என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு
    X

    கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    • கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது.
    • இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.

    மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக எதிர்மறையான நிலையை எடுத்து வருகிறது. தென்மாநிலமான கேரளாவை அழிக்க விரும்புகிறது என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

    பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப். அரசு 4ஆம் கொண்டாட்ட விழாவில் பேசும்போது பினராயி விஜயன் கூறியதாவது:-

    கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது. இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு மத்திய அரசு எந்தவிதமாக உதவியும் செய்யவில்லை.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவிற்கு எதிராக முற்றிலும் எதிர்மறையான நிலையை எடுத்தது. மற்ற இடத்தில் இருந்து தருவதாக சொன்ன உதவிகளைக் கூட அவர்களுடைய அதிகாரத்தால் தடுத்தது நிறுத்த முயற்சித்தனர்.

    கேரளா நொறுங்கட்டும், இன்னும் நொறுங்ககட்டும் என நினைத்தனர். அழிவு மனப்பான்மையுடன் மத்திய அரசு வழி நடத்தப்பட்டது.

    பல வருடத்திற்கு முன் கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து கேரளா எப்படி மீளப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் நினைத்தது. இயற்கை சீற்றத்தில் இருந்து மாநிலம் தப்பியது பற்றி நாடும், உலகமும் மகிழ்ச்சி அடைந்தன.

    எப்படி நம்மால் தப்பிக்க முடிந்தது?. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் அதன் மக்ககள். கடினமான நேரங்கள் மற்றும் சவால்களில் இருந்து தப்பிக்க ஒற்றுமை மற்றும் மக்கள் வலிமையாக இருந்தனர். கேரளாவின் அழிவதை மத்திய அரசு விரும்பி, அதற்காக எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் கேரளா நொறுங்கி போகவில்லை.

    இவ்வாறு பினராயி விஜயன் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    Next Story
    ×