிழல் கிரகமான ராகு கேதுவுடன் இணைந்து இருப்பது, வலுப்பெற்ற சனியின் பார்வையில் சூரியன் இருப்பது, சூரியன் சனி பகவானுடன் இணைந்து இருப்பது, சூரியனும் சந்திரனும் இணைந்து அமாவாசை நிலையில் இருக்கும் பொழுது வலுப்பெற்ற சனியின் தொடர்பு அல்லது ராகுவின் தொடர்பில் இருப்பது, காலபுருஷ பாக்கிய அதிபதியான குரு ராகுவுடன் இணைந்து இருப்பது மேற்கண்ட அமைப்பிற்கு எவ்வித சுபர் தொடர்புமின்றி இருப்பது பித்ரு தோஷ அமைப்புகளாக சொல்லப்படுகின்றன. சுருக்கமாக சுய ஜாதக ரீதியாக 5,9ம் இடம் அதன் அதிபதி குரு, சூரியன் பாதிப்பு பித்ரு தோஷத்தை உணர்த்தக் கூடிய அமைப்புகளாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

    உளவியல் ரீதியாக பாவம் புண்ணியம், பற்றி ஆய்வு செய்தால் வாழும் காலத்தில் உரிய வசதி வாய்ப்புகள் இருந்தும் பெற்றோர்களை, தாத்தா, பாட்டியை வயோதிகர்களை, கஷ்டத்தில் வாழும் உடன் பிறந்தவர்களுக்கு உதவாததும் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும். பாவம், புண்ணியம் என்ற அடிப்படையில் இது போன்ற காரணங்களை முன்வைத்தாலும் ஒருவரது வீட்டில் உள்ளே நுழைந்தவுடன் பித்ரு தோஷம் இருப்பதை உணரமுடியும். வீடு முழுவதும் அலங்கோலமாக குப்பைகள், அழுக்குத் துணிகள், தலைமுடிகள் இறைந்து கிடைப்பது, வீட்டின் சுவர்கள் வெள்ளை அடிக்காமல் இருப்பது, வீட்டில் உள்ள காலண்டர்கள் கிழிக்காமலும் பழைய தேதியை மாற்றாமல் இருந்தாலும் வீட்டில் கிழக்கு பகுதியில் சூரிய ஒளி குறைவாக விழுந்தாலும் அங்கே பித்ரு தோஷம் தலைவிரித்து ஆடுகிறது.

    பரிகாரம் 1

    ஒவ்வொரு ஆன்மாவும் எத்தனையோ பிறவிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அத்தனைப் பிறப்பிலும் பலப்பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறது. அதற்கு பெயரே "சஞ்சித கர்மா " எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது. ஆன்மா இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள இப்பிறவியில் ஆன்மா செய்யும் நல்ல,கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் வாழ்க்கை அமையும். துக்கமும்,சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்மகதியே. இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என அனைத்து மதங்களும் போதிக்கிறது.

    அவரவரின் நல்ல கெட்ட காலங்களுக்கு அவரவர் மட்டுமே பொறுப்பு. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நாம் எப்படி வாழ வேண்டும் என்பது நமது கையிலேயே உள்ளது. ஒருவர் செய்யும் நற் செயல்களையும், வினை செயல்களையும் ஜாதகர் மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறார் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வியல் முறையை ஏற்படுத்திக் கொண்டு வினைப் பதிவை குறைக்க முடியும்.

    பரிகாரம் 2

    விதி, மதி, கதி விதி என்பது லக்னம். ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலையெழுத்தாக அமைகிறது. மதி என்பது சந்திரன். 5-ம்மிடம் எனும் பூர்வ பூண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றி அமைப்பது என்பதை காட்டுகிறது. கதி என்பது சூரியன். 5ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் மதியால் மாற்றியமைக்கப்பட்டதை 9-ம்மிடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது..


    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி


    வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள் கூட மிக பெரிய சாதனை மனிதராக மாற்றுவது இத்தகைய அமைப்பினால்தான். ஆக உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உயிர்ப்புடன் இருக்க ஆதாரமாக இருப்பது விதி (லக்னம்) சூரியன் (கதி), சந்திரன் (மதி) என்பது புலனாகுகிறது.

    விதியை மாற்ற கதி என்ற சூரியனையும் வழிபட வேண்டும். நவகிரகங்களில் சூரியன் முதன்மையான கிரகமாகும். பிரபஞ்ச சக்தி உண்மையா? என நாத்திகம் பேசுபவருக்கு நெத்தியடி கொடுக்கும் கண் கண்ட தெய்வம் சூரியன்.ஒன்பது கிரகங்களில் நம் கண்ணுக்குத் தெளிவாக புலப்படுபவர் சூரியபகவான். மாறாத குணம் உள்ளவர். பேதமின்றி எல்லாருக்கும் ஒளி கொடுப்பவர். ஒளி இல்லாத இடத்தில் கண்ணிருந்தும் காணமுடியாது. நம் கண்ணுக்குள் ஒளியாய் இருந்து நம்மை வழி நடத்திச் செல்பவர். சூரியன் அழியா புகழை கொடுப்பார். சமூக சேவையில் நாட்டத்தை கொடுப்பார். எளிமையாக இருக்க கற்றுக் கொடுப்பார். இரக்க உணர்வை கொடுப்பார். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதால் சூரியனைப் பித்ரு காரகன், தந்தைக்காரன் என்று அழைக்கிறோம்.

    எனவே சூரியனின் ஒளிக்கதிர்கள் வீட்டிற்குள் புகும் படியான வீட்டில் வசிப்பது மிக முக்கியம்.

    மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே உடலில் உள்ள ஆன்மா பயணிக்கும். இந்த சக்ரங்களுக்கு உயிரூட்ட தினமும் சூரிய நமஸ்காரம் எனும் யோகாசனப் பயிற்சியை கடைபிடிக்க வேண்டும். இதனால் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. ரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. உடலில் உள்ள நச்சுப் பொருள்கள் மூச்சு மண்டலத்தில் இருந்து வெளியேற்றுவதால் அக, புற கழிவுகள் நீங்கி ஆன்மா சுத்தமடைகிறது. ஆன்மா சுத்தியடைவதால் முன் வினை கர்மா பாதிக்காது. தினமும் காலையில் சூரியன் உதயமாகும் நேரத்தில் ஆதித்ய இருதயம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

    3. உலவியல் ரீதியான பொதுவான பரிகாரங்கள்.

    விதியின் பிடியிலிருந்து விடுபட தினமும் காலை எழுந்தவுடன் வீடு வாசலை சுத்தம் செய்து வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும். நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த் துக்கொள்ளவேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.தூய மனதுடன் உண்மையான அன்புடன் நடக்க வேண்டும்.

    எதிலும், எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. முதல்நிலை ஒளி கிரகமான (சூரியன், சந்திரன்) ( தந்தை, தாய் கிரகம்) வலுவாக இருப்பது , நிச்சயமாக ஒரு ஜாதகத்தில் நல்ல பலனைத் தரும். எனவே சூரியன், சந்திரன் இணையும் அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

    அமாவாசையன்று பட்சிகள், கால்நடைகள் தானியம், பழங்கள், கீரைகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு அமாவாசைகளின் போதும் அல்லது பெற்றோர்கள் முன்னோர்கள் இறந்த திதி நாட்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. ஒவ்வொரு மாதமும் ஜாதகர் பிறந்த நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று ஆலயங்களை தூய்மை செய்து இறைவனிடம் மனமுருகி சரணடைந்து வழிபட வேண்டும்.

    அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் முன்னோர்களிடம் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக மானசீகமாக பேசி நல்லாசி பெற வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் மூலமே உயர்வானதை அடைய முடியும். மனிதர்களாய் வாழும் காலத்தில் தனது விருப்பங்களை ஆசைகளை அடைய உதவும் ஸ்தானமாகும். மேலே கூறிய வழிபாடு மற்றும் பரிகார முறையை பயன்படுத்தி சுய ஜாதகரீதியான ஒன்பதாமிடத்தை பலப்படுத்தி முன்னோர்களின் நல்லாசியை பெற நல்வாழ்த்துக்கள்.

    • காலை உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா இவை அனைத்துமே நன்மை பயப்பவைதான்.
    • கண்களை அவ்வப்போது கைகளால் பொத்தி 10-20 நிமிடம் ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.

    தூங்கி எழுந்த பிறகு சோர்வு இல்லாமல் இருப்பதற்கு உடல் நலமும், மன நலமும் நன்கு இருக்க வேண்டும் என்பதனை பார்த்தோம். இதனைப் பற்றி மருத்துவ ஆலோசனை கண்டிப்பாய் பெற வேண்டும். அதோடு நாமும் சில முறைகளை கடைபிடித்தால் காலையில் சோர்வினை தடுத்து விடலாம்.

    அநேகருக்கு விழிப்பு வந்த பிறகு கூட சற்று இழுத்து போத்திக் கொண்டு கண்ணை மூடி சிறிது நேர குட்டித் தூக்கம் போட பிடிக்கும். அலாரம் அடித்தால் திரும்ப அதன் தலையில் ஓங்கி அடித்து விட்டு தூங்கும் போது அது சொர்க்கம் தான். எனவே கண் விழித்தவுடன் மின்னல் போல் படுக்கையில் இருந்து குதித்து ஓட வேண்டாம். இது ஒருவரை எளிதில் சோர்வாக்கி விடும். குட்டி தூக்கம் போட்டு எழும் பொழுது காலை சோர்வு மாறி சக்தியோடு இருக்கும். முடியுமா என்ற கேள்வி எழும். இப்படி முயற்சி செய்து பாருங்கள். ஒரு அலாரம் 90 நிமிடங்கள் எழ வேண்டிய நேரத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். அந்த அலாரம் அடித்தவுடன் அதனை நிறுத்தி தூங்கி விடுங்கள். மற்றொரு அலாரம் 90 நிமிடம் கழித்த நன்றாக இருக்கட்டும். இதில் நீங்கள் சுறு சுறுப்புடன் எழுந்து செயல்படுவீர்கள்.

