என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    கர்நாடகாவில் ஓடும் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.
    • போலீசார் அவரை கைது செய்து சித்தாபூர் சிறையில் அடைத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடி சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. டெல்லியில் இருந்து வாடி ரெயில் நிலையம் வழியாக பெங்களூருவுக்கு வரும் கர்நாடக எக்ஸ்பிரஸ் (கே.கே) ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் வாடி நிலையத்தில் ரெயிலை நிறுத்தி, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் சுமார் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். ரெயிலின் 22 பெட்டிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இறக்கிவிடப்பட்டு, முழு பெட்டிகளும் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது ஒரு புரளி அழைப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் பயணிகள் நிம்மதியடை ந்தனர்.

    விசாரணையில் அதே ரெயிலில் டெல்லியிலிருந்து குண்டக்கல்லுக்கு பயணம் செய்து கொண்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீப் சிங் (வயது 33) என்பவர் தனது தந்தையின் செல்போன் எண்ணிலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்ப ட்டது. அவர் தனது தந்தையுடன் இருந்த கோபத்தில் இப்படி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சித்தாபூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×