search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்படுத்தப்பட்ட 2018 டாடா டிகோர் அறிமுக விவரங்கள்
    X

    மேம்படுத்தப்பட்ட 2018 டாடா டிகோர் அறிமுக விவரங்கள்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2018 டாடா டிகோர் காரின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #tatamotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2018 டாடா டிகோர் அக்டோபர் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கிறது. 

    கடந்த சில மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த புதிய டிகோர் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுகமாக இருக்கும் புதிய காரை பிரபலப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் புதிய டிகோர் மாடலின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை நியமித்துள்ளது.

    பல்வேறு புதிய அம்சங்களுடன் உருவாகி இருக்கும் புதிய டிகோர் சிறிய வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் ரித்திக் ரோஷன் இடம்பெற்று இருந்ததும் குறி்ப்பிடத்தக்கது. 2018 டிகோர் மாடலின் முதல் டீசரில் காரில் புதிய எல்.இ.டி. டெயில்லேம்ப் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

    பின் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் இரண்டாவது வீடியோவில் புதிய காரில் டபுள் பேரெல் ஹெட்லேம்ப்கள் ப்ரோஜெக்டர் லைட்கள் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் லைட்கள், ஷார்க்-ஃபின் ஆன்டெனா மற்றும் கிரில் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.



    இத்துடன் காரில் 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேஷ்போர்டில் குறைந்த பட்டன்களே வழங்கப்பட்டுள்ளன.

    2018 டிகோர் மாடல் பல்வேறு புதிய நிறங்களில் வெளியாகும் என்றும் புதிய அலாய் வீல்கள் மற்றும் தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான பிரீமியம் அம்சங்கள் டாப்-ரேன்ஜ் XZ (0) கிரேடு மாடலில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய டிகோர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என்றும் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது 69 பி.ஹெச்.பி. பவர் வழங்கும். இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் பெட்ரோல் இன்ஜின் AMT யூனிட் கொண்டிருக்கிறது.


    Next Story
    ×