    எழுந்தவுடன் சுறுசுறுப்பிற்காக காபியினை வயிற்றில் கொட்டாதீர்கள். எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துங்கள். சோர்வு உடலில் நீர் சத்து குறைவதன் காரணமாகவும் இருக்கலாம். ஆக காலையில் நீர், இளநீர், கேபின் இல்லாத பானங்கள் இவற்றின் மூலம் நீர் சத்தினை உடலில் கூட்டிக் கொள்ளலாம்.

    யோகா பயிற்சி மிக அவசியம். இதன் மூலம் தசைகளை ஒட்டி இதை செய்ய முடியும். காலையில் 20 நிமிடங்கள் யோகா செய்பவர்களின் உடல் சக்தியும், மூளையின் செயல்பாட்டுத் திறனும் நன்கு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    காலையில் எழுந்து பல் தேய்த்தவுடன் முகத்தினை சாதாரண நீரில் நன்கு அடித்து கழுவுங்கள். இதுவே உடலில் சுறுசுறுப்பினை கூட்டும். எழுந்தவுடன் 'ஷவர்' குளியல் என்பது உடலினை நல்ல சுறுசுறுப்புடனும், ஆரோக்கியத்துடனும் வைக்கும். சில உடல் உபாதைகள் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம்.

    காலை உணவினை தவிர்ப்பது உடலின் சக்தியினை வெகுவாய் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவு எரிசக்தி தருகின்றது. முழு தானியம், புரதம், கொட்டை வகைகள் அதிக இனிப்பு இல்லாத பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமே.

    நேரான சர்க்கரை, இனிப்பு மிகுந்த உணவுகள், அதிகம் சர்க்கரை சேர்த்த காபி போன்ற பானங்களைத் தவிர்த்து ஆப்பிள், காரட், ஆரஞ்சு போன்றவற்றினையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    காபியினை குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். பீப்பாய் போன்ற பெரிய டம்ளரில் காபி வேண்டாம். அடிக்கடி அருந்துவதும் வேண்டாம்.

    வீட்டிற்குள்ளேயே இருந்து காலை முதல் இரவு வரை சிலர் ஓயாது வேலை செய்வார்கள். வீட்டு கதவினைத் தாண்டி கூட வெளியே வர மாட்டார்கள். இவர்கள் காலப் போக்கில் மிகுந்த சோர்வுடனே இருப்பார்கள். வெளியில் இயற்கையோடு, செடி மரங்களோடு, காலை, மாலை என எப்போது வந்தாலும் உடலில் செரமேனின் அளவு கூடும். இது நல்ல தூக்கத்திற்கும், ஆரோக்கியமாக உண்ணுவதற்கும் பெரிதும் உதவும், காலை வேளைகளில் ஜன்னல், ஸ்கீரின் இவற்றினை திறந்து சூரிய ஒளி வீட்டினுள் படும்படியும் செய்து கொள்ளலாம்.

    காலை உடற்பயிற்சி, நடை பயிற்சி, யோகா இவை அனைத்துமே நன்மை பயப்பவைதான்.

    தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் பார்த்தலை நிறுத்தி விட வேண்டும்.

    தினமும் இரவு 9 மணி என்று நேரம் வரையறுத்தால் அதே நேரம் அன்றாடம் தூங்க செல்ல வேண்டும்.

    தூங்கும் இடம் இரைச்சல் இல்லாமல், விளக்குகள் இல்லாமல் காற்றோட்டமாய் அமைதியாய் இருப்பது அவசியம்.

    காலை எழுந்திருப்பதும் குறித்த நேரத்தில் எழ வேண்டும்.

    மன நிம்மதி இல்லாதவர்கள் எப்போதுமே சோர்வுடனே இருப்பார்கள். அதற்கு என்ன முயற்சிகள் செய்து சரி செய்ய முடியுமோஅதனை உடனடியாக செய்து விடுங்கள்.

    எண் சான் உடம்பு தானே, நன்கு கவனித்து விடுவோமே.

    மேலும் சில குறிப்புகளை பார்ப்போமோ!

    சிலர் எழுந்திருக்கும் போதே சோர்வுடன் எழுந்திருக்கின்றேன் என்று கூறுவார்கள்.

    எழுந்திருக்கும் போதே தலைவலியும், வறண்ட தொண்டையும் இருப்பதாக சிலர் கூறுவர். இரவில் கொஞ்சம் குறட்டை ஏற்பட்டதன் காரணமாக இருக்கலாம். இந்த குறட்டை சற்று உறுமல் சத்தம் போல் இருக்கும். 4-5 சதவீதம் ஆண்களுக்கும், 2-3 சதவீதம் பெண்களுக்கும் 30-60 வயதில் ஏற்படலாம். மூக்கின் உள்பாதை சிறிதாகவோ, அடைப்பு இருந்தாலோ இவ்வாறு ஏற்படலாம்.

    பொதுவில் குறட்டைக்கு பல காரணங்கள் உண்டு. சாதாரண சளி பாதிப்பு கூட காற்று பாதையில் தடுப்பு ஏற்படுத்தலாம். பொதுவில் இரவில் வெகு வெகுப்பான நீரில் தூங்கச் செல்வதற்கு முன் குளிப்பது வீக்கத்தினையும், சளி அதிகப்படுவதினையும் தடுக்க உதவும். இது பொதுவான முறை. ஆனால் ஒவ்வொருவரும் மருத்துவ ஆலோசனை பெற்றே எதனையும் பின்பற்ற வேண்டும். முதுகு கீழாக இருக்கும்படி படுப்பவர்கள் பக்கவாட்டில் படுக்கும் போது பாதிப்பு வெகுவாய் குறையும்.

    அதிக எடை, ஹார்மோன் பிரச்சினைகள், அதிக குடி போன்றவைகளும் குறட்டை பாதிப்பிற்கு காரணமாகின்றன.

    தூக்கத்தில் பல் கடித்தல், அதிக உஷ்ணம், அரவில் அதிக மசாலா உணவு, முறையான தூக்க மின்மை, இரவில் காபின் கலந்த பானங்கள், இரவில் நடப்பது, பேசுவது இவையும் காலை உங்களை எழுந்திருக்க முடியாமல் சோர்வாக்கி விடும்.

    தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த உறக்கம் இன்மை:

    இந்த வார்த்தைகளுக்கு மருத்துவ காரணம், மன நல காரணம் என பிரித்துக் கூறலாம். வாழ்வு மிக கடுமையான போராட்டமாக இருக்கும் பொழுது அது எந்த பிரிவிலும் இருக்கலாம். பொருளாதாரம், வேலை, படிப்பு, உடல் நலம், உறவுகள் என எவற்றில் வேண்டுமானாலும் பிரச்சினைகள் வரலாம். அவை மனிதனின் மன நலத்தினை பாதிக்கலாம். இதுவே தூக்கமின்மைக்கு மிக முக்கிய காரணம் ஆகின்றது. ஆகவே மன நல மருத்துவரின் உதவியும் ஒருவருக்கு மிக அவசியம். வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாய் மன நல மருத்துவரை அணுகி பலன் பெறுகின்றனர். அந்த நிலை இங்கும் வர வேண்டும்.

    கண் பிரச்சினை: என்பது அநேகமாக பலருக்கும் ஒரு கால கட்டத்தில் ஏற்படுவது தான். வெள்ளெழுத்து கண்ணாடியானது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பயன்படுத்த வேண்டி இருக்கும். இருப்பினும் கண்களுக்கும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    தொடர்ந்து படிப்பது கம்யூட்டரில் வேலை செய்வது வெகு தூரம் வண்டி ஓட்டுவது அதுவும் இரவில் வெகு நேரம் வண்டி ஓட்டுவது போன்றவை கண்ணுக்கு அதிக உழைப்பாகின்றது. சோர்வாகின்றது. கண்களுக்கும் உடலின் மற்ற உறுப்புகளை போல ஓய்வு தேவைப்படுகின்றது. கண்களை அவ்வப்போது கைகளால் பொத்தி 10-20 நிமிடம் ஓய்வு கொடுப்பது அவசியமாகும்.

    கண்கள் சிவந்து காணப்படுதல்: சிறு சிறு ரத்த குழாய்கள் இருக்கும். அந்த இடத்தில் அலர்ஜி, கிருமி தாக்குதல் ஏற்பட்டால் ரத்த குழாய்கள் விரிவடைகின்றது. கண் சிவந்து காணப்படுகிறது. கண் சோர்வு, இரவு தூக்கம் இன்மை, சிறிது நேர தூக்கம், இவற்றுக்கும் இவ்வாறு ஏற்படலாம். கண்ணில் அடிபட்டு கண்கள் சிவந்து விட்டால் தாமதமின்றி மருத்துவரிடம் செல்லவும். அதிக நேரம் சூரிய ஒளியில் கண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு இன்றி இருப்பதாலும் ஏற்படலாம். மருத்துவர் ஆலோசனை நல்ல தீர்வு தரும்.

    கிட்டப் பார்வை, கண்புரை, வைட்டமின் 'ஏ' சத்து இன்மை என்பதும் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய ஒன்றே. மாலைக்கண் நோய் என்பது சிலருக்கு பிறவியிலேயே இருக்கலாம். தேய்மான குறைபாடு உருவாகலாம். ஆரம்ப காலத்திலேயே எதனையும் கவனிப்பது நல்லது.

    Lazy eye (சோம்பேறி கண்): பொதுவில் இந்த குறைபாட்டில் ஒரு கண்ணில் பார்வை பலவீனம் இருக்கும். மற்றொரு கண் சாதாரணமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர் என எல்லா பிரிவிலும் இருக்கலாம். மிக அரிதாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு இந்த குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்ல பலன் அளிக்கும்.

