என் மலர்
செய்திகள்

ஆண்கள் ஆக்கி: அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்திய அணி
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் பெல்ஜியம் அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, வலுவான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. 14-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. ஆகாஷ்தீப்சிங் இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதன் பிறகு ஆட்டத்தின் போக்கில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. பெல்ஜியம் அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. பெல்ஜியம் அணி வீரர் டோகியர் செபாஸ்டியன் 34-வது மற்றும் 45-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார்.
49-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி 3-வது கோலை போட்டது. அந்த அணி வீரர் பூன் டாம் இந்த கோலை அடித்தார். பின்னர் இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

Next Story