என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ்சை வீழ்த்தி சிங்கப்பூர் வீரர் தங்கம் வென்றார்
    X

    பிரேசில் ரியோ ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவு நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 50.39 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் சிங்கப்பூர் முதன்முறையாக தங்கம் வென்ற சாதனையை இவர் ஏற்படுத்தி தந்துள்ளார்.
    ரியோ டி ஜெனீரோ:

    இரண்டாம் இடம் பிடித்த அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 51.14 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    தற்போது வரை 22 தங்கம், 3 வெள்ளி உள்ளிட்ட 27 பதக்கங்களை வென்று பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் மட்டும் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளியுடன் மொத்தம் 5 பதக்கங்களை பெல்ப்ஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×