    இரண்டு கண்களும் ஒரே நேர் கோட்டில் இல்லாமல் இருந்தால் இதனால் பார்வை கோளாறு ஏற்படும். இதற்கு மருத்துவர் சிகிச்சையின் மூலம் பலவீனமான கண்ணினை வலுப்படுத்துவர். அல்லது கூடுதல் சிகிச்சையும் அளிப்பார்.

    சிலருக்கு நிறங்களை சரியாக பார்க்க இயலாது. குறிப்பாக சிகப்பு, பச்சை நிறங்களில் இந்த பிரச்சினை எளிதாய் வெளிப்படும். பலர் இந்த குறைப்பாட்டுடன் பிறக்கின்றனர். சிலருக்கு பிறந்த பின்னர் இந்த குறைபாடு ஏற்படலாம். சிலருக்கு மிக அதிகமான பாதிப்பாகவும் ஏற்படலாம். ஆனால் மருத்துவர் உதவியின் மூலம் சில முன்னேற்றங்களை பெற முடியும்.

    யூவியய்டிஸ்: கண்ணின் ஒரு பிரிவான யூனியானில் அதிக ரத்த குழாய்கள் இருக்கும். யூவியய்டிஸ் என்ற இந்த பெயர் சில நோய்களின் தொகுப்பாக குறிப்பிடப்படுகின்றது. யூவியய்டிஸ் வீக்கத்தினை ஏற்படுத்துவது. இது கண்ணுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    இதன் அறிகுறிகள்:

    மங்களான பார்வை, கண் வலி, கண் சிவப்பு, வெளிச்சம் பார்த்தால் கண்கூசுதல் ஆகியவை ஏற்படலாம். சில உடல்நல பாதிப்பு நோய்களும் யூவியய்டிஸ் பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம்.

    வெற்றெழுத்து என்று மக்களிடையே பேசப்படும் ஒரு குறைபாடு. படிப்பதில் பார்வை குறைபாடு, பொதுவில் 40 வயதினை நெருங்கும் போது புத்தகத்தினை சற்று தள்ளி வைத்து படிப்பது என்று இருந்தாேல கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்து நன்கு படிக்க முடியும்.

    சிறு சிறு துகள்கள் பார்ப்பது போல் நல்ல வெளிச்சம் உள்ள அறையில் அல்லது பளிச்சென்ற வெளிச்சம் வெளியில் இருக்கும் போது தோன்றலாம். அடர்ந்த இருட்டு போல் கண் பக்கவாட்டில் தோன்றலாம். ரெட்டினா பிரச்சினை ஏதுமின்றி இருந்தால் காலம் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சரி செய்ய வேண்டும்.

    வறண்ட கண்கள், கண்களில் ஏதோ உறுத்துவது போல், எரிச்சல் இருக்கலாம்.

    தானாகவே கண்களில் நீர் வடிந்தபடி இருக்கலாம். கிருமி பாதிப்பு, குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் ஏற்படலாம். கண்களில் உயர் அழுத்தம் ரெட்டினா குறைபாடுகள் (உ.ம்) வயது கூடுவதனால் ஏற்படும் தேய்மானம். சர்க்கரை நோயால் கண்ணில் பாதிப்பு போன்றவை. கண் இமைகளில் பாதிப்பு. கான்டாக் லென்ஸ்: இதில் கவன குறைவு இவைகளும் ஏற்படும் பாதிப்புகளை அலட்சியபடுத்தாமல் உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    • அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை.
    • லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

    நலந்தானா...

    நலந்தானா...

    உடலும் உள்ளமும் நலம்தானா...

    இப்படி பாடி அபிநயத்தோடு பத்மினி அம்மா ஆட... சிவாஜி சார் அதற்கு பதிலை நாதஸ்வரம் வழியாக இசைக்க... பாட்டும்... பரதமும்... நடிப்பும்... அடேங்கப்பா... இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி யாராலும் நடிக்க முடியாது! இதை நான்தான் சொல்ல வேண்டும் என்பது அல்ல. நடிப்பு உலகமே சொல்லும். அப்படிப்பட்ட ஒரு பாடலுக்கு என்னாலும் ஆட முடியும் என்று யாராவது போட்டி போட்டால்... எப்படி இருக்கும்?

    ஆனால் நான் சவால் விட்டு ஆடி இருக்கிறேனே. உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் சிவாஜி சார், பத்மினி அம்மா முன்பு ஆடி அசத்தி இருக்கிறேன். அட என்னம்மா நீ... அதெப்படி உன்னால் முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அந்த வயதில் எனக்கு சிவாஜி சார் நடிப்புலக சக்கரவர்த்தி என்றோ, பத்மினி அம்மா நாட்டிய பேரொளி என்றோ தெரியாது.

    நானும் முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்தேன். எனக்கு கற்றுத்தந்தவர் பொன்னி பாலசுப்பிரமணியம். சரி ஏதோ பரதநாட்டியம் தெரியும் என்பதால் தில்லானா மோகனம்பாள் பாட்டுக்கு அவர்போல் ஆடி விட முடியுமா? அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் ஆடினேன்.

    அதாவது "லட்சுமி வந்தாச்சு" என்ற படம். அந்த படத்தில் சிவாஜி சாரும், பத்மினி அம்மாவும்தான் ஜோடி. நான் குழந்தை நட்சத்திரம். கதைப்படி பத்மினி அம்மா கடுமையான சட்டத்திட்டங்களோடு குடும்பத்தில் எல்லோரையும் கட்டுப் பாட்டுடன் வளர்ப்பவர். ஜாலியாக இருப்பது கூட அவருக்கு பிடிக்காது. ஆனால் சிவாஜி சார் நேர் எதிரானவர். எல்லோருடனும் ஜாலியாக இருப்பவர். எல்லாரோடும் ஆடிப்பாடவும் செய்வார்.

    சிவாஜி சாருக்கும், பத்மினி அம்மாவுக்கும் திருமண நாள் வரும். அந்த நாளை கொண்டாட வேண்டும் என்று எல்லோரும் வீட்டின் மொட்டை மாடியில் சென்று ஆள் ஆளுக்கு டான்ஸ் ஆடுவோம். ரேவதியும் உண்டு. அப்போதுதான் நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா... என்ற பாடலுக்கு பரத நாட்டிய உடை அணிந்து நான் ஆடுவேன். நாதசுவரமும் இசைக்கப்படும். சிவாஜி சார் பார்வையாளர் வரிசையில் இருப்பது போல் அங்கு அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டிருப்பார்.

    நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பத்மினி அம்மா கோபத்தோடு அங்கே வருவார். உடனே எல்லோரும் நிசப்தமாகி விடுவோம். இதுதான் காட்சி. சூட்டிங் முடிந்ததும் பத்மினி அம்மா சிரித்து விடுவார். சூப்பர்டா செல்லம் நாங்கள் எங்கள் திறமையெல்லாம் ஒன்று திரட்டி நடித்த பாடல் காட்சி. ஆனால் இந்த வயதில் நீ இவ்வளவு அழகாக ஆடி அசத்தி விட்டாய் என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள்.

    சிவாஜி சாரும் மீனாக்குட்டி... சூப்பர் பின்னிட்டேபோ... என்று பாராட்டினார். அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் அதை இப்போது நினைக்கும் போதும் சந்தோஷத்தில் உடலெல்லாம் புல்லரிக்கிறது. இந்த நிகழ்வுகள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

    எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் இருக்கும் சிலரை பார்த்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நமக்கு உத்வேகம் பிறக்கும். அப்படி எனக்கு உத்வேகம் ஊட்டியது ஸ்ரீதேவி அம்மா. ஏற்கனவே ஸ்ரீதேவி அம்மாவின் அழகை பார்த்து பிரம்மித்து இருப்பதாக தெரிவித்திருந்தேன். சிறு வயதில் எனது எண்ணம் அது.

    அதே மீனா ஹீரோயின் ஆன பிறகு ஸ்ரீதேவியின் நட்பு வட்டாரத்தில் இருந்ததும் மறக்க முடியாத அனுபவம். வயது இடைவெளி அதிகமாக இருந்தாலும் காலப்போக்கில் அவரது நெருங்கிய தோழியாக மாறி விட்டேன். ஸ்ரீதேவி வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் யாரோடும் அதிகமாக பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். ஆனால் வந்தவுடன் தனக்கு என்ன காட்சி என்பதை கேட்டு அதில் நடிப்பதற்கு மட்டும் முயற்சிக்க மாட்டார். அதற்கு முந்தைய காட்சிகள், பின்னர் வரப்போகும் காட்சிகள் எல்லாவற்றையும் கவனமுடன் கேட்டு அறிவார். அதை உள்வாங்கி கொண்டு அதன்பிறகுதான் நடிப்பார். அதனால்தான் எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் அதில் முத்திரை பதிப்பார். அதற்கு உதாரணம் 'மூன்றாம் பிறை' ஒன்று போதாதா?

    அவரைப்பார்த்துதான் ஹீரோயின் ஆன பிறகு திரைத்துறையில் சில விசயங்களை கற்றுக்கொண்டேன். திரைத்துறையை பொறுத்தவரை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.

    கேமிரா முன்பு எப்படி நின்றால் எப்படி தெரியும்? டயலாக்குகளை பேசிக்கொண்டே 'மார்க்' பண்ணியிருக்கும் இடத்தில் போய் நிற்க வேண்டும்.

    நான் மானசீகமாக நேசித்து மகிழ்ந்த அந்த அழகு தேவதை திடீரென்று இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    சிவக்குமார், லட்சுமி அம்மா ஜோடியாக நடித்த படம் "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்". அந்த படத்திலும் நான் குழந்தை நட்சத்திரம். அவர்களுக்கு குழந்தையாக நடித்த என்னை தூக்கி கொஞ்சுவதில் கூட இருவருக்கும் இடையே போட்டி நிலவும். உனக்கு இந்த அங்கிளை பிடிக்குமா? அந்த ஆண்டியை பிடிக்குமா? என்றெல்லாம் கேள்விக்கேட்டு இருவருமே என் மீது அளவுக்கடந்த பாசத்தை காட்டியவர்கள். இருவரும் என்னை தூக்கி வைத்து கொஞ்சிய புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டு சுவரை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.

