search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது வயிற்றில் எட்டி உதைத்தார் பிபவ் குமார்: ஸ்வாதி மாலிவால்
    X

    எனது வயிற்றில் எட்டி உதைத்தார் பிபவ் குமார்: ஸ்வாதி மாலிவால்

    • ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.

    இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:

    முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×