என் மலர்
ரியோ ஒலிம்பிக்ஸ்-2016
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஆக்கி போட்டியில் ஜெர்மனி, நெதர்லாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ரியோ டி ஜெனீரோ:
ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஆக்கியில் கால் இறுதி ஆட்டங்கள் நடந்தன.
இதில் நியூசிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும், இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், நடப்பு சாம்பியன் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் அர்ஜென்டினா 5-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்தது.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கியில் நேற்று நடந்த அரைஇறுதியில் அர்ஜென்டினாவும், நடப்பு சாம்பியன் ஜெர்மனியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்து, முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அர்ஜென்டினா அணியில் கோன்சலோ பெய்லட் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.
பெண்களுக்கான ஆக்கியில் நேற்று முன்தினம் கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன. இதில் நியூசிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும், இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும், நடப்பு சாம்பியன் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ரியோ ஒலிம்பிக்கில் 5000 மீ்ட்டர் தூர ஓட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க பெண்மணி காயம் அடைந்த பின்னரும் பந்தய தூரத்தை கஷ்டப்பட்டு கடந்தார்.
ரியோவில் இன்று பெண்களுக்கான 5000 மீட்டர் தூர ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதன் 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் அப்பே டி'அகோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இருவரும் திடீரென எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டார்கள். இதில் அமெரிக்க வீராங்கனையின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த நியூசிலாந்து வீராங்கனை அவரை அருகில் சென்று நலம் விசாரித்தார். போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் ஒதுங்கி்க் கொள்ளுங்கள் என்றார். ஆனால், அமெரிக்க வீராங்கனை அதற்கு மறுத்து விட்டார்.

தன் மனவலிமையால் எழுந்து மீண்டும் ஓடினார். ஆனால் சில மீட்டர் தூரம் சென்றதும் மீண்டும் கிழே விழுந்தார். இதனால் நியூசிலாந்து வீராங்கனை மனமுடைந்தார். திரும்பவும் அமெரிக்க வீராங்கனையிடம் வந்து ஆறுதல் கூறினார்.
இறுதியில் ஒரு வழியாக 5000 மீட்டரை கடந்தார் அமெரிக்க வீராங்கனை. பின்னர் அவரால் நடக்க முடியாமல் திணறியதால் வீல் சேரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

நியூசிலாந்து வீராங்கனை 15-வது நபராக வந்து அமெரிக்க வீராங்கனைக்காக காத்திருந்தார். 16-வதாக வந்த பின்னர் அவரை கட்டிப்பிடித்து தனது ஆறுதல் மற்றும் வருத்தத்தை தெரிவித்தார்.

ரியோ ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டத்தில் கென்ய வீரர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தொடர்ந்து 2 முறை தங்கம் வென்று 52 வருட சாதனையை முறியடித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தடகளத்தில் ஒவ்வொரு நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வாங்கியதுடன் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறார்கள். இந்த வரிசையில் கென்யாவின் 800 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் டேவிட் ருடிசாவும் சாதனைப் படைத்துள்ளார்.
இவர் கடந்த 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இவர் தற்போது ரியோ ஒலிம்பிக்கிலும் இதே பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 42:15 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். இதன்மூலம் 52 வருட கால ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.
அல்ஜீரியா வீரர் ஒரு நிமிடம் 42:61 வினாடிகள் கடந்து 2-வது இடம் பிடித்தார். இது அந்நாட்டின் தேசிய சாதனையாகும். அமெரிக்க வீரர் கிளெய்டன் மர்பி ஒரு நிமிடம் 42:93 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இது அவருடைய தனிப்பட்ட சிறந்த ஓட்டமாகும்.
இதற்கு முன் நியூசிலாந்து வீரர் பீட்டர் ஸ்னெல் 1964-ம் ஆண்டு தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக்கில் 800 மீ்ட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதை கென்யா வீரர் முறியடித்துள்ளார்.

உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு முறையீடு செய்துள்ளதால் நர்சிங் யாதவ் ரியோவில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் (வயது 26) டெல்லி காமன்வெல்த் (2010) போட்டியில் தங்கமும், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலமும் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கிலோ) வெண்கலம் வென்று ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்.
கடந்த ஜூன் 25-ல் இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தடைசெய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது 'ஏ, பி' என இரு மாதிரிகளிலும் உறுதியானது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் நர்சிங் யாதவ் கலந்து கொள்வது கேள்விக்குறியானது. இதனால் அவருக்குப் பதிலாக பிரவீண் ராணா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே தேசிய ஊக்கமருந்து சோதனை அமைப்பின் ஆணையம் நர்சிங் யாதவ் பிரச்சனை குறித்து விசாரணை நடத்தியது. அப்போது, தனக்கு தெரியாமல் உணவில் ஊக்கமருந்தை கலந்து விட்டதாகவும், இது தனக்கு எதிராக நடந்த சதி என்றும் நரசிங் யாதவ் குற்றம்சாட்டினார். மேலும், ஆணையம் முன் ஆஜராகி 600 பக்க விளக்கத்தையும் சமர்ப்பித்தார். மொத்தம் மூன்றரை மணி நேரம், மூடப்பட்ட அறையில் விசாரணை நடந்தது. தங்களது தரப்பு வாதங்களுக்குரிய ஆதாரங்களை எடுத்துக் கூறினர்.
விசாரணை முடிவில் ‘‘நரசிங் யாதவ் ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம். நரசிங் மீது எந்த தவறும் இல்லை. விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்துள்ளது. அவர் தெரியாமலேயே இதை பயன்படுத்தியுள்ளார்’’ என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் ரியோ போட்டியில் கலந்து கொள்வதற்கு பிரேசில் சென்ற நர்சிங் யாதவ், நாளைமறுநாள் தனது முதல் போட்டிக்காக ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) நர்சிங் யாதவிற்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை எதிர்த்து முறையீடு செய்துள்ளது. இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள நர்சிங் யாதவிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, ரியோவில் நாளைமறுநாள் நர்சிங் யாதவ் போட்டியில் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
நர்சிங் யாதவ் கலந்து கொள்ளவில்லை எனில், பிரவீண் ராணா கலந்து கொள்வாரா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.

ரியோ ஒலிம்பிக்கில் இன்று கிரேக்கோ - ரோமன் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ஹர்தீப் சிங் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகள் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. மல்யுத்தத்தின் கிரேக்கோ - ரோமன் பிரிவில் இந்தியாவின் ஹர்தீப் சிங் 93 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துருக்கியின் செங் இடம் வீரருடன் மோதினார்.
மூன்று சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு சுற்றிலும் துருக்கி வீரரின் கையே ஓங்கியிருந்தது. இதனால் முதல் இரண்டு சுற்றிலும் வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றார். கடைசி சுற்று இந்திய வீரர் ஹர்தீப் சிங் கைப்பற்றினார். இதனால் 1-2 என ஹர்தீப் சிங் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

ரியோ ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தென்ஆப்பிரிக்காவின் வேட் வான் நிகெர்க் புதிய உலக சாதனை படைத்தார். அவரை 300 மீட்டர் ஓட்டத்தில் தன்னுடன் ஓடத் தயாரா? என்று போல்ட் சவால் விட்டுள்ளார்.
நேற்று காலை நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை புரிந்தார். அவர் பந்தய தூரத்தை 43.03 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சன் 43.18 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால 400 மீட்டர் உலக சாதனையை இன்று நிகெர்க் முறியடித்தார்.
இவரை 100 மீட்டர் ஓட்டத்தின் முடிசூடா மன்னான உசைன் போல்ட் சவாலுக்கு அழைத்துள்ளார். மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டத்தில் தங்க பதக்கம் வாங்கிய உசைன் போல்ட், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் மூன்று தங்க பதக்கம் வாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவர் எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை. அரையிறுதியில் ஓடியதை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளவேண்டியதாயிற்று. தங்கம் வாங்கியதைத் தவிர உலக சாதனை, ஒலிம்பிக் சாதனை என்ற ஏதும் படைக்க முடியாமல் போனது.
அதேசமயத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஜான்சன் சாதனையை தென்ஆப்பிரிக்கா வீரர் வேட் வான் நிகெர்க் புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். இவரது பெயரே ஓங்கி ஒலிப்பதால், இருவரும் 300 மீட்டர் ஓட்டத்தில் ஓடி யார் சிறந்த வீரர் என்று பார்ப்போமா? என்று போல்ட் சவால் விட்டுள்ளார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘அரிதாக நடக்கும் 300 மீட்டர் ஓட்டத்தில் என்னுடன் ஓட வேட் வான் நிகெர்கிற்கு நான் சவால் விடுகிறேன். அது உண்மையிலேயே சிறந்த ஓட்டமாக இருக்கும்’’ என்றார்.
மைக்கேல் ஜான்சன் 300 மீட்டரை 30.85 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்துள்ளார். போல்ட் 30.97 வினாடிகளிலும், வான் 31.03 வினாடிகளிலும் கடந்துள்ளனர்.