    அந்த படத்தில் நடித்த போது ஒரு நாள் லட்சுமி அம்மா கையில் மருதாணி வைத்திருந்தது நன்றாக சிவந்து மிகவும் அழகாக இருந்தது. நான் அதையே பார்த்து கொண்டிருந்தேன். அதை கவனித்த லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன். சூட்டிங் முடிந்து விட்டது. எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். ஆனால் லட்சுமி அம்மா என்னை அழைத்து வா கைக்கு மருதாணி போட்டு விடுகிறேன் என்று கூட்டி சென்று என் கைகளுக்கு மருதாணி போட்டுவிட்டுதான் புறப்பட்டு சென்றார்.

    எனது ஆசையை நிறைவேற்றி வைப்பதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தது மட்டுமல்ல முன்னணி கலைஞர்களுக்கு செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்து கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.

    • தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் அமளி, துமளி, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று மட்டுமே பார்க்கப்பட்டாலும் கடைசி நாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 புதிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    அதாவது இந்திய குற்றவியல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

    சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பலர் தப்பி விடுகிறார்கள். இது நடைமுறைக்கு ஒத்து வராத சட்டம் என்று சாதாரண மக்களுக்கும் சட்டங்கள் மீது இருந்து வந்த திருப்தி யற்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சட்ட மசோதாக்கள் பற்றி மத்திய அரசு வக்கீல் ஸ்ரீனிவாசன் விவரித்தார்.

    இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டப் பிரிவுகளின்படிதான் குற்றவியல் வழக்குகள் நடைபெறும். இந்த சட்டத்தின் கீழ்தான் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதாவது எந்த குற்றத்துக்கு எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவது என்பதை இந்திய தண்டனை சட்டம் சொல்கிறது. வழக்குகளை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் விவரிக்கிறது. தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.

    ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்த 3 சட்டங்களும் சுமார் 163 ஆண்டுகளுக்கு முந்தையது.

    இந்திய தண்டனை சட்டம் 1860-ம் ஆண்டிலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1898-ம் ஆண்டிலும், இந்திய சாட்சிய சட்டம் 1872-லும் கொண்டு வரப்பட்டவை.

    அதாவது கிழக்கிந்திய கம்பெனி நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த கால கட்டத்தில் இந்தியா பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள் ஆட்சியில் பல பிரிவுகளாக இருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வசதியாக இந்தியாவில் எந்த மாதிரியான குற்றவியல் சட்டங்களை பொதுவாக வகுப்பது என்று 1834-ம் ஆண்டு லார்டுமெக்காலே தலைமையில் சட்ட கமிஷன் உருவாக்கப்பட்டு அந்த கமிஷன் பரிந்துரைப்படிதான் இந்த 3 சட்டங்களும் உருவாக்கப்பட்டது.

    அந்த கால கட்டத்துக்கு ஏற்றதாகவும், அவர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டிருந்ததால் காலப் போக்கில் அவ்வப்போது சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த சட்டங்களையே பின்பற்றுகிறோம்.

    எல்லா சட்டங்களையும் முழுமையாக எடுக்க முடியாது. ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்வது அவசியமாக இருந்தது. பல வழக்குகளில் நடைமுறை சாத்தியமில்லாத பல பிரிவுகளை கோர்ட்டு தீர்ப்புகளே சுட்டி காட்டியும் உள்ளன. அந்த தீர்ப்புகளை மையமாக வைத்து திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. பல சட்டங்கள் பாராளுமன்றம் மூலம் நீக்கப்பட்டும் உள்ளன.

    இப்போது மிகப்பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து இருப்பதோடு பல மாற்றங்கள் செய்து, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.)

    இந்திய தண்டனை சட்டம் பாரதீய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாகி இருக்கிறது. 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 175 விதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. 8 புதிய விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

    தேச விரோத சட்டம் என்பது சுதந்திரத்துக்காக போராடியவர்கள், அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பயன்படுத்தி அதை கடுமையான குற்றமாக கருதப்பட்டது.

    இப்போது அதை நீக்கி உள்ளனர். அதற்கு பதிலாக பிரிவினை வாதம், தீவிரவாதம், தேச ஒற்றுமையை குலைப்பது, ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்வது, இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை சேர்க்கப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வ தாக, வேலை வாங்கி தருவ தாக, பதவி உயர்வு பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, அடையாளத்தை மாற்றி ஏமாற்று தல் ஆகியவை புதிதாக தண்டனைக்குரிய குற்றங்களாக சேர்க்கப்பட்டு உள்ளன.

    முன்பு கற்பழிப்பு குற்றத்துக்கு 7 ஆண்டுகள் மட்டும் தண்டனை இருந்தது. கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தனி பிரிவு இல்லை. இப்போது அது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. தண்டனையும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் பாதிக்கப்படும் பெண்கள் இளம் பெண்களாகவோ, மைனர் பெண்களாகவோ இருந்தால் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இனம், சாதி, அடிப்படையில் பலர் சேர்ந்து அடித்து கொலை செய்வது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் முதல் குற்றத்தின் தன்மையை பொறுத்து மரண தண்டனை வரை விதிக்கப்படும்.

    வழிப்பறி குற்றங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளது. செயின் பறிப்புகளின் போது பாதிக்கப்படுபவர்கள் கீழே விழுந்து கடுமையான காயங்கள் ஏற்படுவது, உறுப்புகள் செயல் இழந்து போவது, உயிருக்கே ஆபத்து ஏற்படுவதால் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    முன்பெல்லாம் சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. இப்போது இந்த மாதிரி குற்றங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தியவர் கோர்ட்டு அல்லது போலீசில் சரண் அடையாமல் தலைமறைவானால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

    மத துவேசத்துடன் வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் 3 ஆண்டுகள் ஜெயில் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.)

    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 169 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வீட்டில் ஒரு குற்ற சம்பவம் நடந்தால் அந்த சரக போலீஸ் நிலையத்துக்கு சென்றுதான் புகார் செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இனி சம்பந்தப்பட்டவர் அதே மாநிலத்தில் வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க முடியும்.

    அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விவரங்களை உடனுக்குடன் அவரிடம் தெரிவிக்கப் பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை முன்னேற்றம் பற்றிய தகவலை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

    பாலியல் கொடுமையில் பாதிக்கப் பட்ட பெண்களிடம் அவர்களின் வீடு அல்லது தங்கியிருக்கும் இடத்துக்கு மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று வாக்குமூலம் பெற வேண்டும். அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் இருக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் கோர்ட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வாங்கு வதால் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

    கிரிமினல் குற்றங்களில் 90 நாட்க ளுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எளிதில் வெளியே வந்து விட முடியும் என்ற நிலை இருந்தது. இனி குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் காரணத்தை கூறி கோர்ட்டில் மேலும் 90 நாட்கள் கால நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

    குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கி விட வேண்டும். குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தால் 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் தீர்ப்பு வழங்கும் நாட்களை தள்ளிப் போட முடியாது.

    வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிக்கடி வாய்தா வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இனி 2 முறை மட்டுமே வாய்தா வழங்க வேண்டும். அதற்கு மேல் வாய்தா வழங்க நேரிட்டால் அதற்கான காரணத்தை நீதிபதி எழுத்து பூர்வமாக எழுதி வைக்க வேண்டும்.

    முதல் முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தில் 3-ல் ஒரு பகுதியை ஜெயிலில் கழித்ததும் ஜாமீன் போட்டு வெளியே வரலாம்.

    ஆயுள் தண்டனை கைதிகள், மரண தண்டனை கைதிகளை தண்டனையை குறைத்து வெளியே விடக்கூடாது.

    வழக்குகளில் சாட்சி சொல்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்புக்கு மாவட்ட அளவில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் முடிவு செய்ய வேண்டும்.

    குற்ற வழக்குகளில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்று வாரண்டு பிறப்பிக்கப்பட்டும் பிடிக்க முடியாமல் தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தலைமறைவாக இருக்கும் குற்ற வாளிகளை பிடிக்க முடியவில்லை என்றால் வழக்கு விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இல்லாமலும் வழக்கு விசாரணை நடத்தலாம். தண்டனையும் வழங்கலாம்.

    வழக்குள் தொடர்பாக கைப்பற்றப் பட்ட வாகனங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து விட்டு 30 நாட்களுக்கு பிறகு அப்புறப்படுத்தலாம்.

    இந்திய சாட்சியங்கள் சட்டம்

    பாரதீய சட்சிய சட்டம் (பி.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் 5 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக ஒரு விதி உருவாக்கப் பட்டுள்ளது.வழக்குகளின் ஆவணங்கள் உடனுக்குடன் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    இதன் மூலம் ஆவணங்களை மாற்றுதல், திருத்துதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

    எப்.ஐ.ஆர்., வழக்கு டைரி, குற்றப் பத்திரிகை, தீர்ப்பு, பிறப்பிக்கப்பட்ட சம்மன்கள், வாரண்டுகள், நடை முறைப்படுத்தியது, புகார்தாரர் விசாரணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

    சோதனையிடுவது, சொத்துக்கள் பறிமுதல் செய்வதை வீடியோ பதிவு செய்து உடனடியாக மாஜிஸ்தி ரேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் குற்ற சம்பவங்களில் விசாரணைக்கு தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் 90 சதவீதம் தண்டனை பெற்று கொடுப்பது உறுதியாகும். இதற்கான கட்டமைப்பு களை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும்.

    • தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம்.
    • துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும், மன அழுத்தம், துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும்.

    துர்க்கை புகழ் பெற்ற தமிழ்த் தெய்வம். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். தமிழில் வெற்றிக்கு உரியவள் என்பது பொருள்.

