என் மலர்tooltip icon

    இந்தியா

    தூக்க மாத்திரை கொடுத்து 2 சிறுமிகள் கொலை: தந்தை தற்கொலை
    X

    தூக்க மாத்திரை கொடுத்து 2 சிறுமிகள் கொலை: தந்தை தற்கொலை

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த் 2 மகள்களை கொன்று அவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பாயில் பள்ளி, பவானி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மகள்கள் சிரவந்தி (8), சிரவைய்யா (6).

    நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீகாந்த் குளிர்பானத்தில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து தனது 2 மகள்களுக்கும் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர்.

    பின்னர் ஸ்ரீகாந்த் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது ஸ்ரீகாந்த் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்து அறையில் அவரது 2 மகள்களும் இறந்து கிடந்தனர்.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த் 2 மகள்களை கொன்று அவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×