search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டி.ராஜா மனைவி களம் இறக்கப்பட்டதால் வயநாடு தொகுதியை கை கழுவும் ராகுல்
    X

    டி.ராஜா மனைவி களம் இறக்கப்பட்டதால் வயநாடு தொகுதியை 'கை' கழுவும் ராகுல்

    • அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொச்சி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அதில் அவருக்கு வயநாடு தொகுதியில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது.

    இந்த தடவையும் அவர் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிராணி ஏராளமான நலத்திட்டங்களை செய்து வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார். இதனால் அமேதியில் மீண்டும் வெற்றி கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் எழுந்து உள்ளது.

    எனவே 2-வது தடவையாக வயநாடு தொகுதியில் களம் இறங்க அவர் நினைத்திருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வயநாடு தொகுதி யில் டி.ராஜாவின் மனைவி அனிராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வயநாடு தொகுதியில் அனிராஜா தீவிர பிரசாரம் செய்யும் பட்சத்தில் அங்கும் ராகுலுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று ராகுல் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தடவையும் ராகுல் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.

    அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இன்னொரு தொகுதி எது என்று ஆலோசித்து வரு கிறார்கள். வயநாடுக்கு பதில் கர்நாடகா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி யில் ராகுலை போட்டியிட வைக்கலாமா? என்றும் ஆலோசனை நடக்கிறது.

    இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது உத்தரபிரதே சத்தில் சரிவு ஏற்பட்ட நிலையில் ஆந்திரா, கர்நாடகாவில் போட்டியிட்டார். அதே போன்று ராகுலும் கர்நாடகாவுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே வயநாடு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. எனவே வயநாடு தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுத்து விட்டு ராகுலை சாதகமான தொகுதிக்கு இட மாற்றம் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    Next Story
    ×