search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வந்தால் பிரதமரை வரவேற்போம்- காங்கிரஸ்
    X
    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா

    நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வந்தால் பிரதமரை வரவேற்போம்- காங்கிரஸ்

    • ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
    • பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே பிரதமரின் முதன்மையான பொறுப்பு.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பின்னர் நாடு திரும்பிய அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து

    இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெளிநாடு சென்று திரும்பிய மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பவன் கேரா கூறியதாவது:-

    நாங்களும் அவருக்கு (பிரதமருக்கு) பெரும் வரவேற்பை வழங்குவோம். ஆனால் மற்ற மோடிகள் மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே இந்த வரவேற்பு இருக்கும். லலித் மோடி அல்லது நிரவ் மோடியை அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தால் டெல்லி விமான நிலையத்தில் நின்று பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்போம்.

    பிரதமர் நாடு திரும்பிய இரண்டு மணி நேரத்திற்குள், ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தது.

    இதுதான் பிரதமரின் சாதனையா? இந்த செய்தி வரும்போது அவர் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு கூட வந்திருக்க மாட்டார். இந்திய பிரதமர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் இந்தியாவின் பிரதிநிதியாக செல்கிறார். என்னதான் அவருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும், பெரிய நிகழ்ச்சிகளை நடத்தினாலும் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதே அவரது முதன்மையான பொறுப்பு.

    ஐந்து இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும்போது இது தொடர்பான ஆலோசனை எப்போது நடக்கும்? நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் மாணவர்கள் தடைசெய்யப்பட்டால், ராஜதந்திரத்தில் இது மிகவும் கசப்பான பதிலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×