என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறியும் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா அண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவர் தகுதி சுற்றில் 57.58 மீட்டர் தூரம் தாண்டி 20-வது இடத்தை பிடித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே இருந்து வருகிறது.
பெண்களுக்கான வட்டு எறியும் பந்தயத்தில் இந்திய வீராங்கனை சீமா அண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவர் தகுதி சுற்றில் 57.58 மீட்டர் தூரம் தாண்டி 20-வது இடத்தை பிடித்தார். அவர் கடந்த காலங்களில் 62.62 மீட்டர் தூரம் வரை வீசி இருந்தார். பிரேசிலில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சீமாவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இதே போல சிரபானி நந்தா (200 மீட்டர்) ரஞ்சித் மகேஸ்வரி (டிரிபிள் ஜம்ப) ஆகியோரும் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.
3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள் சேஸ் ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய வீராங்கனை லலிதா பார்பர் 10-வது இடத்தை பிடித்தார்.
தடகளத்தில் முகமது அனாஸ், ஜின்சன் ஜான்சன், அங்கீட் சர்மா, விகாஸ் கவுடா, டுட்டி சந்த், நிர்மலா, சுதாசிங், மன்பிரித் கவூர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேற்றப்பட்டனர்.

ரியோ ஒலிம்பிக்கில் இன்று அதிகாலை நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் பிரேசில் வீரர் டியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.
ரியோ டி ஜெனீரோ:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் பிரேசில் வீரர் டியோகோ டி சில்வா புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் 6.03 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார்.

இதற்கு முன்பு லண்டன் ஒலிம்பிக்கில் (2012) பிரான்ஸ் வீரர் ரெனாட் லிவில்லின் 5.97 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அவர் 2014-ம் ஆண்டு 6.16 மீட்டர் உயரம் தாண்டியதே உலக சாதனையாக இருக்கிறது.
உலக சாதனையாளரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ரெனாட் லிவில்லின் 5.98 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீரர் சாம் கென்டிரிக்ஸ் 5.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.
ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் கென்யா வீரர் டேவிட் லுக்தா ருடிஷா தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 42.15 வினாடியில் கடந்தார். தடகளத்தில் கென்யா 2-வது தங்கத்தை வென்றது. ஏற்கனவே பெண்கள் மராத்தானில் வெற்றி பெற்று இருந்தது.
அல்ஜீரியா வீரர் தவ்பீக் ஒரு நிமிடம் 42.61 வினாடியில் கடந்து வெள்ளி பதக்கமும், அமெரிக்க வீரர் கிளைடன் முர்ரே 1 நிமிடம் 42.93 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பகாமஸ் வீராங்கனை ஷானே மில்லர் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 49.44 வினாடியில் கடந்தார். அவர் அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்சை வீழ்த்தினார். பெலிக்ஸ் 49.51 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ஜமைக்கா வீராங்கனை ஷெரிக்கா ஜேக்சன் 49.85 வினாடியில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் கால்இறுதியில் தோல்வியடைந்தார்
ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி 10 தினங்களில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், வில்வித்தை ஆகிய பதக்க வாய்ப்பு உள்ள விளையாட்டுகளில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குத்துச்சண்டையிலும் பதக்க வாய்ப்பு இல்லாமல் போனது. கால்இறுதிக்கு நுழைந்து இருந்த ஒரே இந்திய வீரரான விகாஸ் கிருஷ்ணனும் தோற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இந்திய நேரப்படி அதிகாலை நடந்த மிடில் வெயிட் பிரிவு (75 கிலோ) கால்இறுதியில் விகாஸ் கிருஷ்ணன் உஸ்பெகிஸ்தான் வீரர் மெலிக்குஷிவை எதிர்கொண்டார்.
இதில் விகாஸ்கிருஷ்ணன் 0-3 என்ற புள்ளி கணக்கில் தோற்றார். உலகின் 2-வது வரிசையில் இருக்கும் உஸ்பெகிஸ்தான் வீரரின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு முன்பு அவரால் ஈடுகொடுத்து விளையாட இயலவில்லை.
மற்ற இந்திய வீரர்களில் மனோஜ் குமார் லைட் வெல்டர் வெயிட் பிரிவில் (64 கிலோ) கால்இறுதிக்கு முந்தைய சுற்றிலும், ஷிவ தாபா பாந்தம் வெயிட் பிரிவில் (56 கிலோ) தொடக்க சுற்றிலும் தோற்று வெளியேறி இருந்தனர்.
கடந்த 2 ஒலிம்பிக்கிலும் குத்துச்சண்டையில் பதக்கம் கிடைத்தது. 2008-ல் விஜேந்தர்சிங்கும், 2012-ல் மேரிகோமும் வெண்கல பதக்கம் பெற்றனர். இந்த முறை 3 வீரர்கள் பங்கேற்று வெறும் கையுடன் ஏமாற்றம் அளித்தனர்.

ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் கால்இறுதிக்கு முன்னேறினார்.
ரியோடி டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி ‘லீக்’ ஆட்டங்களில் தோற்று ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
இதேபோல பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான சானியா நேவாலும் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேற்றப்பட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.
இந்த நிலையில் மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் கால்இறுதிக்கு முன்னேறினார். இந்திய நேரப்படி நள்ளிரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அவர் சீன தைபேயை சேர்ந்த தாய் டிஜூவிங்கை எதிர்கொண்டார்.
இதில் பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 40 நிமிட நேரமே தேவைப்பட்டது.
சிந்து கால்இறுதியில் சீனாவை சேர்ந்த விங் யூகான் சந்திக்கிறார். யூகான் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். இதனால் கால்இறுதி ஆட்டம் சிந்துவுக்கு சவாலானது. இந்த ஆட்டம் நாளை அதிகாலை 3.25 மணிக்கு நடக்கிறது. ஸ்ரீகாந்த் கிடாம்பி கால்இறுதியில் சீன வீரர் லின்டானை நாளை மாலை 6 மணிக்கு எதிர்கொள்கிறார்.

இந்திய ஆக்கி அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை பற்றி பயிற்சியாளர் ஒல்ட்மான்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்ததுடன், பதக்க வாய்ப்பில் இருந்தும் வெளியேறியது.
இந்திய அணியின் தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் அளித்த பேட்டியில், ‘நமது அணியை விட பெல்ஜியம் அணியின் ஆட்ட திறன் மேம்பட்டு காணப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடிய தரமான ஆட்டத்தை நமது அணி இந்த போட்டி தொடரில் வெளிப்படுத்தவில்லை.
நமது அணி வீரர்களுக்கு அதிக அழுத்தமும், நெருக்கடியும் இருந்தது. தொடக்கத்தில் நாம் முன்னிலை வகித்தாலும், அந்த சாதகத்தை நம்மிடம் இருந்து பெல்ஜியம் அணி தட்டிப்பறித்து விட்டது. பெல்ஜியம் வெற்றிக்கு தகுதி படைத்த அணியாகும். நமது அணியில் இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெற அனுபவம் அவசியமானதாகும். கால் இறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும், அதனை விட இன்னும் முன்னேறும் திறமை நமது அணிக்கு உள்ளது. கால் இறுதியில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது.
வாழ்வா? சாவா? போன்ற ஆட்டங்களில் இன்னும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். நமது அணி அதிக நெருக்கடிக்கு ஆளானது. எதிரணிக்கு நெருக்கடி அளிக்க தவறி விட்டோம். நமது அணியின் ஆட்ட திறன் போதுமான அளவில் வெளிப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

சாதனைக்கு உயரம் பெரிதல்ல என்பதை நிருபித்ததில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு.
ஒலிம்பிக்கில் இந்த முறை அதிகம் கவர்ந்தவர்களில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஆகியோருக்கு முக்கிய இடம் உண்டு. பெல்ப்ஸ், ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்றதுடன் விடைபெற்றார்.
அதே சமயம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் களத்தில் பம்பரமாக சுழன்று வரும் 19 வயதான சிமோன் பைல்ஸ் இதுவரை 3 தங்கத்தை வென்று பிரமிக்க வைத்துள்ளார். ஆனால் பெல்ப்சின் அருகில் நிற்கும் போது சிமோன் பைல்ஸ் சின்ன குழந்தை மாதிரி காட்சி அளிக்கிறார். இவரா அந்தரத்தில் துள்ளி குதித்து அதிசயிக்க வைக்கிறார் என்ற ஆச்சரியமும் மேலோங்குகிறது. இருவரும் ஒன்றாக நிற்கும் படங்கள் சமுக வலை தளங்களில் இப்போது அதிகமாக உலா வருகிறது.

