search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசும், பி.ஆர்.எஸ்.சும் ஊழலில் திளைத்த கட்சிகள்: கிஷன் ரெட்டி தாக்கு
    X

    காங்கிரசும், பி.ஆர்.எஸ்.சும் ஊழலில் திளைத்த கட்சிகள்: கிஷன் ரெட்டி தாக்கு

    • ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரசில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
    • காங்கிரசும், பி.ஆர்.எஸ்சும் ஒன்றுதான். இரண்டும் ஊழல் கட்சிகள் என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சர்மிளா காங்கிரசில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரான கிஷன் ரெட்டி கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், பி.ஆர்.எஸ் கட்சியும் ஒன்றுதான். இரு கட்சிக்கும் ஒரே டி.என்.ஏ உள்ளது. இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது காளேஸ்வரம் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்தது.

    இன்று காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதே கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அப்படி கடிதம் எழுதினால், 48 மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு எங்கள் அரசு உத்தரவிடும் என உத்தரவாதம் அளிக்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×