என் மலர்
இந்தியா

பொன்முடி வழக்கு- 18ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
- சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
- வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Next Story