பெண்களுக்கான 400 மீ்ட்டர் ஓட்டப் பந்தயத்தில் பனமா வீராங்கனை ‘டைவ்’ அடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (நேற்று) பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தங்க மங்கை அல்லிசன் பெலிக்ஸ், பனாமா வீராங்கனை ஷயுனேயி மில்லர் உள்பட 8 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டி தொடங்கியதும் அமெரிக்காவின் அல்லிசன் பெலிக்ஸ், ஷயுனேயி மில்லர் ஆகியோர் சிட்டாக பறந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஓடினார்கள்.
ஒரு கட்டத்தில் பனாமா வீராங்கனை முன்னணி வகித்தார். அதன்பின் அமெரிக்க வீராங்கனை பனாமா வீராங்கனையை நெருங்கினார். இருவரும் பந்தய தூரத்திற்கான இலக்கை ஒரே அளவில் நோக்கி வந்தனர். அப்போது அமெரிக்க வீராங்கனை பந்தய தூரத்தில் கால் வைக்கவும், பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்து தனது கையால் பந்தய தூரத்தை தொட்டார்.
இதனால் பனமா மங்கை 0.07 வினாடி வித்தியாசத்தில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பனாமா வீராங்கனை பந்தய தூரத்தை 49.44 வினாடிகளிலும், அமெரிக்க வீராங்கனை 49.51 வினாடிகளிலும் கடந்தனர்.
பனாமா வீராங்கனை ‘டைவ்’ அடித்ததால் பெலிக்ஸின் ஐந்தாவது தங்கப் பதக்கம் பறிபோனது.

100 மீட்டர் ஓட்டத்திற்கான இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதி போட்டி ஆகியவற்றிற்கான இடைவெளி மிகவும் குறைவாக இருந்தது என்று உசைன் போல்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. உலக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 100 மீட்டர் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார்.
ஏற்கனவே 9.58 வினாடிகள் கடந்து சாதனைப் படைத்துள்ளவர் போல்ட். இதுதான் இதுவரை உலக சாதனையாக இருக்கிறது. பிரேசில் ஒலிம்பிக்தான் தனது கடைசி ஒலிம்பிக் தொடராக இருக்கலாம் என்று போல்ட் குறிப்பிட்டு வருகிறார். இதனால் முடிந்த அளவு சிறந்த ஓட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். ஆனால், போட்டியின் அட்டவணை அதற்கு தகுந்த வகையில் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அரையிறுதி போட்டி முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிப் போட்டி தொடங்கப்பட்டு விட்டது. இதனால் சரியான வேகத்தில் தன்னால் ஓட முடியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். அரையிறுதியில் 9.86 வினாடிகளில் கடந்த அவர், இறுதிப் போட்டியில் 9.81 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘யார் இந்த அட்டவணையை முடிவு செய்தது என்று எனக்கு தெரியவில்லை. இது உண்மையிலேயே முட்டாள் தனம். இதனால்தான் ஓட்டம் மெதுவாக இருந்தது. ஒரு போட்டியில் ஓடி முடித்துவிட்டு உடனடியாக அடுத்த போட்டிக்கு தயார் ஆனதால் மீண்டும் அங்கே வேகமாக ஓட வழியில்லாமல் போனது.
பயிற்சி எடுத்துக் கொள்ளும் இடத்திலேயே நான் முதன்முறையாக ஜாக்கிங் செய்து இறுதிப் போட்டிக்கு தயார் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தகுதிச் சுற்றைவிட அரையிறுதி சிறப்பாக அமைந்தது’’ என்றார்.
இறுதிப் போட்டியில் சுமார் 70 மீட்டர் வரை உசைன் போல்ட் பின்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் சிறப்பாக செயல்பட்டு 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.

