என் மலர்tooltip icon

    இந்தியா

    மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் மு.க.ஸ்டாலின் - மீண்டும் சீண்டிய யோகி ஆதித்யநாத்!
    X

    மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்யும் மு.க.ஸ்டாலின் - மீண்டும் சீண்டிய யோகி ஆதித்யநாத்!

    • உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம்
    • வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

    தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் விமர்சித்துள்ளார்.

    சமீபத்தில் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்த நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    அவர் கூறியதாவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

    உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன"

    முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×