search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி

    • ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம்.
    • அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவு ஏன்?" என்று பேசினார்.

    இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஸ்குமார் சூரத் கோர்ட்டில் ராகுல் மீது வழக்கு தொடர்ந்தார்.

    சூரத் கோர்ட்டில் அந்த வழக்கு 4 ஆண்டுகள் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை உருவானது. இது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    2 ஆண்டு தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு கடந்த மாதம் 7-ந்தேதி தீர்ப்பு அளித்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரிதான். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் பொது வெளியில் இது போன்ற கருத்து தெரிவிக்க கூடாது என்று ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் கூறி இருந்தது.

    குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூலை 21-ந்தேதி நடைபெற்றது. ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எனது பேச்சில் எந்த தவறும் இல்லை. எனவே தண்டனையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பு உருவானது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்ற செயலாளரிடம் ஒப்படைத்தனர். ராகுல் காந்தி எம்.பி. எந்த வேகத்தில் பறிக்கப்பட்டதே அதே வேகத்தில் திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக பாராளுமன்ற சபநாயகர் ஓம்பிர்லா மற்றும் செயலக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். சட்ட அமைச்கத்திடமும் ஆலோசனை பெறப்பட்டது.

    அதன்படி இன்று காலை பாராளுமன்ற செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன் மூலம் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாகி இருக்கிறார். அவரது வயநாடு தொகுதி காலியிடம் என்பதும் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேர்தலில் போட்டியிட இருந்த தடையும் ராகுலுக்கு விலகி உள்ளது.

    மீண்டும் எம்.பி.யானதால் ராகுல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்கிறார். நாளை தொடங்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    இது காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளிடம் மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×