புதுச்சேரியில் 50 வயதை கடந்த மீனவர்களுக்கு ஓய்வூதியம்

50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 50 வயதை கடந்த மீனவர்களுக்கு ஓய்வூதியம்
Published on

புதுச்சேரி மாநிலத்தில் 50 வயதை கடந்த விசைப்படகு உரிமையாளர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த ஒரு சில விதிகள் புதுச்சேரி அரசால் திருத்தப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவர்களுக்கு இந்த ஆண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

மேலும் மீன்வளத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவர் இறந்துவிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதே போல் 2025-26-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வீதம் விடுபட்ட 328 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணம் மீனவர்கள் வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com