என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த புதுச்சேரி முதலமைச்சர் - பா.ஜ.க. அதிருப்தி
    X

    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த புதுச்சேரி முதலமைச்சர் - பா.ஜ.க. அதிருப்தி

    • நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
    • முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ரங்கசாமி உள்ளார். அவர் நிதி பொறுப்பையும் வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார்.

    இந்த கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்கும்போதெல்லாம், அப்புறம் சொல்கிறேன் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே கூறி வந்தார்.

    ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை.

    அவர் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் எதுவும் முன்பதிவு செய்யப்படவில்லை. நேற்று அவர் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது பா.ஜ.க. கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×