எனது வெற்றியை ஜமைக்கா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக உசேன் போல்ட் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் தடகளத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்திற்கு எப்போதும் தனித்துவமான வரவேற்பு உண்டு. கண்ணிமைக்கும் நேரத்தில் வெற்றியாளரை அடையாளம் காட்டும் இந்த ஓட்டத்தை பார்க்கும் போது நம் உள்ளமும் வீரர்களுடன் சேர்ந்து ஓடுவது போல் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். குறுகிய நேர ஓட்டமான இதில் ஜெயிக்கும் வீரரே உலகின் அதிவேக மனிதராக அழைக்கப்படுகிறார்.
ரசிகர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் ஜெட் வேகத்தில் ஓடிய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் எதிர்பார்த்தபடியே வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை கழுத்தில் சூடினார்.
இந்த முறை உசேன் போல்டின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவேன் என்று ஜஸ்டின் கேத்லின் சூளுரைத்திருந்தார். ஆனால் 100 மீட்டர் ஓட்டத்தில் தன்னை அசைத்து பார்க்க இப்போதைக்கு இந்த உலகில் ஆள் இல்லை என்பதை உசேன் போல்ட் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
இந்த வெற்றியை ஜமைக்கா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக உசேன் போல்ட் டுவிட்டர் மூலம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
நான் ரொம்ப வேகத்தில் ஓடவில்லை. இதை விட இன்னும் சீக்கிரமாக இலக்கை அடைய வேண்டும் என்று விரும்பினேன். ஆனாலும் சாம்பியன் ஆகியிருப்பது மிகவும் பெருமிதம் அளிக்கிறது. எனது மிகச்சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று. இங்கு நான் சாதிக்கப்போகிறேன் என்று உங்களிடம் (நிருபர்கள்) கூறினேன். அதை செய்து காட்டியிருக்கிறேன். திட்டமிடலை களத்தில் செயல்படுத்திய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.
‘எனது சாதனைக்கு அழிவே கிடையாது. அந்த புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு பதக்கம் வெல்ல வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும் ‘அழிவில்லாத சாதனை’ என்ற கூற்றை ஏற்றுக்கொள்வேன்.
ரசிகர்களின் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. ஏதோ கால்பந்து மைதானத்தில் இருப்பது போன்று உணர்ந்தேன். அவர்களுக்கு நன்றி. எனது எஞ்சிய இரு பந்தயத்தையும் இதே போன்று கண்டுகளியுங்கள்.

ஒலிம்பிக் பதக்கமேடையில் சீன வீராங்கனைக்கும், சக வீரருமான கின் காய்க்கும் நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
இந்த ஒலிம்பிக் திருவிழாவில் அவ்வப்போது திடீர் வினோதங்களும் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு பிரேசில் ஓரினசேர்க்கை ஜோடி மைதானத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.
இந்த நிலையில் பதக்கம் மேடையில் நேற்று முன்தினம் ஒரு திருமண நிச்சயதார்த்தம் அரங்கேறியது.
ரியோ ஒலிம்பிக் ‘டைவிங்’ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹி ஜி பதக்க மேடையில் நின்ற போது, அவரது நீண்ட கால நண்பரும், சக வீரருமான கின் காய் திடீரென தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி மோதிரத்துடன் மண்டியிட்டார்.
ஆனந்த கண்ணீர் மல்க அதை ஏற்றுக்கொண்ட ஹி ஜி, வெட்கத்துடன் தலையசைக்க அந்த கணமே அங்கு மோதிரம் கைமாற நிச்சயதார்த்தம் நடந்தேறியது.

