என் மலர்
செய்திகள்

ரியோ ஒலிம்பிக்: பேட்மிண்டனில் கிதாம்பி ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு தகுதி
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் ‘எச்’ பிரிவில் இடம்பிடித்திருந்தார். இந்த பிரிவில் அவருடன் இடம்பிடித்திருந்த இருவரையும் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த ஜான் ஜொர்கென்சனை எதிர்கொண்டார்.
முதல் செட் மிகவும் கடுமையான சென்றது. இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். ஒரு கட்டத்தில் டென்மார்க் வீரர் 17-14 என முன்னிலையில் இருந்தார். பின்னர் ஸ்ரீகாந்த் சிறப்பாக விளையாடி 17-17 என சமநிலை பெற்றார். அதன்பின் 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டும் கடுமையாகத்தான் சென்றது. ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த் 8-4 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 19-17 என முன்னிலையில் இருந்தார். இந்த இரண்டு புள்ளிகள் வித்தியாசத்துடன் 2-வது செட்டையும் 21-19 எனக் கைப்பற்றினார்.
இதன்மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீனாவின் டான் லின்-ஐ எதிர்கொள்கிறார்.

Next Story