என் மலர்
இந்தியா

மகாராஷ்டிராவில் அவலம் - மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டும் டிரைவர்
- மழை பெய்ததன் காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது.
- அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடி பஸ்சை ஓட்டிச் செல்கிறார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது.
பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட வீடியோவில் மழை காரணமாக அரசு பஸ்சில் தண்ணீர் ஒழுகுகிறது. அதில் நனையாமல் இருக்க பஸ் டிரைவர் குடை பிடித்தபடியே ஒரு கையில் பஸ்சை ஓட்டிச் செல்கிறார். மழை நீர் ஒழுகிய பஸ் கட்சிரோலி அகேரி டெப்போவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
இதுபோன்ற மோசமான நிலையில் உள்ள பஸ்கள் இயக்கப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.
Next Story






