என் மலர்tooltip icon

    இந்தியா

    ராணுவத்தால் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என்பது நிரூபணம்!
    X

    ராணுவத்தால் கொல்லப்பட்ட 'பஹல்காம் தாக்குதல்' பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் என்பது நிரூபணம்!

    • ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன.

    ஜூலை 28 அன்று 'ஆபரேஷன் மகாதேவ்'வில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 22 அன்று 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய மூன்று பேர் காஷ்மீரின் டாச்சிகாம்-ஹர்வான் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை எடுத்து ஜூலை 28 நடந்த ஆபரேஷனில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்ட மூத்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பைசல் ஜாட் என்கிற சுலைமான் ஷா, அபு ஹம்சா என்கிற ஆப்கான் மற்றும் யாசிர் என்கிற ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    அவர்களின் பயோமெட்ரிக் விவரங்கள், பாகிஸ்தான் அரசு வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையம் (NADRA), பயோமெட்ரிக் விவரங்கள், லேமினேட் செய்யப்பட்ட வாக்காளர் சீட்டுகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் தொலைபேசி விவரங்கள் மற்றும் GPS இணைப்புகளை பாதுகாப்பு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளது.

    ஷா மற்றும் ஹம்சாவின் உடைமைகளில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. செயற்கைக்கோள் தொலைபேசியின் சேதமடைந்த SD அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளன.

    இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவலகோட்டின் சங்கமங்கா மற்றும் கோயன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது.

    கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. பஹல்காமில் கண்டெடுக்கப்பட்ட கிழிந்த சட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளும் இந்த சந்தேக நபர்களை சுட்டிக்காட்டுகின்றன.

    இவர்கள் கடந்த மே 2022 இல் வடக்கு காஷ்மீரில் உள்ள குரேஸ் துறை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

    பஹல்காம் தாக்குதலுக்கு முந்தைய நாள், ஏப்ரல் 21 அன்று, பைசரனில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹில் பார்க்கில் உள்ள ஒரு குடிசையில் மூவரும் தஞ்சம் புகுந்தனர்.

    அவர்களுக்கு உணவளித்ததற்காக இரண்டு உள்ளூர்வாசிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×