என் மலர்
இந்தியா

விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழல்- குஜராத்திற்கு பயணித்த நபர் பகிர்ந்த வீடியோ வைரல்
- இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே விமானத்தில்தான் டெல்லியில் இருந்து 2 மணி நேரத்துக்கு முன்பாக அகமதாபாத் வந்தேன். விமானத்தில் இருந்தபோது ஏதோ தவறாக நிகழ்வதை உணர்ந்தேன்.
இந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் இருந்ததைக் கவனித்தேன். விமானத்தில் இருந்த டிவி டிஸ்பிளே உள்ளிட்ட எதுவும் முறையாக வேலை செய்யவில்லை.
கேபின் குழுவை அழைக்கும் பொத்தான், விளக்கு பொத்தான்களும் வேலை செய்யவில்லை.
இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன்" என்றார்.