ஜெர்மனி நாட்டின் கனோய் அணியின் பயிற்சியாளர் கார் விபத்தில் பலியானார். மற்றொருவர் காயத்துடன் உயிர்தப்பினார்.
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் படகு போட்டியின் நீர்ச்சறுக்கு (canoe slalom) பிரிவில் ஜெர்மனி அணி இடம்பிடித்துள்ளது. இந்த அணிக்கு பயிற்சியாளராக ஸ்டீபன் ஹென்சா உள்ளார். இவரும் அணியுடன் ரியோ சென்றிருந்தார்.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது சக பயிற்சியாளர் கிறிஸ்டியன் கயாடிங் உடன் இணைந்து காரில் ரியோ ஒலிம்பிக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஸ்டீபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிறிஸ்டியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த ஸ்டீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார் என்று ஜெர்மன் அணி நேற்று தெரிவித்துள்ளது.
‘‘ஸ்டீபன் மரணம் அடைந்த இந்நாள் முடிவில்லா சோகத்தை ஏற்படுத்திய நாள்’’ என்று ஜெர்மன் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு தலைவர் அல்போன்ஸ் கோயர்மான் அறிக்கை விடுத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகளத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பெருமை சேர்த்த தீபா கர்மாகர் மற்றும் லலிதா பாபருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ‘வால்ட்’ பிரிவில் தகுதி சுற்றில் 8-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதுடன், புதிய வரலாறும் படைத்தார்.
தீபா கர்மாகர் பதக்கம் வெல்லாவிட்டாலும் உடல் திறமைக்கும், மன உறுதிக்கும் கடும் சோதனையாக விளங்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தார். தீபா கர்மாகர் வெளிநாடுகளில் பயிற்சி எதுவும் பெறாமலே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மங்கையாக கருதப்படும் தீபா கர்மாகர் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டில் நடந்த உலக போட்டியில் 5-வது இடமும் பிடித்து இருந்தார்.
துரதிருஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-வது இடம்பெற்று நூலிழையளவில் பதக்க வாய்ப்பை இழந்தார். பதக்கத்தை இழந்தாலும் 120 கோடி இந்திய மக்களின் நன்மதிப்பை இழக்கவில்லை. தீபாவின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதுடன், தன்னம்பிக்கையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திரர் சேவாக், இந்திய அரசு திபா கர்மாகருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ஒலிம்பிக்கில் முத்திரை பதித்த தீபா கர்மாகர், லலிதா பாபர் ஆகியோரை கவுரவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தடகளத்தில் 36 ஆண்டுக்களுக்குப் பிறகு பாபர் லலிதா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அனிட்டா விலோடர்ரைக் 82.29 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். அவரது முந்தைய சாதனை 81.08 மீட்டராக இருந்தது.
அனிட்டா விலோடர்ரைக் மட்டும் தான் உலக அளவில் 80 மீட்டருக்கும் அதிகமான தூரம் எறிந்துள்ளார். இந்த சாதனை மூலம் பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் சிறந்த வீரர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.
இவர் கடந்த 2009 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார். 2012-ம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே அவருக்கு கிடைத்தது.
சீனாவை சேர்ந்த ஜங் 76.75 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் தட்டிச் சென்றார். அதேபோல், இங்கிலாந்து வீராங்கனை ஹிட்சான் 74.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.