search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிஜ் பூஷன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை-  அவரது மகனுக்கு சீட் கொடுத்தது பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து
    X

    'பிரிஜ் பூஷன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை'- அவரது மகனுக்கு சீட் கொடுத்தது பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து

    • உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார்
    • ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

    உத்தரப் பிரதேசத்தின் கைசர்கஞ்ச் தொகுதியில் 2009 ஆம் ஆண்டிலிருந்து ப்ரஜ்பூஷன் சிங் எம்.பியாக உள்ளார். கடைசியாக நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தலில், பிரிஜ் பூஷன் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கைசர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், சிட்டிங் பாஜக எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங்கை உத்தரப் பிரதேசத்தின் கைசர்காஞ் தொகுதியின் வேட்பாளராக பாஜக. அறிவித்துள்ளது.

    ப்ரஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தான் ப்ரஜ்பூஷன் சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

    பிரிஜ் பூஷனுக்கு ஏன் பாஜகவில் சீட் கொடுக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரத்தில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தால் நீங்கள் இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கலாம்.

    "எத்தனை பேரின் பெற்றோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் வாய்ப்பு தருகின்றது. குற்றம் செய்து தண்டனை பெற்றவர்களின் பிள்ளைகள் கூட சீட் பெறுகிறார்கள். இங்கு பிரிஜ் பூஷனுக்கு எதிராக இதுவரை எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர் மகனுக்கு பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×