என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு ராஜமரியாதை: காங்கிரஸ் விமர்சனம்
    X

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு ராஜமரியாதை: காங்கிரஸ் விமர்சனம்

    • ஊழல், முறைகேடு செய்கிறவர்களுக்கு ராஜமரியாதை வழங்கப்படுகிறது.
    • தலித் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை திட்ட பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. இது தான் இரட்டை என்ஜின் அரசின் செயல்பாடா?. தலித் அமைப்புகள் உள் இடஒதுக்கீடு கேட்டு பெங்களூருவில் போராட்டம் நடத்தின. அந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதன் மூலம் உள் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தகவலை இந்த அரசு வெளிப்படுத்தியுள்ளது.

    ஊழல், முறைகேடு செய்கிறவர்களுக்கு ராஜமரியாதை வழங்கப்படுகிறது. ரவுடிகள், குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கும் இந்த ஆட்சியில் ராஜமரியாதை கிடைக்கிறது. ஆனால் அமைதி வழியில் போராடும் தலித் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். பா.ஜனதாவின் பார்வையில் தலித் மக்கள் குற்ற செயல்களை செய்கிறவர்களை போல் தெரிகிறார்கள்.

    பெங்களூருவில் இரவு ரோந்தில் ஈடுபடும் போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் இரவில் நடந்து சென்ற ஒரு தம்பதியிடம் போலீசார் பணம் வசூலித்து கொள்ளையர்களை போல் நடந்து கொண்டுள்ளனர். இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. பா.ஜனதா அரசின் மோசமான நிலையை அறிய இந்த ஒரே சம்பவம் போதும்.

    தனக்கும், இந்த துறைக்கும் சம்பந்தம் இல்லாதவர் போல் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நடந்து கொள்கிறார். போலீஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுத்து பணி இடமாற்றம் பெறுகிறார்கள். அதனால் அந்த போலீசார் கொள்ளையர்களை போல் நடந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

    Next Story
    ×