    ரஜோகுணம் கொண்ட கொற்றவை வட இந்திய காளியுடன் இணை க்கப்பட்டு மகிஷாசுரமர்த்தினியானாள். பிறகு அவளே துர்க்கை எனவும் அழைக்கப்பட்டாள்.

    துர்க்கம் என்றால் அகழி என்று பொருள். அகழியானது கோட்டை மதிலைப் பகைவர் அணுக முடியாதபடி காவலாக இருப்பது போல் மக்களைத் துன்பம் அணுகாதவாறு காப்பவள் என உணர்த்துவதே துர்க்கையின் வடிவமாகும்.

    துர்க்கையை சோழ மன்னர்கள் தங்களையும் தமது அரண்மனையையும் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்கள் தாம் வணங்கி வந்த துர்க்கையின் சிலையை நிறுவினார்களாம்.

    தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம். இந்த ஆலயம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள்.

    இக்கோவில் ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்றிஇருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.

    சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் வெற்றிக்குத் துணைநிற்கும் துர்க்கையை வணங்கிச் செல்வது பழக்கம்.பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி குலதெய்வமாக இருந்ததுபோல் சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கினாள்.

    பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசியும், ராஜராஜ சோழனுக்கு ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள துர்க்கையின் தொல் வரலாறு முன் சொன்ன வரலாறில் இருந்து மாறுபட்டது.வேத காலத்தில் பார்வதிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்திக்காக இந்த இடத்துக்கு வந்து தவம் இருக்க,அவளுக்காக தேவர்கள் அதனை வனமாக ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவ காமதேனு தன் பெண் பட்டியையும் அனுப்பியது. பார்வதி நின்றவாறே ஈசனுக்காய் தவம் செய்தாள். சிவன் அவள் வேண்டுகோளை ஏற்று சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கே துர்கையாக இருந்து மக்களின் துயர்களைத் துடைக்க கூறினார்.

    இங்கு நீ தவம் செய்ததினால் தவவலிமை பெற்ற பூமி ஆனது. இது தெய்வ பூமியும் ஆனது. ராமரும் இங்கு வந்து புனித தீர்த்தத்தை ஏற்படுத்தி என்னையும் பூசை செய்தார். இங்கு உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். மக்களுக்கு அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைவாய் எனக்கூறினார். அது முதல் துர்க்கை இங்கு தனி சன்னதியில் வடக்கு நோக்கி நின்று அருளுகிறாள்.

    இங்கு கருவறையில் உள்ள துர்க்கை மகிஷாசுரன் தலை மீது நின்று, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகளுடன் சுவரூபிணியாக காட்சி தருகிறாள். துர்க்கையின் சன்னதியை சுற்றி வலம் வரவும், அங்கப் பிரதட்சணம் செய்யவும் மேற்கூரை போடப்பட்ட பளிங்குக்கல் தரை மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் யாக சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் இடத்துடன் வடக்கு ராஜகோபுரத்தின் முன்புறம் தனி கோவில் அமைப்பாக உள்ளது.

    ராகுபகவானின்அன்னையாகவே காட்சி தருகிறாளாம். அதனால் ராகுபகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை ராகு காலத்தில் பூசிப்பதினால் அந்த நேரத்தில் துர்கையை பூசித்தால் தனது தாயார் துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஏற்படும் எந்தக் கெடுதல்களையும் தவிர்த்து நல்லதே செய்வாராம். அதனால்தான் இங்கு துர்க்கையை ராகு காலத்தில் வந்து பூசை செய்து வேண்டுவது வழக்கத்தில் உள்ளது. செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைக் கொண்டு பூசை செய்வதால் துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டுதல் செய்ய செவ்வாய் தோஷமும் விலகுமாம்.

    இங்கு வந்து துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்,மன அழுத்தம்,துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகி குடும்ப வாழ்க்கை அமைதியாகும். எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும் என்பவை மக்களால் நெடுநாட்களாக பின்பற்றப்படும் பரிகாரங்களாகும்.

    பட்டீஸ்வரம் துர்கைக்கு ,தாமரை மிகவும் விருப்பமுடைய மலர். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலையை துர்க்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்க்கையாக வேண்டி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீரும். கணவன் -மனைவி பிணக்கு காணாமல் போகும். அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்க்கை.

    மகளுக்கோ மகனுக்கோ திருமணம், வீடு வாசல் வாங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் பிரார்த்தனை இருந்தால் வீட்டில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள். மஞ்சள் துணியில் ஒரு காசை முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடக்கும். வீடு வாசல்அமையும். சந்தானபாக்கியம் சம்பவிக்கும்.பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்க்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியோடுசெலுத்துங்கள்.

    கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரத்தில்சாந்த மனசுக்காரி துர்க்கையை வழிபடுங்கள்; மகிழ்ச்சியைத் தந்திடுவாள் மகேஸ்வரி!

    தொடர்புக்கு: - இரா.இரகுநாதன் - செல்:9677222212

    • எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர்.
    • ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதிய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

    இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்ட் 1963ல் ஜே.பி. கிருபளானி, நேரு அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்தார். சீனப் போருக்குப் பிறகு நடந்த பர பரப்பான சம்பவம் அது. 12 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த நேரு எதிர்கொண்டது அந்த ஒரே ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மட்டுமே!

    அன்று முதல் இன்று வரை மக்களவையில் 30 நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் (27+3) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகமானவற்றை எதிர்கொண்டவர் இந்திரா காந்தி. மொத்தம்: 15. அவரது ஆட்சிக்காலம்: 15.86 ஆண்டுகள்ள்ளள.

    லால் பகதூர் சாஸ்திரியும் பி.வி.நரசிம்மராவும் தலா மூன்று. சாஸ்திரி சுமார் ஒன்றரை ஆண்டுகளே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொரார்ஜி தேசாய் இரண்டு தீர்மானங்களை எதிர்கொண்டார். தீர்மானத்தை ஓட்டுக்கு விடுவதற்கு முன்பே 12.7.1979 அன்று மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

    ராஜீவ் காந்தி, வி.பி.சிங், எச்.டி.தேவேகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் தலா ஒரு தீர்மானத்தை எதிர்கொண்டனர். 2023-ஐயும் சேர்த்தால் மோடி இரண்டு தீர்மானங்களைத் தோற்கடித்திருக்கிறார்.

    நரசிம்மராவ் 5 ஆண்டு பிரதமர் பதவி வகித்தார். 1992 ல் 46 வாக்கு மற்றும் 1993-ல் வெறும் 14 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தீர்மானங்களை அவர் தோற்கடித்தார். பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்ற புகார் எழுந்தது.

    மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக பா. ஜ. 2008 ஜூலை மாதம் கொண்டுவந்த தீர்மா னத்தில் வெற்றி பெற சில எம்.பி.களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2009 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அவர் இரண்டாவது முறை பிரதமர் ஆனார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்று அரசுகள் வீழ்ந்திருக்கின்றன. ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றது அதை அடுத்து நவம்பர் -7, 1990 அன்று வி.பி.சிங் நம்பிக்கைத் தீர்மானத்தை முன்வைத்தார். அது தோற்கடிக்கப்பட்டது. 346 வாக்குகளுக்கு 142 வாக்குகள் மட்டுமே வி.பி. சிங் பெற்றார். 1997 ஏப்ரல் 11-ல் தேவேகவுடா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 158 எம்.பி.க்கள் ஆதரவு. 292 பேர் எதிர்ப்பு. தேவேகவுடாவின் 10 மாதக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    களப்பத்திரிகையானாகப் பணியாற்றிய போது அமரர் வாஜ்பாய் "ஒரு ஓட்டு" வித்தியாசத்தில் ராஜினாமாச் செய்ய நேரிட்ட பரபரப்பான சம்பவம் என்னால் மறக்க முடியாதது. அந்த அளவிற்கு அப்போது அரசியல் சஸ்பென்ஸ் நிலவியது.

    வாஜ்பாயின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய சக்தி சின்ஹா எழுதிய 'வாஜ்பாய்: தி இயர்ஸ் தட் சேஞ்ச் இந்தியா' என்ற நூலைச் சமீபத்தில் மறுவாசிப்பு செய்தபோது பழைய சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடின. 1998 மே 19 இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவரது ஆட்சி 1999 ஏப்ரல் 17-ல் கவிழ்ந்தது. அது வரை நடந்த சம்பவங்களை சக்தி சின்ஹா கோர்வை ஆக்கியுள்ளார்.

    அப்போது பா.ஜனதா அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவளித்து வந்தது. அவர் அமைச்சரவையில் பதவி வகித்த சேடப்பட்டி முத்தய்யா, தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் 6.4.1999 அன்று திடீ ரென்று பதவி விலகல் கடிதங்களை வாஜ்பாய்க்கு அனுப்பினார்கள். மறுநாள் என்.டி.ஏ. ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து அ.தி.மு.க. தனது உறுப்பினர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

    அதற்கடுத்த ஐந்து நாட்களில் ஜெயலலிதா 1999 ஏப்ரல் 12 அன்று டெல்லி கிளம்பினார். "வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டுப் புதிய அரசை நிறுவப் போகிறோம்." என்று விமான நிலை யத்தில் பேட்டி அளித்தார். ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து வாபஸ் கடிதத்தை வழங்கினார். எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி: டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

    பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க இருந்த சமயம் என்பதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வாஜ்பா யைக் கேட்டுக் கொண்டார்.

    நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக 269 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 270 ஓட்டு பதிவாகியது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் 13 மாத பா.ஜ.க. அரசு 1999 ஏப்ரல் 17 அன்று கவிழ்ந்தது. "ஒற்றை ஓட்டு மர்மம்" பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

    அப்போது அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் சபா நாயகருமான மறைந்த சேடப்பட்டி முத்தையா தன் வாக்கைச் செலுத்தத் தவறியது வெளிச்சத்துக்கு வந்தது. எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர். சேடப்பட்டி முத்தையா தன் ஓட்டுச் சீட்டைப் போடாமல் சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்து விட்டார். அது சர்ச்சையாகி அதன்பின் அவருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டது.

    ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக சேடப்பட்டி முத்தையா ஓட்டுப் போட்டு இருந்தால், அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலா 270 வாக்குகள் பதிவாகி இருக்கும். அப்படியான சூழலில் சபா நாயகர் தனது வாக்கை அரசுக்கு ஆதரவாகச் செலுத்தி பா.ஜனதா அரசை காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்திருக்குமோ?

    இன்னொரு ஒற்றை ஓட்டு சர்ச்சையும் அதே 1999-ல் நிகழ்ந்தது. அந்தக் கால கட்ட காங்கி ரஸ் எம்.பி. கிரிதர் கோமாங் 1999 பிப்ரவரி யில் ஒடிசா மாநில முதல்வராகப் பதவியேற்றி ருந்தார். ஆனால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கவில்லை. எனவே அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாமா என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் சபாநாயகர் பால யோகி, அதைக் கோமாங்கின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் உத்தரவைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராகக் கிரிதர் கோமாங் வாக்களித்தார். எனவே அந்த ஒற்றை ஓட்டு அவரது ஒரு வாக்கு தான் என்று சக்தி சின்ஹா தன் நூலில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.க்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் பின்னர் எதிராக ஓட்டுப் போட்டனர். இப்படிப் பல்வேறு சம்பவங்களைத் தன் நூலில் குறிப்பிட்டிருந்தார் சக்தி சின்ஹா.

    கிரிதர் கோமாங் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பதுதான் சுவாரஸ்யம்! வாஜ்பாய் அரசு கவிழ்வதற்குக் காரணமானவர் என்றாலும் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டது பா.ஜ. தலைமை. அதே போல அன்றைய அ.தி.மு.க. வாபஸ் முடிவின் சூத்திர தாரியான சுப்பிரமணியன் சுவாமியும் பின்னர் பா.ஜ.எம்.பி. ஆனார்.

    பின்னர் 1999-ல் சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசில் அ.தி.மு.க. வலிந்து ஆதரவு அளித்த சோனியாகாந்தியும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை உருவாக்கத் தவறினார். முலாயம்சிங் கடைசி நேரத்தில் முறுக்கிக் கொண்டதே காரணம்! இப்படி வடமாநில அரசியலில் எதுவும் நடக்கலாம்!

    இதே போல இன்னொரு "ஒற்றை ஓட்டு சர்ச்சை" எங்கள் கல்லூரிக் காலகட்டத்தில் எழுந்தது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 560 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. 1947 ஒப்பந்தப்படி அவை இந்தியாவுடன் இணைய சில நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டது. அவற்றில் ஒன்று: மன்னர் மானியம்.

    மாஜி மன்னர்கள் மொத்தத்தில் கிட்டத்தட்ட 34 சலுகைகளை அனுபவித்தனர். இந்திய சட்டங்களின் செயல்பாட்டில் இருந்து விலக்கு, ஜாகிர்களை அனுபவிப்பது, ஆட்சியாளர்களின் சகோதர சகோதரிகளின் திருமணச் செலவுகளை அரசே செலுத்துதல், நீதிமன்றத்தின் சில செயல்முறைகளில் இருந்து விலக்கு ஆகியவையும் அடங்கும்.

    மானியத்தொகையாக ஆண்டுதோறும் ரூபாய் 5000 முதல் 2 லட்சம் வரை வழங்கப்பட்டது. ஐதராபாத் நிஜாம், திருவாங்கூர், பரோடா, ஜெய்பூர் மற்றும் பாட்டியாலா மன்னர்க ளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மன்னர் மானி யம் வழங்கப்பட்டது. மைசூர் மன்னர் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் பெற்றார். கொத்தாரியா என்ற ராஜபுத்ர ஆட்சியாளர் ஒருவர் வெறும் 192 ரூபாய் பெற்றார். 1969-ம் ஆண்டு நிலவரப்படி மன்னர் மானியத்தின் மொத்தத் தொகை சுமார் 58 கோடி ரூபாய். மன்னர் மானிய ஒழிப்புச் சட்ட மசோதாவை இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் 1969-ல் கொண்டு வந்தபோது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.

    அந்த ஒரு ஓட்டைச் செலுத்தத் தவறியவர் அப்போதைய தி.மு.க. எம்.பி. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனக்கு வயிறு சரியில்லாமல் போனதால் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வரும்போது வாக்கெடுப்புக்காகப் பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டதால் தன்னால் ஓட்டுப் போட முடியாமல் போனதா கவும் காரணம் சொன்னார் எஸ். எஸ். ஆர்.

    அதன்பின் பாகிஸ்தான்-வங்கதேச யுத்தத்தில் வெற்றி பெற்ற கையோடு, 1972 தேர்தலை முன் கூட்டியே 1971-ல் கொண்டு வந்தார் இந்திராகாந்தி. கலைஞரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலோடு முன்கூட்டியே அறிவித்தார். மாநில ஆட்சிக்கும் ஒரு வருட ஆயுள் பாக்கி இருந்தது.

    எனக்குக் கல்லூரி வாழக்கையின் இறுதிக்கட்டம். நாங்கள் பெருந்தலைவர் காமராஜ் ஆதரவு மாணவர்கள். எனவே ஸ்தாபன காங்கிரசுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தோம். தி.மு.க. கூட்டணி 184 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. மீண்டும் மன்னர் மானிய ஒழிப்பு மசோதா 1971-ல் அறி முகப்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இப்படி பாராளுமன்றத்தின் "ஒற்றை ஒட்டு" இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் அதிசயங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    மோடி அரசுக்கு எதிரான 2018 தீர்மானம் 325-126 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. இப்போதைய தீர்மானத்தின் கதியும் அது தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! பிரதமரை பேச வைத்ததே சாதனை என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

    தோற்றுப் போகும் என்று தெரிந்தே ஏன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது? ஊழல் புகார், சலுகைகள் பற்றிய சர்ச்சைகள் போன்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயங்குவது முக்கிய காரணம். நடப்பு தீர்மா னத்தின் நோக்கம்: மணிப்பூர் பிரச்சினையை மக்களவையில் விவாதித்துப் பிரதமரைப்பதில் கூற வைப்பது. அந்த வகையில் "இந்தியா" எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது வெற்றியே!

    தகுதி நீக்கத்தால் பதவி இழந்து உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.பி. யான ராகுல்காந்தி நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதம் துவங்கும் போது "கரெக்டாக" மக்கள வைக்கு வந்து சேர்ந்தார். "இந்தியா" அணியின் அதீத உற்சாகத்திற்கு அதுவும் காரணம். கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி கிடைக்கவிட்டாலும் "மேன் ஆப் த மேட்ச்" அவார்ட் ராகுல்காந்திக்குக் கிடைத்த பெருமையில் எதிர்க்கட்சிகள் கால ரைத் தூக்கி விட்டுக் கொண்டன.

    ராகுல்காந்தி அவையில் இருந்து வெளி யேறும்போது "பறக்கும் முத்தம் சைகை" கொடுத்தார் என்றும் அது பெண் எம்பிக்களை அவமதிக்கும் செயல் என்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் சபாநாயகரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

    பறக்கும் முத்தம் என்பது வார்த்தை அல்லாத தகவல்தொடர்பு என்றும், போற்றுதல் அல்லது பாசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு அன்பான சைகை என்றும் சேட் ஜி.பி.டி. கூறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது எழுந்த இன்னொரு சர்ச்சை இது. இதை வைத்து இன்னொரு ரவுண்ட் ஓடும். ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதீய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

    • நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.
    • யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது.

    நோய் வலியை உண்டாக்குகிறது. வலி என்பது நோய் குறித்து நாம் விழிப்புணர்வு அடைய கொடுக்கும் அறிகுறி என கருதலாம். நமது உடலில் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது உடல் பாகங்களில் ஏதோ ஒன்று சரி இல்லை என்பதைத்தான் வலி நமக்கு உணர்த்துகிறது. 'ஏ சிம்ப்டமேட்டிக் ஹார்ட் அட்டாக்' போன்ற மாரடைப்புகளும், இன்னபிற வியாதிகளும் வலி இல்லாமலே ஏற்படும்.

    உடலில் வலி ஏற்பட்டால், அதற்கு ஓய்வு எடுப்பது மற்றும் மருந்துகள் உட்கொள்வதை நாம் ஒரு நிவாரண வழிமுறையாகக் கையாள்கிறோம்.

    சில சமயங்களில் நம் உடலில் காயங்கள் அல்லது வியாதிகளால் அதீத வலி ஏற்படக்கூடும். நாள்பட்ட தீராத வயிற்றுவலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம்.

    இந்த வலிகள் குறித்தும், அதற்கான நிவாரண வழிகளைக் குறித்தும் பார்க்கலாம்.

    வலி என்பது 2 விதமாக இருக்கிறது. ஒன்று உடல் வலி. மற்றொன்று மனவலி. இருக்க கூடிய அனைத்து வலிகளிலும் மிகவும் மோசமான வலி எது என்று கேட்டால் அது மனவலியாக தான் இருக்கும்.

    மன வலி என்பது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒரு விளைவு. அதாவது நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.

    நமது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலியை நமக்கு உணரச் செய்வதே இந்த மூளைதான். எனவே, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மனவலி க்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப மன நல ஆலோசனைகள், மாத்திரைகள் உட்கொண்டு அதனை சரி செய்வதே சிறந்தது.

    வயிற்று வலி:

    மனிதனாகிய நாம் வயிற்றுக்கான உணவினை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி சரியான நேரத்தில் உணவினை எடுத்து கொள்ளவில்லை என்றால் வயிற்றில் வலி ஏற்படுகிறது. வயிற்று வலிக்கு முக்கிய காரணம் இரைப்பையில் புண் மற்றும் பித்தப்பையில் கல் ஏற்படுவதே காரணம்.

