என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
கடந்த சில தினங்களுக்கு முன் நீளம் கலரில் இருந்த தண்ணீர் திடீரென பச்சை கலராக மாறியது. இதனால் வீரர்கள் களக்கம் அடைந்தனர். ஏற்கனவே, ரியோ ஒலிம்பிக் நகரம் சரியாக இல்லை என்று வீரர்கள் குற்றம்சாட்டிய நிலையில் இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டைவிட் போட்டி நடக்கும் இடத்திற்கான மானேஜர் உரிய விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த ஐந்தாம் தேதி ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற்றது. இதற்காக டைவிங் போட்டி நடக்கும் நீச்சல் குளத்தில் 80 லீட்டர் ஹைட்ரஜன் பெராக்சைடு கலக்கப்பட்டது.
இந்த ஹைட்ரஜன் பெரோக்சைடு, நீரில் கலக்கப்பட்ட பாக்டீரியா உயிரிக்கொல்லியான குளோரினை செயலிழக்கச் செய்துள்ளது. இதனால் நீலக் கலர் தண்ணீர் பச்சையாக தோற்றம் அளிக்கிறது. இதுகுறித்து சோதனையும் செய்து விட்டோம். வேறு எந்த பிரச்சினையு்ம் இல்லை.

டைவிங் போட்டிக்கான பயிற்சி குளத்தில் உள்ள தண்ணீரில் எந்த மாற்றமும் இல்லை. ஆகையால் தற்போது அந்த தண்ணீரை போட்டி நடைபெறும் குளத்திற்கு மாற்றி வருகிறோம்’’ என்றார்.
ஏற்கனவே, சைக்கிள் ரேஸிற்கான சாலை வசதி வாய்ந்ததாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி இந்தோனேசியா, சீனா ஜோடிகளிடம் தோற்று இருந்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்த ஜோடி ஜப்பானை சேர்ந்த என்டோ- ஹயாக்வா ஜோடியை எதிர்கொண்டது. இதில் அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி 23-21, 21-11 என்ற கணக்கில் வென்று ஆறுதல் அடைந்தது. இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லாமல் போனது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி தான் மோதிய 3 போட்டியிலும் தோற்றது. ஒற்றையர் பிரிவில் சானியா நேவால், பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். இவர்கள் மோதும் 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது.
ரியோ டி ஜெனீரோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 10.71 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கின் அதிகவேக வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இங்கிலாந்து வீராங்கனை டோரி பவ் 10.83 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்கமும், மற்றொரு ஜமைக்கா வீராங்கனை ஷெலிவின் பிரேசர் 10.86 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இங்கிலாந்து வீரர் முகமது பரக் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 27 நிமிடம் 05.17 வினாடியில் கடந்தார்.
கென்யா வீரர் பவுல் தனுல் 27 நிமிடம் 05.64 வினாடியில் கடந்து வெள்ளிப் பதக்க மும், எத்தியோப்பிய வீரர் தமிரா டோலா 27 நிமிடம் 06.26 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றனர்.
நீளம் தாண்டுதலில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜெப் ஹெண்டர் 8.38 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்தார். லுவாமன்யோன்கா (தென் ஆப்பிரிக்கா) 8.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், கிரேக் ரூதர் போர்டு (இங்கிலாந்து) 8.29 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான வட்டு எறியல் போட்டியில் கிறிஸ்டேஸ் ஹார்டிங் 68.37 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மலோச்ஸ்விகி (போலாந்து) 67.55 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், மற்றொரு ஜெர்மனி வீரர் டேனியில் 67.05 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான ஹெப்டலத்லான போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை நபிஷா தயிம் 68.10 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். நடப்பு சாம்பியனான ஜெசிகா 67.75 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமே பெற்றார். கனடா வீராங்கனை தெஷின் ஈட்டன 66.53 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார்.
ரியோடி ஜெனீரோ:
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி முதல் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு அரை அறுதிக்கு முன்னேறி இருந்தது. நள்ளிரவு நடந்த அரைஇறுதியில் சானியா ஜோடி அமெரிக்காவை சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் - ராஜீவ்ராம் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்ற சானியா ஜோடி அடுத்த செட்களில் மோசமாக விளையாடி தோற்றது.
இந்திய ஜோடி 6-2, 2-6, 3-10 என்ற கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வியால் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்பு உறுதி ஆகவில்லை.
சானியா மிர்சா - போபன்னா ஜோடி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் செக் குடியரசுவை சேர்ந்த லூசி ஹர்டேக்கா- ஸ்டெபானிக் ஜோடியை இன்று சந்திக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
ரியோ ஒலிம்பிக் டென் னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற முன்னணி வீரரான ரபெல்நடால் ஒற்றையர் அரைஇறுதியில் தோற்றார்.
