என் மலர்
இந்தியா

VIDEO: கேரளாவில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டெம்போ வாகனம்
- இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் முல்லை பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அவ்வ்கையில் கேரளாவின் இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக அதிகரித்தது. இதனையடுத்து முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது கூட்டார் நகரத்தின் அருகே ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக டெம்போ வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆற்றில் டெம்போ வாகனம் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






