என் மலர்tooltip icon

    இந்தியா

    கருக்கலைப்பு செய்யவிடமால் தடுப்பது பெண்ணின்  உடல் மீதான உரிமையைப் பறிப்பதாகும்- உயர்நீதிமன்றம்
    X

    கருக்கலைப்பு செய்யவிடமால் தடுப்பது பெண்ணின் உடல் மீதான உரிமையைப் பறிப்பதாகும்- உயர்நீதிமன்றம்

    • தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
    • சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பிரிந்து வாழும் கணவர் ஒருவர், தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 312-ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

    இது தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரை அதற்காகக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மீதான உரிமையை பறிப்பதாகும்.

    இது பெண்ணை மன ரீதியான பாதிக்கும். மற்றவர்களின் உதவியின்றி குழந்தையைத் தனியாக வளர்க்கும் பொறுப்பு பெண்ணின் மீதே விழுகிறது. சட்டபூர்வமாக செய்யும் கருக்கலைப்பு குற்றமாகாது.

    எனவே, கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு" என தெரிவித்து அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×