என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றங்கள்
    X

    ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றங்கள்

    ரியோ ஒலிம்பிக்கில் 9-வது நாளான நேற்றும் ஏமாற்றம் என்பது இந்தியாவுக்கு தொடர்கதையானது.
    ரியோ ஒலிம்பிக்கில் 9-வது நாளான நேற்றும் ஏமாற்றம் என்பது இந்தியாவுக்கு தொடர்கதையானது. இந்தியாவின் சில முடிவுகள் வருமாறு:-

    தடகளம்: பெண்கள் மாரத்தான் பந்தயத்தில் 157 பேர் கலந்து கொண்டனர். இதில் 32 பேர் பந்தய தூரத்தை முழுமையாக கடக்காமல் வெளியேறினர். 42.1 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 2 மணி 24 நிமிடம் 04 வினாடியில் கடந்த கென்ய வீராங்கனை ஜெமிபா ஜெலிகாட் சும்கோங் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த போட்டியில் ஓடிய இந்திய வீராங்கனைகள் ஜெய்ஷா (2 மணி 47 நிமிடம் 19 வினாடி) 89-வது இடத்தையும், கவிதா ராவுத் (2 மணி 59 நிமிடம் 29 வினாடி) 120-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

    துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் ஆண்களுக்கான ரைபிள் மூன்று நிலை பிரிவின் தகுதி சுற்று நேற்று நடந்தது. 44 வீரர்கள் கலந்து கொண்ட இதில் இந்திய வீரர்கள் ககன் நரங் 1,162 புள்ளிகளுடன் 33-வது இடமும், செயின் சிங் 1,169 புள்ளிகளுடன் 23-வது இடத்து பிடித்து தகுதி சுற்றோடு மூட்டையை கட்டினர்.

    இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சவால் பதக்கமின்றி முடிவுக்கு வந்தது. இந்த முறை இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் 12 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அபினவ் பிந்த்ரா மட்டும் அதிகபட்சமாக பதக்கத்தை நெருங்கி வந்து 4-வது இடத்தை பிடித்தார். மற்ற அனைவரும் சொதப்பி விட்டனர். கடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்தது நினைவிருக்கலாம்.

    குத்துச்சண்டை: ஆண்களுக்கான லைட் வெல்டர் வெயிட் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் மனோஜ்குமார், உஸ்பெகிஸ்தான் வீரர் பாஸ்லித்தின் கைப்னாஜாரோவுடன் மோதினார். இதில் எதிராளியிடம் நிறைய குத்துகள் வாங்கிய மனோஜ்குமார் 0-3 (27-30, 27-30, 27-30) என்ற கணக்கில் தோல்வி கண்டு நடையை கட்டினார்.
    Next Story
    ×