அவர் அரை இறுதியில் 7-5, 4-6, 6-7 (5-7) என்ற கணக்கில் டெல்போட் ரோவிடம் (அர்ஜென்டினா) தோற்றார். நடால் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் நிஷி கோரியுடன் (ஜப்பான்) மோதுகிறார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)- டெல்போட்ரோ மோதுகிறார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை ஆயிரம் தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 473 தங்கப்பதக்கங்களை வென்ற முன்னாள் சோவியத் யூனியன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தகுதிச் சுற்று 8 ஹீட்டாக (பிரிவு) நடைபெற்றது. ஒவ்வொரு ஹீ்ட்டிலும் தலா 9 வீரர்கள் இடம்பிடித்திருந்தனர்.
2-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 10.01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் பிடித்தார். ஆன்டிகுவா அண்டு பார்புடா வீரர் டேனியல் பெய்லி 10.20 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார்.
7-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த உசைன் போல்ட் 10.07 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்துள்ளார். பஹ்ரைன் வீரர் அன்ட்ரீவ் பிஷெர் 10.12 வினாடிகளில் கடந்தார்.
6-வது ஹீட்டில் இடம்பிடித்திருந்த யோஹன் பிளேக் 10.11 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். துருக்கி வீரர் ஹார்வெய் 10.14 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்தார்.
4-வது ஹீட்டில் கனடா வீரர் பந்தய தூரத்தை 10.04 வினாடிகளில் கடந்தார். 5-வது ஹீட்டில் ஐவரி கோஸ்ட் வீரர் 10.03 வினாடிகளில் கடந்தார். காட்லின் உடன் இணைந்து இவர்களும் போல்டிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.
பிரதமர் மோடி புதிதாக அறிமுகம் செய்துள்ள மொபைல் அப்ளிகேசன் மூலம், நாட்டு மக்களிடம் தனது சுதந்திர தின உரை குறித்து ஆலோசனைகளை கேட்டிருந்தார். தனது உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டிருந்தார். இதில், பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
அவ்வகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்துக்கள் அடங்கிய கடிதத்தை பிரதமரின் அப்ளிகேசனுக்கு அனுப்பியுள்ளார். அதில், நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றுள்ள நமது வீரர்களைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டார்.
“தங்களிடம் இருந்து வெளிப்படும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள், ஒலிம்பிக்கில் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ள சில வீரர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். அதேபோல் முன்னேறிக்கொண்டிருக்கும் மற்ற வீரர்களுக்கும் தூண்டுகோலாக இருக்கும்’’ என்று சச்சின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நல்லெண்ண தூதுவரான சச்சின் தற்போது ஒலிம்பிக் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் தங்கியிருந்து வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
இப்போட்டியின் இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
ஜெர்மனி வீரர் 592-27 புள்ளிகள் பெற்று முதல் இடமும், சீன வீரர் 590-27 புள்ளிகள் பெற்று 2-வது இடமும், பிரான்ஸ் வீரர் 586-19 புள்ளிகள் பெற்று 3-வது இடமும் பெற்றனர். இந்திய வீரர் 581-24 புள்ளிகள் பெற்றார்.
31 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கப் பதக்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் தான் போதிய அளவு சாதனை படைத்துவிட்டதால் இந்த ரியோ ஒலிம்பிக் உடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு புதியதாக பிறந்துள்ள மகன் பூமர் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெல்ப்ஸ் கூறுகையில் ‘‘இன்னும் நான்கு வருடங்கள் காத்திருந்து மற்றொரு ஒலிம்பிக்கில் நான் கலந்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். நீச்சல் போட்டி குறித்து எனது மனதில் என்னென்ன வைத்திருந்தேனோ அனைத்தையும் செய்து விட்டேன். இந்த சாதனையுடன் விடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் வரை போட்டியில் தொடர வேண்டும் என விரும்புவதகா சக வீரர் ரியான் லோச்தே கூறியுள்ளார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று இருந்தது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனியிடம் 1-2 என்ற கணக்கில் தோற்றது. 3-வது போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வென்றது. 4-வது போட்டியில் 1-2 என்ற கணக்கில் நெதர்லாந்திடம் தோற்றது.
நேற்றைய கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
இந்திய அணி 2 வெற்றி, 1 டிரா, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று அந்த பிரிவில் 4-வது இடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.
ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டினா முதல் 3 இடங்களை பிடித்தும், ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதல் 4 இடங்களை பிடித்தும் கால்இறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து, பிரேசில் (‘ஏ’ பிரிவு), அயர்லாந்து, கனடா (‘பி’பிரிவு) ஆகியவை வெளியேற்றப்பட்டன.
இந்திய அணி கால்இறுதியில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்கள் ஸ்பெயின்-அர்ஜென்டினா, நெதர்லாந்து- ஆஸ்திரேலியா, ஜெர்மனி- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பிரேசில் ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 50.39 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் முதன்முறையாக தங்கம் வென்ற சாதனையை இவர் ஏற்படுத்தி தந்துள்ளார்.
இரண்டாம் இடம் பிடித்த அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 51.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தற்போது வரை 22 தங்கம், 3 வெள்ளி உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்று பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களை பெல்ப்ஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






