என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுத்தைகள் மக்களை தாக்குவதை தடுக்க ஆடுகளை காடுகளில் விட வேண்டும் - மகா. அமைச்சர் தீர்மானம்
    X

    சிறுத்தைகள் மக்களை தாக்குவதை தடுக்க 'ஆடு'களை காடுகளில் விட வேண்டும் - மகா. அமைச்சர் தீர்மானம்

    • சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
    • றுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் உணவுக்காக மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க, அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை காடுகளில் விட வேண்டும் என்று மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவில் சிறுத்தைகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவரின் தேசியவாத எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ஜிதேந்திரா சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    சட்டமன்றத்தில் பேசிய அவர், அஹல்யா நகர், புனே மற்றும் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தை தாக்குதல்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

    சிறுத்தைகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை மாறிவிட்டன. முன்பு, அவை வன விலங்குகள் என்று விவரிக்கப்பட்டன, ஆனால் இப்போது கரும்புத் தோட்டங்களும் அவற்றின் வாழ்விடமாக மாறிவிட்டன.

    சிறுத்தை தாக்குதல்களில் மக்கள் இறந்த பிறகு மிகப்பெரிய தொகையை இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக சிறுத்தைகள் மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதைத் தடுக்க ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகளை காட்டில் விட வேண்டும்.

    சிறுத்தைகள் ஆபத்தான பகுதிகளில் இந்த முடிவை விரைவில் செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×