என் மலர்tooltip icon

    இந்தியா

    உனக்கென்னப்பா ஜாலியா இருக்க.. வைரலாகும் பனிச்சிறுத்தைகளின் கியூட் வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    உனக்கென்னப்பா ஜாலியா இருக்க.. வைரலாகும் பனிச்சிறுத்தைகளின் கியூட் வீடியோ

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இன்றைய சமூகத்தில் நவநாகரிகம் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக தினந்தோறும் பணத்திற்காக அல்லப்படும் நிலையே ஏற்படுகிறது. இதனால் அந்தந்த வயதுக்கு ஏற்ற மகிழ்ச்சி பலருக்கும் கிடைப்பதில்லை. அந்த ஏக்கம் பலருக்கும் உள்ளது.

    அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்க்கும்போது, நாமும் அந்த விலங்குகளை போல் பிறந்திருக்கலாமோ... என்று எண்ண வைக்கும் அளவிற்கு உள்ளது.

    "மலைகளின் பேய்" என்றும் அழைக்கப்படும், பனிச்சிறுத்தைகள் இமயமலையின் பனி சிகரங்களில் வாழ்கின்றன. சமீபத்தில், ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு, லடாக்கின் பனியால் மூடப்பட்ட ஜான்ஸ்கர் பகுதியில் இரண்டு பனிச்சிறுத்தைகள் ஆனந்தமாக விளையாடும் வீடியோவை பகிர்ந்தார்.

    அந்த வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களை கவர்ந்துள்ளது. பனிப்படர்ந்த ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் 2 சிறுத்தைகள் ஓடுவதையும், குதித்து விளையாடுவதையும் காணமுடிகிறது. எதைப் பற்றியும் கவலையின்றி விளையாடும் 2 சிறுத்தைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தியாவில், பனிச்சிறுத்தைகள் ஜம்மு- காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அதிகம் காணப்படுகின்றன. கணக்கெடுப்பின் படி மேற்கு இமயமலையில் குறைந்தது 718 பனிச்சிறுத்தைகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.



    Next Story
    ×