என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி
    X

    மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி

    • எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
    • தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.

    Next Story
    ×