    வயிற்றில் ஒரு அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் சாப்பாடு வருகிறதா என்று எட்டி பார்க்கிறது. அப்படி வரவில்லை என்றால் வயிற்றில் உள்ள உள் சுவர்களை அரித்து விடுகிறது. மேலும் வயிற்றையே செரிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் வயிறு புண்ணாகி போகிறது.

    வலி எப்போது வருகிறது, எப்போது குறைகிறது என்று கேட்கலாம். சாப்பிட்டதும் வலி குறைகிறது. சாப்பிட்டு 6 மணி நேரம் கழித்து மீண்டும் வலி வருகிறது. அதாவது ஆகாரம் வயிற்றுக்குள் போனால் வலி குறைகிறது. ஆகாரம் இல்லையென்றால் வலி எடுக்கிறது. இப்படி இருந்தால், இரைப்பையில் புண்(அல்சர்) ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

    சாதாரணமாக இந்த புண் ஆறாது. இதனை குணப்படுத்த ஆண்டாசின், சிமாட்டின் உள்ளிட்ட மாத்திரைகள் எடுத்து கொண்டால் இந்த நோயினை குணப்படுத்த முடியும். அல்லது ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

    யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது. தீராத வயிற்று வலியால் கணையத்தில் கூட கட்டி வரலாம். 100 மில்லி வர வேண்டிய இடத்தில் அமிலம் 1000 மில்லியாக வெளி வந்தால், இரைப்பை மட்டுமல்ல குடல் முழுவதுமே புண் ஏற்படும். அதனை சரி செய்ய சிமாட்டின் மாத்திரைகள் அல்லது பான்கிரியாஸ் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

    இரைப்பையில் புண் வந்தது தெரிந்தால் கடையில் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    இரைப்பை மற்றும் கல்லீரலுக்கு என்று நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களும் உள்ளனர். அவர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் கூறும் மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டால் நாள்பட்ட வயிற்று வலியை சரி செய்ய முடியும்.

    தலைவலி

    இடி இடித்தால் எப்படி சத்தம் வருகிறதோ, அதுபோன்ற சத்தம் நம் தலையில் இடித்து கொண்டிருந்தால், நம் தலையில் உள்ள ரத்தக்குழாய் உடைந்து விட்டது என்று அர்த்தம்.

    'மைக்ரைன், டென்ஷன்' போன்ற காரணங்களால் நாள்பட்ட தலைவலி ஏற்படலாம். இதுவும், திடீரென தொடர்ச்சியாக வரக்கூடிய தலைவலியும் வேறு வேறு. இப்படிப்பட்ட பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

    ஒருவருக்கு மூளையில் ரத்தக் கசிவு அல்லது அடைப்பு அல்லது ஏதேனும் கட்டி உருவாகி அதில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

    மற்றொன்று, முகத்தில் ஏற்படக்கூடிய மின்னல் வலி. பல் துலக்கும் போதும், சாப்பிடும் போதும், காற்று பட்டாலும், சிரித்தாலும் இந்த வலி ஏற்படும். இதனால் சில நோயாளிகள் சாப்பிடக்கூட முடியாமல் அவதியடைகின்றனர். முகத்திற்கு மேல் வரும் ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக அறுவை சிகிச்சை அல்லது 'ரேடியோ ப்ரீக்வன்சி' மூலமாக சிகிச்சை மேற்கொள்ளலாம்.

    முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் இருக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தசைகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டாம், ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யலாம்.

    பொதுவாக, நேரத்தைக் காரணம் காட்டி முதலில் நாம் தவிர்ப்பது உடற்பயிற்சியைத்தான். எனவே, நேரம் இல்லை என்று கூறி தியானம் மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டாம். டி.வி மற்றும் செல்போனில் மூழ்கி இருக்கும் நேரத்தை சற்றே தவிர்த்தாலே தினமும் உடற்பயிற்சி செய்துவிட முடியும்.

    மூட்டு வலி பலரையும் வாட்டி வதைக்கிறது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்குக் காரணம், எலும்புத் தேய்மானம், வயது முதுமை. இளம் வயதில் மூட்டு வலி வருவதற்கு காரணம், இளம்பெண்கள் ஹை-ஹீல்ஸ் அணிந்து நடப்பது தெரியாமல் செய்வது போன்றவையாகும். இதுபோன்ற காரணங்களால் மூட்டு வலி அதிகமாக வருகிறது.

    நாள்பட்ட வலிக்கும் சாதாரண வலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவருக்கு காலில் அடிபட்டால் சிகிச்சை எடுத்த பின்பு அந்த இடத்தில் வரக்கூடிய வலி சாதாரணமானது. இதைவிட மிகவும் மோசமானது, suicide tendency வலி ஆகும். இது, தொடர்ந்து ஏற்படும் வலியின் இன்னல்கள் காரணமாக ஒருவருக்குத் தற்கொலை செய்யும் எண்ணத்தைத் தூண்டும். அந்த அளவிற்கு இந்த வலி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

    எனவே, இதுபோன்ற வலி உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுத்துப் பார்த்து, பின்னர் அவர்களுக்கு எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ அந்தப் பகுதியில் PRP (Platelet-Rich Plasma) எனும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த பரிசோதனை மூலம், அவர்களுடைய ரத்தத்தை எடுத்து, சிவப்பு ரத்த அணுக்கள் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளிலிருந்து பிரித்த பின்பு, அந்த பிளேட்லெட் மீண்டும் ஊசி மூலமாக வலியுள்ள இடத்தில் செலுத்தும்பொழுது அவர்களுக்குப் பூரண வலி நிவாரணம் ஏற்படுகிறது.

    எப்படியெனில், ஊசி செலுத்தும்போது அவர்களுக்கு அந்தப் பகுதியில் புதிய செல்கள் உருவாகிறது. அதனால் அவர்கள் குணமடைகின்றனர். தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் எளிமையான மருத்துவம் உள்ளது.

    எந்த பகுதியில் வலி இருக்கிறதோ அதே பகுதியில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி வலியைக் குணப்படுத்தலாம். அதனால் நீண்ட நாள் வலிகள் இருப்பவர்கள், நமக்கு நிரந்தரத் தீர்வு இல்லையே என வருந்தத் தேவையில்லை.

    வலி நிவாரண சிகிச்சை என்பது உடல் உறுப்புகளில் ஏற்படும் நாள்பட்ட வலிகளுக்கு மட்டும் அல்ல. மிக சவாலான அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் மன பயத்தைப் போக்கி இயன்முறை மருத்துவம் செய்துகொள்ள உதவும் வகையில் வலி நிவாரண சிகிச்சையானது, தற்போதைய நவீன மருத்துவத்தில் ஒரு இணை உதவி மருத்துவமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    மக்கள் எந்த வலி வந்தாலும் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் சிறப்பான வாழ்க்கை வாழலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள்.
    • ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    ஜெர்மனி முழுக்க நிறைய ஏரிகள் இருக்கின்றன. அதி வசீகரமான ஒன்று கோனிக்சீ என்னும் பெரிய ஏரி. கோனிக் என்றால் ஜெர்மனில் ராஜாவாம்.

    ஏரி என்றால் நீலத்தண்ணி மட்டுமில்லை.. சுற்றிலும் பவேரியன் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்து பரவசம் காட்டும் மேகத்திரைக்கு நடுவே பச்சை ரகசியம், காதுக்குள் ஜிவ்வென்னும் சில் காற்று தலையைக்கலைக்கும் விஷமம், துளிக்கூட குப்பை ஏதும் இல்லாத ஸ்வச் பவேரியா, அமைதியாக நம்மைக்கடத்தும் எலக்ட்ரிக் படகுகள், தூரத்தே ஊடாடும் வெள்ளை பாய்மரத்துணி வைத்த உல்லாச ஆசாமிப்படகுகள்.

    கூடவே கச்சிதமாக சினேகிதிகள், நம்மைப்போல கூட்டங்கூட்டமாய் டூரிஸ்டுகள். பாதிப்பேர் கிழங்கட்டைகள், பலர் துணைவியுடன் கூடவே கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள். வெறும் ஜட்டியுடன் மேலே ஒன்றுமில்லாமல், இருங்கள், இருங்கள், சின்னச்சின்னக்குழந்தைகள், ஸ், அப்பாடா, ஏரிக்கரையில் கால்களையும் பிருஷ்டத்தையும் நனைத்து விளையாடுகிறார்கள்.

    "பாத்து பாத்து, குழந்தை தண்ணில எறங்கறான் பார்!"

    "டேய்! கடங்காரா! உள்ள போகாதடா!

    இந்த மாதிரியான மரியாதைக்குரிய சப்தங்கள் ஏதுமின்றி ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    நான் பார்த்து வியந்தது அந்த மாபெரும் ஏரிக்கு நடுவே முகத்தில் ஒரு சின்னக்கவலையோடு தன்னந்தனியே துடுப்பை வலித்து ஒரு டப்பா படகின் அல்லாட்டத்தில் இடுப்புக்கு மேலே முதுகுப்பக்கத்தில் பிளவைக்காட்டும் லோ லெவலில் பட்டாபட்டி டிராயர் அணிந்த ஒரு முப்பது வயதை தாண்டிய ஆள்… பரந்த அமைதியான மாபெரும் ஏரியில் வேகு வேகுவென தன்னந்தனியாக சின்னப்படகை சிரிக்காத முகத்துடன் வலித்துக்கொண்டு வரும் இந்த நபரின் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாகத்தான் இருக்க முடியும்?

    இப்போது மீண்டும் போட்டொவைப்பாருங்கள்!

