என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
உசைன் போல்டை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் என்ற காட்லின் போராடி வருகிறார். ஆனால் முடிந்த பாடில்லை. இந்த வெறி போட்டியை விட்டு வெளியேயும் நடக்கிறது. இதனால் இவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் இன்றும் ஓட்டப்பந்தயத்தில் மோதிக் கொண்டார்கள். சுமார் 80 மீட்டர் வரை காட்லின்தான் முன்னணியில் இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் உசைன் போல்ட் முதலிடம் பெற்றார். கடந்த 2008-ல் இருந்து போல்டை யாரும் தோற்கடிக்க முடியவில்லை.
இந்த போட்டி முடிந்த பின்னர், மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள், காட்லின் இரண்டு முறை போதை பொருள் அருந்தி தடை பெற்றவர் என்று கூறி எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினார்கள். இது அவரை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
ரசிகர்களின் செயல்பாடு குறித்து காட்லின் கூறுகையில் ‘‘நாம் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அதேபோல் ரசிகர்களும் ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுப்பதை பார்க்க விரும்புகிறேன்.
நான் உசைன் போல்ட் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். போட்டிக்கு வெளியேயும் அவர் ஒரு சிறந்த மனிதன். மிகவும் சாந்தமானவர். எங்கள் இருவருக்கும் இடையில் பகைமை கிடையாது. அங்கே கெட்ட ரத்தம் ஏதும் கிடையாது. நான் ஒரு போட்டியாளர். அவரும் ஒரு போட்டியாளர். அவர் இன்று என்னை தோற்கடித்துள்ளார். இதேதான் அவரும் என்னைப் பற்றி சொல்வார் என்று நம்புகிறேன்.’’ என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘இது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முன் நான் கேட்டதும் கிடையாது. இதுபோன்று பார்த்ததும் கிடையாது’’ என்றார்.
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டிமுர்ரே தங்கம் வென்றார்.
அவர் இறுதிப்போட்டியில் 7-5, 4-6, 6-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவை வீழ்த்தினார். கடந்த ஒலிம்பிக்கிலும் முர்ரே தங்கம் வென்று இருந்தார். ஜோகோவிச், நடாலை வெளியேற்றிய டெல் போட்ராவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-2, 6-7 (1-7), 6-3 என்ற கணக்கில் ரபெல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி வெண்கலம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் ரஷியாவை சேர்ந்த மகரோவா- வெசினா ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேதக்- ஜேக் ஜோடியும் தங்கம் வென்றது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் புதிய உலக சாதனை படைத்தார்.
இன்று காலை நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். அவர் பந்தய தூரத்தை 43.03 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சன் 43.18 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால 400 மீட்டர் உலக சாதனையை இன்று நிகெர்க் முறியடித்தார்.
மேலும் ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற வரலாற்று பெருமையையும் அவர் பெற்றார்.
கிரீனிடா வீரர் ஜேம்ஸ் 43.76 வினாடியில் கடந்து வெள்ளியும், அமெரிக்க வீரர் மெரிட் 43.85 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் கொலம்பிய வீராங்கனை கேட்ரின் 15.17 மீட்டர் தூரம் தாண்டி தங்கமும், பெண்களுக்கான மராத்தானில் கென்யா வீராங்கனை சுமோங் தங்கமும் வென்றனர்.
ரியோ டி ஜெனீரோ:
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பெற்றவர் தீபா கர்மகர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 23 வயதான அவர் ஆர்டிஸ்டிக் ஆல்ரவுண்டு பிரிவில் 51-வது இடத்தை பிடித்தார்.
ஆர்டிஸ்டிக் வால்ட் பிரிவில் தீபா கர்மகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்து இருந்தார்.
அவர் பங்கேற்ற வால்ட் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்தது. இதில் தீபாகர்மகர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அவர் 15.066 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார். 0.15 புள்ளிகளில் அவர் பதக்க வாய்ப்பை இழந்தார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கமும் (15.966 புள்ளிகள்), ரஷிய வீராங்கனை மரியா பசேகா வெள்ளியும் (15.253), சுவிட்சர்லாந்தை சேர்ந்த கியூலியா வெண்கலமும் (15.216) பெற்றனர்.
தீபா கர்மகர் பதக்கம் வெல்லா விட்டாலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியர்களின் உள்ளங்களை கவர்ந்தார். சிறிய தொழில் நுட்ப தவறுகளால் அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போனது. இதற்கு பயிற்சியாளரின் அணுகுமுறையே காரணம். இளம் வீராங்கனையான அவருக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வைத்து இருந்ததால் இதை விட அவர் முன்னேற்றம் கண்டு இருப்பார்.
