search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிவமொக்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
    X

    சிவமொக்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

    • கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில், 25-ல் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில், 25-ல் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26-ந்தேதி பெங்களூர் உள்பட 14 தொகுதிகளுக்கும், மே மாதம் 7-ந் தேதி பெலகாவி, சிவமொக்கா, கலபுரகி உள்பட 14 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் 28 தொகுதிகளில், 20 தொகுதிகளுக்கு பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பா.ஜனதா இன்னும் 5 தொகுதிகளுக்கும், கூட்டணி கட்சியான ஜனதாதளம் (எஸ்) 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியது உள்ளது. அதுபோல் ஆளும் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில், 25-ல் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, பா.ஜனதா தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கலபுரகி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். கலபுரகியில் நடைபெற்றிருந்த பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதுடன், 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 'ரோடு ஷோ'வும் நடத்தினார். பிரதமர் மோடிக்கு பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து இருந்தார்கள்.

    தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 2-வது முறையாக இன்று கர்நாடகத்திற்கு வருகை தர உள்ளார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் அல்லமபிரபு மைதானத்தில் இன்று மதியம் 1 மணியளவில் பா.ஜனதாவின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகிறார்.


    இந்த கூட்டத்தில் சிவமொக்கா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திரா, தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்ட உள்ளார். சிவமொக்கா மாவட்டம் பா.ஜனதா மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் சொந்த ஊர் ஆகும்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து உற்சாகமாக தொண்டர்கள், பொதுமக்கள் அல்லாமபிரபு மைதானத்துத்தின் திரண்டுள்ளனர். இதனால் மைதானம் முழுவதும் களை கட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி புளுடூத் கருவிகள், வாட்டர் பாட்டில், பேனா உள்ளிட்ட பொருட்கள் மைதானத்துக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்கு பிறகே அவர்கள் மேடை அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மைதானம் முழுவதும் கட்சி கொடி தோரணங்களால் ஜொலிக்கிறது. ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் மைதானத்துக்குள் திரண்டுள்ளதால் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது போல் காட்சி அளிக்கிறது. மைதானத்தை சுற்றிலும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி வரும் சோகனே விமான நிலையத்தில் இருந்து மண்டேகொப்ப சந்தேகடூர், வட்டின கொப்ப ஜோதிநகர், என்.ஆர்.புரா மற்றும் மைதானம் வரை வரை வழிநெடுகிலும் வரிசையாக போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×