என் மலர்
செய்திகள்

இந்திய ஆக்கி அணியின் தோல்விக்கு காரணம் என்ன?: பயிற்சியாளர் ஒல்ட்மான்ஸ் விளக்கம்
இந்திய ஆக்கி அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை பற்றி பயிற்சியாளர் ஒல்ட்மான்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரியோ டி ஜெனீரோ :
ரியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியில் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்ததுடன், பதக்க வாய்ப்பில் இருந்தும் வெளியேறியது.
இந்திய அணியின் தோல்வி குறித்து தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஒல்ட்மான்ஸ் அளித்த பேட்டியில், ‘நமது அணியை விட பெல்ஜியம் அணியின் ஆட்ட திறன் மேம்பட்டு காணப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆடிய தரமான ஆட்டத்தை நமது அணி இந்த போட்டி தொடரில் வெளிப்படுத்தவில்லை.
நமது அணி வீரர்களுக்கு அதிக அழுத்தமும், நெருக்கடியும் இருந்தது. தொடக்கத்தில் நாம் முன்னிலை வகித்தாலும், அந்த சாதகத்தை நம்மிடம் இருந்து பெல்ஜியம் அணி தட்டிப்பறித்து விட்டது. பெல்ஜியம் வெற்றிக்கு தகுதி படைத்த அணியாகும். நமது அணியில் இளம் மற்றும் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெற அனுபவம் அவசியமானதாகும். கால் இறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளித்தாலும், அதனை விட இன்னும் முன்னேறும் திறமை நமது அணிக்கு உள்ளது. கால் இறுதியில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது.
வாழ்வா? சாவா? போன்ற ஆட்டங்களில் இன்னும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். நமது அணி அதிக நெருக்கடிக்கு ஆளானது. எதிரணிக்கு நெருக்கடி அளிக்க தவறி விட்டோம். நமது அணியின் ஆட்ட திறன் போதுமான அளவில் வெளிப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Next Story