என் மலர்tooltip icon

    இந்தியா

    gujarat heavy rain
    X

    குஜராத்திற்கு ரெட் அலர்ட் - கனமழையால் சாலைகளில் வெள்ளம்

    • கனமழையால் நக்த்ரானா - லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • கனமழையால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கட்ச், காந்தி நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கட்ச் பகுதியில் பெய்த கனமழையால் நக்த்ரானா - லக்பத் நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மோர்பி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் டிராக்டர் ட்ராலி யுடன் 7 பேர் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 7 பேரையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

    மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு முதல்வர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.


    Next Story
    ×