    துல்லியமான நீல ஏரி. துளிக்கூடச்சலனமில்லாத பாரபட்சமில்லாத ஞானியின் மனதைப்போல தண்ணீர்ப்பரப்பு. வீசும் சில் காற்றுக்குக்கூட சீரான அலைவரிசையைத் தோற்று வித்து ஒரு மெல்லிய நடுக்கத்தைக்காட்டி மறுபடியும் உறைந்துவிடுகிற நீர்ப்பரப்பு. பழுப்பு நிற வாத்துக்களின் கொர கொர சத்தமும், சில் வண்டின் ரீங்காரமும், லீவு போட்ட காலையில் சென்னையில் நாம் கேட்கும் ஒற்றைக்காகத்தின் குரலைப்போன்ற தனிமைக்காகக்கரையலும், நாளுக்கு ஒன்றிரண்டு முறை மட்டுமே தூரத்தே ஓடும் குட்ஸ் வண்டியும், இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மேப்பிள் மரங்களும், விரவி நிற்கும் அமைதியும் சில நேரங்களின் தனிமையின் கிலியை ஏற்படுத்துகின்றன.

    "தனிமையில் இருப்பது எளிதன்று" என்று சித்த புருஷர்கள் சொல்லுவது புரிகிறார்போல் இருக்கும் இடம்.

    சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக பெரிய பேக்கரி ஒன்றில் நுழைந்தோம். சந்தானத்துக்கு ஜோடியாய் "கஷ்க் முஷ்க்" என்று ஒரு பெண் வருமே, அதான் நம்ம மோகன் ராமின் டாட்டர், அவள் ஜாடையில் ஒரே ஒரு சின்னப்பெண் மட்டும் அந்தப்பெரிய பேக்கரியைப்பார்த்துக்கொள்கிறது. எங்களைப்பார்த்ததும் உடைசல் இங்கிலீஷில் இது வேணுமா அது வேணுமா, இதில் எள் போட்டு உடம்புக்கு நல்லது, அதில் சீஸ் கொலஸ்ட்ராலே கிடையாது என்றெல்லாம் பேசி ஒரு மெகா சைஸ் பன்னையும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி கேக்கையும் தள்ளி விட்டுவிட்டது. ஆனால் மகா உபசாரம் பண்ணியது. தானே பிளேட் கொண்டு வந்து கொடுத்து, ஸ்பூன் பொர்க்கெல்லம் தந்து, அடிக்கொருதடவை ஆர் யூ ஓக்கே என்றெல்லம் பந்தி விசாரனை பண்ணி………

    ஒரு ஸ்பூன் கேக்கை வாயில் போட்டால் கொழகொழவென்று சீசும், கிரீமும், ஐஸிங்கும் ஓரத்தில் துண்டு ஸ்ட்ராபெர்ரியுமாய் உள்ளே போகின்றது. அடுத்த ஸ்பூனை கேக்கின் ஓரத்தில் கொண்டுபோய் சாய்வெட்டாக ஒரு செதில் எடுத்தால்..அட..பெரிசாக பாதாம்! சந்தேகமே இல்லாமல் 500 கலோரிகள் கலந்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக இன்னிக்கு ஏற்பாடாகிவிட்டது!

    அந்த நீள வேன் கிட்டத்தட்ட ரெயில்வே காரேஜ் மாதிரி இருந்தது. ஒரு வித அழுக்குப்பச்சையும் மஞ்சளும் கலந்த இயந்திர ராட்சசன். கொஞ்சம் முன்னே போய்ப்பார்த்தேன். மெர்ஸிடீஸ் பென்ஸ் அக்சார் 240 ஹெச் பி குதிரைச்சக்தி என்று போட்டு "வ்ர்ரூம்" என்று உறுமிக்கொண்டிருந்தது.

    நல்ல மதிய வேளையில் நம்ம கண்ணகி சிலைக்கு எதிர்த்தாப்பில் நின்றிருக்கிறீர்களா? பீச் மணலில் ஒரு குடைக்குக்கீழ் ஒட்டி உட்கார்ந்துகொண்டிருக்கும் மனுஷ ஜென்மங்களைத்தவிர ஒரு பைத்தியக்கரனும் வெளியில இறங்க முடியாத சூடாக இருக்கும். அது மாதிரி சீதோஷ்ணம் அன்று மியூனிக்கில்! பளீரென்ற சூரியன் தான் தூக்கத்தைக் கலைத்தது. மணி பார்த்தேன்.

    அதிகாலை நாலரை!

    அடப்பாவிகளா!

    ஒரு வழியாக ஆறு மணிக்கு எழுந்து எப்போதும் போல வெட்டி முறிக்கறா மாதிரி பால்கனியில் நின்றவாறே காபி குடிக்கும்போது பேச்சு.

    "இன்னிக்கு ரியம் மால் வாசலில் காய்கறிச்சந்தை! போகலாமா!"

    மருமகள் கேட்டவுடன் சரி என்று கிளம்பிவிட்டோம். அங்குதான் இந்த டிரக்கைப்பார்த்தேன். அதன் பின்னங்கதவு, அந்த ரஜினி படத்தில் முழங்காலுக்கு மேலே ஸ்கர்ட் போட்டுக்கொண்டு வருவாளே, அவள் கார் கதவு மாதிரி மேல் நோக்கி திறக்க, அதிலிருந்து நாலடி, உயரமில்லை, அகலவாட்டில் இருந்த ஒரு தங்கக்கலர் தொங்கு மீசை இறங்கினான். அவனை ஒட்டி ஓடக்கோல் போல ஒரு ஒல்லிப்பிச்சானாய் இன்னொ ருத்தன். இருவரும் டிராகினுள்ளிருந்து நீளமான பச்சைக்கலர் கான்வாஸ் சுற்றிய சில பல கோணல் மாணலான கம்பிகள் அடங்கிய ஒரு வஸ்துவை எடுத்து கீழே வைத்தான். இதற்குள் முன் வழியாக இரண்டு பெண்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி வென்றபோது அவளுடன் மேடையில் இருந்த மாதிரி இரண்டு பெண்கள். வாட்ட சாட்டமாக ஒருவர் முழங்கால் அளவுக்கு அரை டிராயர் போட்டி ருந்தான் இந்தப்பெண்கள் போட்டிருந்த அரை டிராயர்… சரி வேண்டாம், மேலே எழுதினால், மாதர் சங்கங்கள் கோபித்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்புவார்கள், அதையெல்லாம் சமாளிக்கும் திராணி இல்லை.

    இருவரும் அந்த கம்பி சமாச்சாரங்களை பரபரவென்று பிரித்து அங்கே நட்டு, இங்கே பிரித்து என்று என்னென்னவோ குழப்படி செய்தார்கள். பார்த்தால் நீளமாக ஒரு டெண்ட் உருவாகிவிட்டது! அதற்குள் வாட்டசாட்டனும் ஓடக்கோலும் மளமளவென்று டிரக்கிலிருந்து டிரேக்கலை எடுத்து அடுக்கி பத்தே நிமிஷங்களில்........

    காய்கறிக்கடை!

    அடையாறு சர்தார் பட்டேல் ரோடில் என்னுடைய ஸ்கூல் தினங்களில் அடையார் பேக்கரிக்கு எதிரில் பிளாட்பாரத்தில் இருந்த நியாயவிலைக்கடை போல ஆகிவிட்டது. என்ன அங்கே சண்முககனி நாடார் ஏழெட்டு பேனாக்கள் அடங்கிய தொள தொள பை வைத்த காமராஜ் சட்டையுடன் கல்லாவில். இங்கே, அதான் சொன்னெனே, ஐஸ்வர்யா ராய் மேடைப்பெண்கள்.

    இன்னும் கூட்டம் வரவில்லை. நானும் மனைவியும் அங்கு போய் பேச்சுக்கொடுத்தோம். எனக்குத்தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் இருவரும் பரிட்சய ஜெர்மனில்.

    மியூனிக்குக்கு வெளியே நூறு மைல் தொலைவில் பெரிய பண்ணையாம். நூற்றுக்கு மேல் ஏக்கரோ ஹெக்டேரோ பாழாய்போன மொழி வளத்தினால் கணக்கு சரியாக விளங்கவில்லை. அவர்களே வேலை செய்து விளைவிக்கும் காய்கறி, பழங்களாம். நேரடி வியாபாரம். விலை நல்ல மலிவு என்று மருமகள் சொன்னார். மிடில் மென் என்னும் நடுத்தரகு வியாபாரிகள் யாரும் இல்லாத நன்மையைப்பார்க்க முடிந்தது.

    கொட்ட கொட்ட முழிக்கும் ஸ்ட்ராபெர்ரி, அரிசி மூட்டை சைஸில் தர்பூசனி, முட்டைக்கோஸ் ஒன்று வாங்கினால் கூட்டு பொரியல் என்று வாரம் பூரா கடத்திவிடலாம்.

    தக்காளி பச்சைக்காம்பு இலைகளுடன் ரம்மியமாக இருக்க, நம்மூர் பழமுதிர் நிலையத்தில் எழுவது ரூபாய்க்கு ஒன்று விற்கும் பிளம், யூரோ ஒன்றுக்கு ஆறு தந்தார்கள். டெண்ட் கடையின் ஓரத்தில் அந்த இன்னொரு உலக அழகி ஒரு பெரிய கண்னாடி பாத்திரத்தில் நெறயத்தண்ணீர் விட்டு அதில் சடசடவென ஸிட்ராபெர்ரீக்களைக்கொட்டி வைத்தாள். கூடவெ இன்னொரு கண்ணாடியிலும் அதேமாதிரி.

    என்னது இது என்று விசாரித்தேன்.

    "இது சர்க்கரையில் போட்ட ஸ்டிராபெர்ரி! அது ஒயினில் ஊற வைத்தது! பிரீ! எடுத்துக்கொள்ளுங்கள்!"

    காலங்காலையிலேயே சாராயம் கூடாது என்பதால் அந்த சர்க்கரை ஸ்டிராபெர்ரியை இரண்டை மட்டுமே எடுத்துக்கொண்டு பேச்சுக்கொடுக்கலாம் என்று பார்த்தேன்.

    அந்த வாட்ட சாட்டன் தாய் மாமனாம்!

    இன்னிக்குப்போதும் என்று நகர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    ×