VIDEO: நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்

குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார்.
VIDEO: நாய்க்கு பயந்து 180 மீட்டர் தூரத்துக்கு ஓலா பைக் முன்பதிவு செய்த பெண்
Published on: 

தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய தனியார் பைக் டாக்சி சேவைகள் வந்துவிட்டது. குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார். அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த பெண் அருகில் தான் எனக்கூறி இடத்தை சொல்கிறார். உடனே ஓலா பைக் டிரைவர் மேப்பில் அந்த இடத்தை பார்த்த போது, இந்த இடம் மிகவும் அருகில் தான் உள்ளது. அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள்? என கேட்கிறார். அதற்கு அந்த பெண், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு பயந்து தான் ஓலா புக் செய்ததாக கூறுகிறார். இதைக்கேட்ட டிரைவர் சிரிப்பது போல் காட்சிகள் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com