search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி அவசர சட்டம்- ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு
    X

    டெல்லி அவசர சட்டம்- ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு

    • காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
    • ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    அவசர சட்டம் விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறிதது கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவு அளிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்திருந்தார். எதிர்க்கட்சிக்களின் 2-வது கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் நடக்கிறது.

    இந்த நிலையில் டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதை மறைமுகமாக தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் மீது பாரதிய ஜனதா அரசு மேற் கொள்ளும் தாக்குதலை காங்கிரஸ் எப்போதும் எதிர்த்துள்ளது. நேரடியாகவோ அல்லது கவர்னர்கள் மூலமாகவோ இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் இதை எதிர்த்துள்ளது. தொடர்ந்து எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×