என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ஆம்புலன்சுக்கு காசில்லை.. 17 வயது மகளின் உடலை 14 கி.மீ. தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தந்தை
    X

    VIDEO: ஆம்புலன்சுக்கு காசில்லை.. 17 வயது மகளின் உடலை 14 கி.மீ. தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தந்தை

    • மனநல பாதிப்புடன் இருந்த ஆஷா தற்கொலை செய்து கொண்டார்.
    • அரசின் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாது என்று கூறப்பட்டது.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தினக்கூலித் தொழிலாளியாக இருப்பவர் மது பிந்தானி. பழங்குடியினரான இவர், உயிரிழந்த தனது 17 வயது மகளான ஆஷா பிந்தானியின் உடலை, ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால், பிரேத பரிசோதனைக்காக சுமார் 7 கி.மீ தூரத்திற்கு தள்ளுவண்டியில் எடுத்துச் சென்றுள்ளார்.

    மனநல பாதிப்புடன் இருந்த ஆஷா, வியாழக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்காக உடலை பாலியபால் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    தனியார் சேவை ஆம்புலன்ஸ் ஒன்று உடலை ஏற்றிச் செல்ல ரூ.1,200 கேட்டது. அரசின் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாது என்று கூறப்பட்டது.

    பணம் இல்லாததால், மது உள்ளூர் மக்களிடம் உதவி கோரினார், ஆனால் யாரும் உதவவில்லை.

    பின்னர், ஒரு ஆட்டோ ஓட்டுநர் முன்வந்து தனது தள்ளுவண்டியை பயன்படுத்த கொடுத்தார். மது தனது மகளின் உடலை அந்த தள்ளுவண்டியில் கொண்டு சென்றார். பிரேத பரிசோதனை முடிந்ததும், அதே வண்டியில் உடலை இறுதி சடங்குகளுக்காக மீண்டும் 7 கி.மீ பயணித்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

    மகளின் உடலை தந்தை தள்ளுவண்டியில் கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×