என் மலர்tooltip icon

    இந்தியா

    Video: ரீல்ஸ்காக ஜீப்பின் மீது மண்ணை நிரப்பி, சாலையில் ஓட்டிய இளைஞர் - வாகன ஓட்டிகள் அவதி
    X

    Video: ரீல்ஸ்காக ஜீப்பின் மீது மண்ணை நிரப்பி, சாலையில் ஓட்டிய இளைஞர் - வாகன ஓட்டிகள் அவதி

    • ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பியுள்ளார்.
    • ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி நெடுஞ்சாலையில் ஓட்டியுள்ளார். ஜீப்பின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மீது மண் விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மீரட் நகரில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி அதை விடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் அந்த ஜீப்பை சாலையை ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார். ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×