ஜிம்னாஸ்டிக் ஆர்டிஸ்டிக் வால்ட் பிரிவில் 4-வது இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது குறித்து தீபாகர்மகர் கூறியதாவது:-
நான் 15.016 புள்ளிகள் பெற்றுள்ளேன். இது எனது மிகப்பெரிய ஸ்கோராகும். இதனால் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். பதக்கம் கிடைத்து இருந்தால் இதை விட சிறப்பாக இருந்து இருக்கும். எனது செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் இதுவாகும். மற்ற வீராங்கனைகள் அனுபவம் பெற்றவர்கள். எனவே எனக்கு வருத்தம் இல்லை.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு (2020) ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது இலக்காகும்.
இவ்வாறு தீபா கர்மகர் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணிக்கு நடந்தது.
இதில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட், யோகன் பிளேக் (ஜமைக்கா), ஜஸ்டின் கேட்லின், புரோ மெல் (அமெரிக்கா) பென் யூசுப்மெட்டி (ஐவேரி கோஸ்ட்), ஆந்த்ரே டி கிராஸ் (கனடா), ஜிம்மி விகாட் (பிரான்ஸ்), அகானி சிபின் (தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 பேர் அரை இறுதி மூலம் தகுதி பெற்று இருந்தனர்.

இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறே உசேன் போல்ட் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடியில் கடந்து தங்கம் வென்றார்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உசேன் போல்ட்டுக்கு கேட்லின் சவால் கொடுத்தார். போல்ட்டை விட அவரே முன்னிலையில் இருந்தார்.
இதனால் கேட்லின் வெற்றி பெற்று விடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி 15 மீட்டரில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓட்டத்தில் அனல் பறந்தது. அவர் மிகவும் வேகமாக ஓடி கேட்லினை ஓரம் கட்டினார்.

அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவை சேர்ந்த ஆந்த்ரே கிராஸ் 9.91 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரர் என்பதை உசேன் போல்ட் நிரூபித்து உள்ளார். பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும், லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் சாம்பியன் ஆகி இருக்கிறார்.

இதன் மூலம் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உசேன் போல்ட் நீடிக்கிறார். அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. கேட்லின், யோகன் பிளேக் ஆகியோர் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உசேன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்துக்கு முன்பு அவர்களால் தாக்கு பிடிக்க இயலவில்லை. இதில் பிளேக் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடியில் கடந்து உசேன் போல்ட்டுக்கு இந்த சீசனில் சிறந்த நிலையாகும். 2009-ம் ஆண்டு அவர் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. ஒலிம்பிக் சாதனையாளராகவும் உசேன் போல்ட்தான் உள்ளார்.
அதன் பிறகு ஆட்டத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. பெல்ஜியம் அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. பெல்ஜியம் அணி வீரர் டோகியர் செபாஸ்டியன் 34-வது மற்றும் 45-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார்.
49-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி 3-வது கோலை போட்டது. அந்த அணி வீரர் பூன் டாம் இந்த கோலை அடித்தார். பின்னர் இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
ரியோ ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான கால்பந்தில் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடந்தன. ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலையும், நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கையும், ஹோண்டுராஸ் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார், லுவான் கோல் அடித்தனர். நாளை மறுதினம் நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில்-ஹோண்டுராஸ், நைஜீரியா-ஜெர்மனி அணிகள் சந்திக்கின்றன. பெண்கள் கால்பந்தில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில்- சுவீடன், கனடா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.
தடகளம்: பெண்கள் மாரத்தான் பந்தயத்தில் 157 பேர் கலந்து கொண்டனர். இதில் 32 பேர் பந்தய தூரத்தை முழுமையாக கடக்காமல் வெளியேறினர். 42.1 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 2 மணி 24 நிமிடம் 04 வினாடியில் கடந்த கென்ய வீராங்கனை ஜெமிபா ஜெலிகாட் சும்கோங் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த போட்டியில் ஓடிய இந்திய வீராங்கனைகள் ஜெய்ஷா (2 மணி 47 நிமிடம் 19 வினாடி) 89-வது இடத்தையும், கவிதா ராவுத் (2 மணி 59 நிமிடம் 29 வினாடி) 120-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான ரைபிள் மூன்று நிலை பிரிவின் தகுதி சுற்று நேற்று நடந்தது. 44 வீரர்கள் கலந்து கொண்ட இதில் இந்திய வீரர்கள் ககன் நரங் 1,162 புள்ளிகளுடன் 33-வது இடமும், செயின் சிங் 1,169 புள்ளிகளுடன் 23-வது இடத்து பிடித்து தகுதி சுற்றோடு மூட்டையை கட்டினர்.
இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சவால் பதக்கமின்றி முடிவுக்கு வந்தது. இந்த முறை இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அபினவ் பிந்த்ரா மட்டும் அதிகபட்சமாக பதக்கத்தை நெருங்கி வந்து 4-வது இடத்தை பிடித்தார். மற்ற அனைவரும் சொதப்பி விட்டனர். கடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்தது நினைவிருக்கலாம்.
