பஞ்சாப்பில் வீடு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைப்பு: ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்

வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.வீட்டு நுகர்வோருக்கு மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப்பில் வீடு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைப்பு: ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்
Published on

பஞ்சாபில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அரசு ஏற்கனவே மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குகிறது.

இந்த நிலையில் வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில மின்சார துறை மந்திரி சஞ்சய் அரோரா கூறும்போது, வீட்டு நுகர்வோருக்கான கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.1.50 குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே வீட்டு நுகர்வோருக்கு மாதத்திற்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மாதத்திற்கு 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தும் குடியிருப்பு நுகர்வோருக்கு, மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1.50 குறைக்கப்பட்டுள்ளது.

வணிக நுகர்வோருக்கான கட்டணம் அவர்களின் சுமை திறனைப் பொறுத்து ஒரு யூனிட்டுக்கு 65 பைசாவில் இருந்து 79 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மின் கட்டணத்தை அரசு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com