என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறு, குறு தொழில்களே இந்தியாவின் முதுகெலும்பு- திரவுபதி முர்மு
    X

    சிறு, குறு தொழில்களே இந்தியாவின் முதுகெலும்பு- திரவுபதி முர்மு

    • ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சியிலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
    • நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளான இன்று பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஏழைகள் கூட மரியாதையுடன் வாழும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

    * வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறோம்.

    * மிக மிக வறுமையில் இருந்த 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    * அனைத்து திட்டங்களும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவு நிறைவேற்றப்படும்; அனைவருக்குமான வளர்ச்சி என்பதுதான் மத்திய அரசின் தாரக மந்திரம்.

    * நடுத்தர மக்களுக்கு வீட்டு கடனுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    * ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சியிலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.

    * விவசாயிகளுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

    * 80 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * நாட்டின் புதுமைக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முழு பங்காற்றுகின்றன.

    * 8-வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    * தேசிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறை தயாராகி வருகிறது.

    * எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    * நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    * இந்தியா AI மிஷன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    * வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது.

    * விரைவில் இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

    * சிறு, குறு தொழில்களே இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது.

    * 100-வது ராக்கெட்டை ஏவிய இஸ்ரோவுக்கு குடியரசு தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

    * நாட்டை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதே இலக்கு.

    * டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

    * உலகத்திலேயே முதல் முறையாக ரெயில்வே கேபிள் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ளது.

    * ரெயில் பாதை மூலம் கன்னியாகுமரியும் - காஷ்மீரும் இணைக்கப்பட உள்ளது.

    * கேலோ இந்தியா போன்ற போட்டிகள் மூலம் விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * நாடு முழுவதும் சாலை உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    * டெல்லியில் மெட்ரோ கட்டமைப்பின் தூரம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

    * அதிக மெட்ரோ வழித்தடங்கள் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×