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்த சானியா மிர்சா தோல்வியின் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் செக்குடியரசு ஜோடியிடம் தோற்று பதக்கத்தை கோட்டை விட்டது. தோல்வியின் வேதனையை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத சானியா மிர்சா, கண்ணீரை அடக்குவதற்கு பெரும்பாடு பட்டார்.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிருபர்களிடம் பேசிய 29 வயதான சானியா, ‘இது கடினமான தருணம். என்னால் அதிகம் பேச முடியவில்லை. ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எனவே 2020-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் என்னால் பங்கேற்க முடியுமா? என்பதை இப்போது சொல்ல முடியாது’ என்றார்.
சுதந்திர தின பரிசாக பதக்கத்தை நாட்டுக்கு அளிக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் 10-வது நாளான நேற்றும் தடகள போட்டியில் இந்தியாவிற்கு ஏமாற்றமே தொடர்ந்தது.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக்கில் 10-வது நாளான நேற்று தடகள போட்டியில் ஏமாற்றம் தொடர்ந்தது. பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் உள்பட 18 பேர் கலந்து கொண்டனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2-வது இந்திய தடகள வீராங்கனை என்ற பெருமைக்குரிய லலிதா பாபர் பந்தய தூரத்தை 9 நிமிடம் 22.74 வினாடியில் கடந்து 10-வது இடத்தையே பிடித்தார். இந்த போட்டியில் பக்ரைன் வீராங்கனை ரூத் ஜெபெத் 8 நிமிடம் 59.75 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் வழக்கம் போல் இந்திய வீரர் ரஞ்சித் மகேஸ்வரி இறுதி சுற்றுக்கு முன்னேறாமல் நடையை கட்டினார். 48 வீரர்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் ரஞ்சித் மகேஸ்வரி 16.13 மீட்டர் தூரம் தாண்டி 30-வது இடம் பிடித்தார். ஒலிம்பிக் தகுதிக்கான இந்திய கிராண்ட்பிரீ போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 17.30 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரபானி நந்தா 23.58 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். 77 பேர் பங்கேற்ற இந்த பந்தயத்தில் ஸ்ரபானி நந்தாவுக்கு 55-வது இடம் கிடைத்தது.

தீபா கர்மாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் எனது அன்பான 130 கோடி இந்திய மக்களே உங்களது கனவை என்னால் நனவாக்க முடியவில்லை என்று மன்னிப்பு கோரியுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘வால்ட்’ பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரிப்படுத்தியதுடன், புதிய வரலாறும் படைத்தார்.
தீபா கர்மாகர் பதக்கம் வெல்லாவிட்டாலும் உடல் திறமைக்கும், மன உறுதிக்கும் கடும் சோதனையாக விளங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தீபா கர்மாகர் வெளிநாடுகளில் பயிற்சி எதுவும் பெறாமலே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மங்கையாக கருதப்படும் தீபா கர்மாகர் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டில் நடந்த உலக போட்டியில் 5-வது இடமும் பிடித்து இருந்தார்.
இதற்கிடையில் தீபா கர்மாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனது அன்பான 130 கோடி இந்திய மக்களே. உங்களது கனவை என்னால் நனவாக்க முடியவில்லை. இதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடந்து முடிந்தது குறித்து (தோல்வி) என்னை நானே பழித்து கொள்வதை நிறுத்தமாட்டேன்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தீபா கர்மாகரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜிம்னாஸ்டிக்சில் எந்தவொரு இந்தியரும் செய்யாத சாதனையை புரிந்து இருக்கும் தீபா கர்மாகருக்கு, 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அபினவ் பிந்த்ரா உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
‘நீங்கள் தான் எங்களது ஹீரோ’ என்று அபினவ் பிந்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். ‘ஜிம்னாஸ்டிக்சுக்கு எந்தவித உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத நாட்டில் உங்களது திறமை மிகப்பெரிய அருமை’ என்று ஷேவாக் கூறியுள்ளார். ‘தீபா கர்மாகர் நீங்கள் எங்கள் எல்லோரையும் பெருமைப்பட வைத்து இருக்கிறீர்கள்’ என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் ‘எச்’ பிரிவில் இடம்பிடித்திருந்தார். இந்த பிரிவில் அவருடன் இடம்பிடித்திருந்த இருவரையும் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த ஜான் ஜொர்கென்சனை எதிர்கொண்டார்.
முதல் செட் மிகவும் கடுமையான சென்றது. இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். ஒரு கட்டத்தில் டென்மார்க் வீரர் 17-14 என முன்னிலையில் இருந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 17-17 என சமநிலை பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டும் கடுமையாகத்தான் சென்றது. ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் 8-4 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 19-17 என முன்னிலையில் இருந்தார். இந்த இரண்டு புள்ளிகள் வித்தியாசத்துடன் 2-வது செட்டையும் 21-19 எனக் கைப்பற்றினார்.
இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீனாவின் டான் லின்-ஐ எதிர்கொள்கிறார்.