குத்துச்சண்டை: ஆண்களுக்கான லைட் வெல்டர் வெயிட் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மனோஜ்குமார், உஸ்பெகிஸ்தான் வீரர் பாஸ்லித்தின் கைப்னாஜாரோவுடன் மோதினார். இதில் எதிராளியிடம் நிறைய குத்துகள் வாங்கிய மனோஜ்குமார் 0-3 (27-30, 27-30, 27-30) என்ற கணக்கில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி)- மோனிகா பிய்க்கும் (பியூர்டோரிகோ) மோதினர். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கார்பின் முகுருஜா, கிவிடோவா உள்ளிட்டோருக்கு 'தண்ணி' காட்டிய மோனிகா பிய்க் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
2 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் மோனிகா பிய்க் 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கெர்பரை வீழ்த்தியதோடு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்து புதிய வரலாறு படைத்தார். 22 வயதான மோனிகா பிய்க் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றை கூட தாண்டியது கிடையாது. உலக தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் அவர் ஒலிம்பிக் சாம்பியன் ஆகியிருப்பதன் மூலம் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
1948-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் பியூர்டோரிகோ 2 வெள்ளி, 6 வெண்கலம் மட்டுமே வென்றிருந்தது. முதல் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு 68 ஆண்டு காலம் தவம் இருந்துள்ளது. அவர்களின் ஏக்கத்தை மோனிகா பிய்க் தணித்துள்ளார்.
இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை எளிதாக கடந்து கொண்டு வந்தார். 10 ஆயிரம் மீட்டரை நெருங்கும்போது திடீரென கால் தடுமாறி கிழே விழுந்தார். மற்ற வீரர்கள் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
கிழே விழுந்ததால் வெற்றி பறிபோகி விடுமோ? என்று அஞ்சமால் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடினார். இறுதியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கீழே விழுந்த பிறகு தனது முயற்சியால் வெற்றி பெற்ற மொ பராக் பிரட்டன் நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் தடகளத்தில் பிரிட்டன் வீரர்கள் மூன்று தங்க பதக்கம் வென்றது கிடையாது. முதன்முறையாக பராக் மூன்று தங்க பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனைப் படைத்து அசத்தியுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார்.
புதன்கிழமை 5 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் கலந்து கொள்கிறார். இதில் தங்கம் வென்றால், 1976-ம் ஆண்டு 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் மாரத்தானில் தொடர்ந்து இரண்டு முறை தங்க பதக்கங்கள் வென்ற பின்லாந்து வீரரான லஸ்ஸே விரேன் சாதனையை சமன் செய்வார்.
முதல் இடத்தை பிடிக்கும் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 11-ந்தேதி நடைபெற்ற முதல் சுற்றில் பிரேசில் வீராங்கனையை சாய்னா நேவால் தோற்கடித்தார்.
இன்று உக்ரைன் வீராங்கனை மரியா யுட்டிலினாவுடன் மோதினார். தொடக்கத்தில் சாய்னா நேவால் சிறப்பாக செயல்பட்டார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 7-3 என முன்னிலை பெற்றர். அதன்பின் உக்ரைன் வீராங்கனை தொடர்ச்சியாக புள்ளிகள் பெற 8-8 போட்டி என சமநிலை அடைந்தது. பின்னர் 15- 15 சமநிலையில் சென்றது. இருவரும் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார்கள். 17-17 என சமநிலையில் சென்ற பின்னர், 18-20 என பின்தங்கிய சாய்னா அந்த செட்டை 18-21 என இழந்தார்.
2-வது செட்டும் கடுமையாக சென்றது. 16- 15 என சாய்னா முன்னிலையில் இருந்தார். அதன்பின் சாய்னா பின்தங்க உக்ரைன் வீராங்கனை 21- 19 என வெற்றி பெற்றார். இதனால் சாய்னா 0-2 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். ஏற்கனவே மரியா முதல் சுற்றில் பிரேசில் வீராங்கனையை தோற்கடித்ததால் ‘ஜி’ பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு 100 சதவீதம் உழைப்பை கொடுக்கிறார்கள். ஆனால் சில வீரர்களுக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் வசதிகளில் 10 சதவீதம் கூட கிடைப்பதில்லை. ஆனால், சிலர் உட்கார்ந்து கொண்டு மற்ற நாட்டு வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
யாராவது ஒருவர் வெற்றி பெற்றால் இதுதான் முக்கியம். வசதி இல்லாத நேரத்தில் பதக்கம் பெற்றால் பெரிய விஷயமாக தோன்றும். சரியான வசதி கிடைக்காமலும் வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம் நாட்டிற்காக பதக்கம் வாங்க முயற்சி செய்கிறார்கள்.
இனிமேல் இருக்கும் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்கள் நேர்மறையான எண்ணத்துடன் செல்ல வேண்டும். கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் சென்று விளையாடியதற்கு அவர்களுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். வசதிகள் சரியாக கிடைக்காத நிலையிலும் நாட்டிற்காக உயிரை கொடுத்து விளையாடுகிறார்கள். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்’’ என்றார்.






